எல்லாம் நடிப்பு… சிஎஸ்கே அணிக்கு எதிரான நடந்தது இது தான்…ஹர்திக் பாண்டியா முகத்திரையை கிழித்த கேவிட் பீட்டர்சன்…

0
Follow on Google News

மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் மோதின. இந்த போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தோல்வி அடைந்தது. நஇந்த போட்டி மும்பை அணியின் ஹோம் கிரவுண்டில் நடைபெற்ற நிலையிலும் மும்பை அணி தோல்வியை தழுவியுள்ளது. இதனால் மீண்டும் ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்த போட்டியில் தாஸ் வென்ற மும்பை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. சென்னை அணியில் ருத்ராஜ் மற்றும் சிவம் துபே ஆகியோர் மும்பை அணியின் பவுலிங்கை அசால்டாக தட்டி 6 மற்றும் பவுண்டரி என்ன ரன் மழைகளை பொழிந்தனர். அது மட்டும் இல்லாமல், ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சை எதிர்கொண்ட சென்னை அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி மூன்று சிக்ஸ்களை விளாசி ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் மூழ்கடித்தார்.

அதன் பிறகு இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்த தோனி ஆட்டமிழந்து வெளியேறினார். மொத்தமாக ஹர்திக் பாண்டியா நான்கு பந்துகளில் 20 ரன்கள் தோனிக்கு கொடுத்திருக்கிறார். மகேந்திர சிங் தோனியின் அபாரமான ஆட்டத்தை கண்டு சென்னை அணி ரசிகர்கள் துள்ளி குதித்தாலும், மும்பை அணி ரசிகர்கள் மீண்டும் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக போர் கொடி தூக்க ஆரம்பித்து விட்டனர்.

ஏற்கனவே கேப்டன்சி பிரச்சனையால் மும்பை அணி ஆடிய அனைத்து போட்டிகளிலும் ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக கோஷமிட்டு வந்தனர். பின்னர் இரண்டு போட்டிகளில் மும்பை அணி வெற்றி பெற்றதால், பாண்டியாவுக்கு எதிரான விமர்சனங்கள் குறைந்து வந்தன.இந்த சூழலில், மீண்டும் ஹோம் கிரவுண்டில் சென்னை அணியிடம் மும்பை அணி தோல்வியுற்றது ரசிகர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது. மீண்டும் சோசியல் மீடியா முழுவதும் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சோசியல் மீடியா மட்டும் இன்றி மைதானத்திலும் பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். இவ்வாறு எங்கு சென்றாலும் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து கொண்டே வருகின்றனர்.
இது போன்ற எதிர்மறையான விமர்சனங்களால் ஹர்திக் பாண்டியா பாதிப்படையவில்லை என்று நிஷான் கிஷான் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.ஆனால், ரசிகர்களின் கடும் எதிர்ப்பால் உண்மையில் ஹர்திக் பாண்டியா மனதளவில் பெரிதாக பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் கூறியிருக்கிறார்.

இது குறித்து கெவின் பீட்டர்சன் கூறியதாவது: “ஹர்திக் பாண்டியா மொத்தமாக அணியில் இருந்து விலகி இருப்பது போல் தோன்றுவதால் அவர் பாதிப்படைந்து இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அவர் டாஸ் போடும்போது சிரித்த முகத்துடன் இருக்கிறார், தன்னை மகிழ்ச்சியானவனாக காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார். ஆனால் நான் அங்கு தான் இருந்தேன், என்னால் அவர் மகிழ்ச்சியாக இல்லை என்று சொல்ல முடியும்.

கிரிக்கெட் போட்டியின் போது சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி மைதானம் முழுவதும் பந்துகளை அடித்து பௌண்டரி மழைகளை பொழியும்போது ரசிகர்கள் உற்சாகத்தில் ஆரவாரம் செய்கின்றனர். ஆனால் ஹர்திக் பாண்டியாவுக்கு மைதானத்தில் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இது நிச்சயம் அவரை புண்படுத்தி இருக்கும். அவருக்கும் உணர்வுகள் உண்டு. அவரும் ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் தான். தன்னையும் ரசிகர்கள் இப்படி கொண்டாட வேண்டும் ஆரவாரம் செய்ய வேண்டும் என்று நினைப்பார். அதற்கு எதிராக நடக்கும் பொழுது அவருக்கு வேதனையாய் இருக்கும். இருப்பினும் அவர் மகிழ்ச்சியாய் இருப்பது போல நடிக்கிறார்” என்று கெவின் கூறியுள்ளார்.