டி20யில் வாய்ப்பு கொடுக்காத பிசிசிஐ முகத்தில் கரியை பூசிய தமிழன்… இப்ப தெரிகிறதா தமிழன் சொன்னாலே திமிரேறும்..

0
Follow on Google News

நடைபெற்ற ஐபிஎல் பைனலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில் ஆண்ட்ரே ரஸல் 3 விக்கெட்டுகள் எடுத்தார். மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஹர்ஷித் ராணா தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். வைபவ் அரோரா, சுனில் நரைன் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எப்படியும் வெற்றி பெற்று விடுவோம் என்ற உற்சாகத்தில் அதிரடியாக ஆடியது.

சுனில் நரைன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு குர்பாஸ் அகமது மற்றும் வெங்கடேஷ் ஐயர் இருவரும் இணைந்து வெற்றியின் விளிம்பு வரை சென்றது. அப்போது குர்பாஸ் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியாக ஷ்ரேயாஸ் ஐயர் 6 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 52 ரன்களும் எடுக்கவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3ஆவது முறையாக சாம்பியன் ஆனது.

கடந்த 2012 சீசனில் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். சென்னை சேப்பாக்கத்தில் வைத்துதான் இந்த போட்டி நடைபெற்றது. இதன் பின்னர் 2014 சீசனில் இரண்டாவது முறை சாம்பியன் ஆனது. இந்த போட்டி பெங்களுருவில் நடந்தது. இதன் பின்னர் தற்போது மூன்றாவது கோப்பையை சென்னை சேப்பாக்கத்தில் வைத்து மீண்டும் வென்றுள்ளது. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ், இந்த சீசனில் 16 போட்டிகள் விளையாடி 3 தோல்விகளை மட்டும் பெற்றுள்ளது.

இதைத் தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், வளர்ந்து வரும் வீரருக்கான விருது, ஃபேர்பிளே விருது, பர்பிள் கேப், ஆரஞ்சு கேப், மிகவும் மதிப்புமிக்க வீரர் விருது, 2ஆம் இடம் பிடித்த ஹைதராபாத் அணிக்கு விருதுகளும், பரிசு தொகையும் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து கடைசியாக சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ரூ.20 கோடிக்கான காசோலையும், ஐபிஎல் டிராபியும் வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட ஷ்ரேயாஸ் ஐயர் முதல் முறையாக ஐபிஎல் 2024 டிராபியை தனது கையால் தூக்கினார். பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் தலைவர் ரோஜர் பின்னி இருவரும் இணைந்து ஐபிஎல் டிராபியை வழங்கினர். ஏற்கனவே 2020 சீசனில் டெல்லியை ஃபைனலுக்கு அழைத்து வந்த முதல் கேப்டனாக சாதனை படைத்த அவர் கொல்கத்தா அணியிலும் அசத்தி வருகிறார்.

முன்னதாக கடந்த 2023 உலகக் கோப்பையில் 500க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்து இந்தியா ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றிய ஸ்ரேயாஸ் ஐயர் 2024 இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடினார். அந்தத் தொடரில் காயத்தை சந்தித்து பாதியிலேயே வெளியேறிய அவர் விரைவாக குணமடைந்ததாக என்சிஏ அறிக்கை கொடுத்தது. அதனால் ரஞ்சிக் கோப்பையில் விளையாடுமாறு பிசிசிஐ அறிவுறுத்தியது.

ஆனால் அப்போது தம்முடைய காயம் முழுமையாக குணமடையாததால் தமிழ்நாட்டுக்கு எதிரான செமி ஃபைனலில் தம்மால் விளையாட முடியாது என்று ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்தார். இருப்பினும் என்சிஏ அறிக்கை வழங்கியதால் பொய் சொல்வதாக கருதிய பிசிசிஐ அவரை 2023 – 24 இந்திய கிரிக்கெட் அணியின் சம்பள ஒப்பந்தத்திலிருந்து அதிரடியாக நீக்கியது.

இந்த சம்பவத்திற்கு பிறகு ஸ்ரேயாஸ் மனம் உடைந்து போனாலும் தன்னுடைய உழைப்பை அவர் கைவிடவே இல்லை. இதனால் ஊதிய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர், தனக்கு வாய்ப்பு கொடுக்காத பிசிசிஐ முகத்தில் கரியை பூசும் அளவுக்கு ஐபிஎல் ல் சிறப்பாக விளையாடி கோப்பையை கொல்கத்தா அணிக்கு கோப்பையை வென்று கொடுத்துள்ளார் வடமாநிலத்தில் செட்டிலான தமிழகத்தை பூர்விகமாக கொண்ட ஷ்ரயா ஐயர்.