கிரிக்கெட் அணியில் இனம்,மொழி பார்த்து வாய்ப்பா.?தமிழக வீரர் நடராஜன் புறக்கணிப்பு..

0
Follow on Google News

இந்திய கிரிக்கெட் அணியில் அனைத்து மாநிலத்திலும் உள்ள அனைத்து மொழி பேசுகிறவர்களும் இருந்தால் மட்டுமே அந்த அணி முழுமையான இந்திய அணியாக இருக்கும், ஆனால் அப்படி இந்திய அணியில் வாய்ப்பு வழங்க படுகிறதா.? என்றால், நிச்சயம் இல்லை என்று சொல்லும் அளவிற்கு இந்திய அணி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே ஒரு குறிப்பிட்டவர்களின் ஆதிக்கம் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து வருவதாக குற்றசாட்டுகள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது.

இந்தப் பிரச்சனை இந்தியாவுக்கு மட்டுமல்ல இதற்கு முன்பு தென் ஆப்பிரிக்கா அணியிலும் இருந்து வந்தது. இந்திய கிரிக்கெட் அணியில் தொடர்ந்து ஜாதி ரீதியாக வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதாகவும், மொழி ரீதியாக வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதாகவும், இன ரீதியாக வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதாகவும் சர்ச்சைகள் வெடித்து வந்த நிலையில், தென்னாப்பிரிக்கா அணியின் வெளிப்படையாகவே இன ரீதியான பிரச்சனைகள் இருந்து வந்தது.

கடந்த காலங்களில் தென்னாபிரிக்கா அணியில் வெள்ளை இனத்தவர்கள் தான் பெரும்பாலும் அந்த அணியில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டு அங்கே தொடர்ந்து விளையாடி வந்தனர். இந்நிலையில் தென்னாப்பிரிக்காவின் தந்தை என்று அழைக்கப்படக்கூடிய நெல்சன் மண்டேலா அணைத்து தரப்பு மக்களின் இடையில் ஒற்றுமை உருவாக வேண்டும் என்றால் வெள்ளை இன மக்களும் கருப்பர் இன மக்களும் இணைந்து விளையாடினால் மட்டுமே அவர்களுக்கு இடையிலான ஒரு சகோதரத்துவமும் வரும் என்பதை சுட்டிக்காட்டி, கருப்பர் இன மக்களையும் வெள்ளையர் இன மக்களையும் இணைந்து விளையாடுவதற்கான ஒரு திட்டத்தை வகுத்தவர் நெல்சன் மண்டேலா.

அந்த வகையில் விளையாட்டு போட்டி என்பது வெறும் விளையாட்டு அல்ல, அது அந்த நாட்டின் வசிக்கக்கூடிய அனைத்து இன மக்களையும் ஒருங்கிணைக்கும் ஒரு சக்தி என்று கூட நெல்சன் மண்டேலா குறிப்பிட்டு இருப்பார். அந்த வகையில் இவன் மிகவும் புத்திசாலியாக இருந்தாலும் கூட இவன் நம்ம இனம் இல்லை என்றால் புறக்கணிக்கும் போது ஒரு திறமையானவன் புறக்கணிக்கப்படுகிறான் என்பது மட்டுமில்லை ஒரு குறிப்பிட்ட இனமே புறக்கணிக்க படுகிறது.

இந்நிலையில் 2016 ஆண்டுகளுக்குப் பின்பு தென் ஆப்பிரிக்காவில் கிரிக்கெட் அணியில் ரிசர்வேஷன் என்கின்ற மாடல் கொண்டு வந்தார்கள். அதாவது 2016 ஆண்டுக்கு முன்பு 8 சதவீதம் உள்ள வெள்ளை இன மக்கள் தான் முழுமையாக கிரிக்கெட் அணியில் விளையாடி வந்தார்கள், ஆனால் 2016 ஆண்டுகளுக்கு பின்பு ஆறு வெள்ளை இன மக்கள் விளையாட்டினால் அதில் நிச்சயம் இரண்டு கருப்பரின ஆப்பிரிக்கர்களும் அந்த
அணியில் இடம்பெற வேண்டும் என்கின்ற ஒரு ரிசர்வேஷனை அந்த கொண்டு வந்தனர்.

அந்த வகையில் இந்தியாவிலும் அனைத்து மாநில உள்ளவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றால் சவுத் ஆப்பிரிக்காவில் கொண்டு வந்த ரிசர்வேஷன் திட்டத்தை இந்திய கிரிக்கெட் அணியிலும் கொண்டு வரவேண்டும் என்கிற கருத்து நிலவி வருகிறது, 15 பேர் கொண்ட இந்திய அணியில் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்து அணைத்து இன மக்களுக்கும் வாய்ப்பு வழங்கும் வகையில், குறிப்பாக இனம், மொழி, பார்த்து தேர்தெடுக்கமால், திறமைக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் தென் ஆஃப்ரிக்கா போன்று இந்திய அணியில் ரிசர்வேஷன் கொண்டு வரப்படுமா என்கிற கேள்வி எழுத்துள்ளது.

வெறும் வாயிலேயே நாம் வேற்றுமையில் ஒற்றுமை என வடை சுட்டுக் கொண்டிருக்காமல், அதை அனைத்து துறைகளிலும் நிகழ்த்த வேண்டும், அந்த வகையில் இந்திய அணியில் முதலில் தலைமை பதவியில் இருப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட நபர்களாக இருக்கும் பொழுது திறமையானவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகி கொண்டிருப்பது நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்காததில் இருந்து வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது என பலரும் விமர்சனம் செய்து வருவது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்…