நீயாகவே மரியாதையா வெளியேறிவிடு… அது தான் உனக்கு மரியாதை… ஹர்திக் பாண்டியாவை செம்ம டோஸ் விட்ட அம்பானி குடும்பம்…

0
Follow on Google News

நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்பம் முதலே தடுமாறி வருகிறது. ஹர்திக் பாண்டியா கேப்டன்சியிலான மும்பை இந்தியன்ஸ் அணி, இதுவரை எட்டு போட்டிகளில் விளையாடிய நிலையில் மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றி அடைந்துள்ளது. மீதம் ஐந்து போட்டிகளில் தோல்வியடைந்து 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில்  ஏழாவது இடத்தில் உள்ளது.

கடைசியாக 2020இல் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி ஐபிஎல் கோப்பையை வென்றது. அதையடுத்து கடந்த மூன்று வருடங்களாக ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாமல் திணறி வந்தது. இதனால் மும்பை அணி நிர்வாகம் மும்பை அணியின் கேப்டனை மாற்றினால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பட்டத்தை வென்று விடலாம் என்று கணக்குப்போட்டு ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்தது.

அதன்படி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியில் விளையாடும் மும்பை அணி, பெரும்பாலான போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இதனால் இனி நடைபெறும் ஆறு போட்டியில் ஐந்து போட்டிகளில் வென்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. இது மும்பை அணி ரசிகர்களை மட்டும் இன்றி மும்பை அணி நிர்வாகத்தையும் கலக்கமடைய செய்துள்ளது.

ஏற்கனவே மூன்று முறை ஐபிஎல் கோப்பையை தவறவிட்டதால்தான், அப்போதைய கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவை தூக்கிவிட்டு ஹர்திக் பாண்டியாவை நியமித்தார்கள். குஜராத் அணியில் கேப்டனாக செயல்பட்ட போது ஒரு முறை ஐபிஎல் கோப்பையை வென்று கலக்கி கொண்டிருந்த ஹர்திக் பாண்டியா, தற்போது மும்பை அணியில் கேப்டனாக செயல்படும்போது அணியை வெற்றி பாதையில் அழைத்துச் செல்ல முடியாமல் தடுமாறி வருகிறார்.

இதனால் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக “குஜராத் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் நேஹ்ரா தான், அவர் சொல்பேச்சை கேட்டு நடந்ததால் தான் ஹர்திக் பாண்டியா குஜராத் அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார். தற்போது மும்பை அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுக்க முடியாமல் திணறி வருகிறார் ” என்று ஏராளமானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதே சமயம், பல கோடிகளை செலவு செய்து ஹர்திக் பாண்டியாவை மும்பை அணிக்கு அழைத்து வந்த அம்பானி குடும்பத்தினர், விஷயத்தை முழுசாக தெரிந்து கொள்ளாமல் ஹர்திக் பாண்டியாவை நம்பி ஏமாந்து விட்டோமோ என்று கலக்கத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி தோல்வியை தழுவிய போது பேசிய ஹர்திக் பாண்டியா,

அணியில் உள்ள ஒவ்வொரு வீரரிடமும் குறை இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இது மும்பை அணி நிர்வாகத்தை ஆத்திரமடைய செய்திருக்கிறது. அதுமட்டுமின்றி போட்டியில் தோல்வி அடைந்து விட்டு ஹர்திக் பாண்டியா கேஷுவலாக சிரித்து பேசுவதும் மும்பை நிர்வாகத்தை கடுப்படையச் செய்துள்ளது.
இப்படியான நிலையில் வருகின்ற சனிக்கிழமை ஏப்ரல் 27ஆம் தேதி டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி விளையாட உள்ளது.

ஆகவே இனி வரும் போட்டிகளில் நிச்சயமாக மும்பை அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும். இல்லையெனில் நீங்களாவே கேப்டன் பதவியில் இருந்து விலகிக் கொள்ளுமாறு ஹர்திக் பாண்டியாவுக்கு அம்பானி குடும்பத்தினர் கராராக சொல்லி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆகவே இனி வரும் போட்டிகளில் மும்பை அணி கண்டிப்பான முறையில் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற நிலைக்கு ஹர்திக் பாண்டியா கள்ளப்பட்டி இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆகவே அடுத்தடுத்த போட்டிகளில் மும்பை அணி வெற்றி பெறுவதைப் பொறுத்துதான் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன் பதவி நிலைத்து நிற்கும் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here