மும்பை – வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற கடந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது. ஆர்சிபி அணிக்காக விராட் கோலி மற்றும் டூப்ளசி இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இதனை தொடர்ந்து ஆட்டத்தை தொடங்கிய மும்பை அண 15.3 ஓவர்களிலேயே 197 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி. மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் பேட்டிங்கில் மரண அடி அடித்த போது எந்த திட்டமும் இல்லாமல் பெங்களூரு அணி வீரர்கள் தலை குனிந்து நின்று கொண்டிருந்தனர்.
மறுபுறம் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்று தோல்விப் பாதையில் இருந்து மீண்டு இருக்கிறது. ஆனால் இப்போட்டியில், நடுவர்கள் பெரும்பாலும், மும்பை இந்தியன்ஸுக்கு ஆதரவாகதான் நடந்துகொண்டனர். மும்பைக்கு ரிவியூ இல்லாதபோதும், ஒயிடிற்கு நடுவர்களே முன்வந்து ரிவியூ எடுத்தனர். அதேபோல், பெங்களூர் பேட்டிங்கின் போது, ரஜத் பட்டிதார் அடித்த பவுண்டரியை ஆகாஷ் மத்வால் தடுக்க முற்பட்டார்.
அவரது உடல் பவுண்டரி லைனில் இருந்தபோது, காலில் பந்து பட்டது. இதனை மூன்றாவது நடுவர் பவுண்டரி இல்லை என அறிவித்தார். ஆகாஷ் மத்வால் வீசிய ஓவரில் வந்த ஒரு வைட் பாலையும், கள நடுவர்கள் சரியான பந்து என அறிவித்தனர் பும்ரா வீசிய யார்க்கர் பந்து லோம்ரோரின் காலில் பட்டுச் சென்றது. டிஆர்எஸ் முறையில் ஆய்வு செய்தபோது, இடது ஸ்டெம்பிற்கு வெளியே சென்றது உறுதியானது.
ஆனால், களநடுவரின் முடிவு என்ற அடிப்படையில் லோம்ரோர் அவுட் என அறிவிக்கப்பட்டார். கடைசி ஓவரில் மத்வால் வீசிய பந்து தினேஷ் கார்த்திக்கின் நெஞ்சுப் பகுதிக்கு வந்தது. களநடுவர் நோ பால் தர மறுக்க, டிஅர்எஸ் முறையில் ஆய்வு செய்ய முறையிடப்பட்டது. அப்போது பந்து மேலே சென்றாலும், அது கீழே செல்வதாக காட்டப்படது. இதை கண்டதும் விராட் கோலி கூட அருகிலிருந்த நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதுமட்டுமின்றி டாஸ் வீசப்பட்ட நிகழ்வை பார்க்கும் போது ரசிகர்களுக்கு ஒரு திடுக்கிடும் உண்மை தெரிய வருகிறது. அதாவது நாணயம் கீழே விழுந்ததும் அதை அப்படியே எடுக்காத அம்பயர் மேலே கையை வைத்து தலைகீழாக எடுத்து பார்த்து விட்டு மும்பை டாஸ் வென்றதாக அறிவித்தது அப்பட்டமாக தெரிகிறது. அதை வீடியோவாக எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரசிகர்கள் மும்பை அணிக்கு மட்டும் டாஸ் எப்படி போட்டாலும் அவர்கள் பக்கம் தான் விழும் என்று விமர்சிக்கின்றனர்
இந்த நான்கு முடிவுகளும் ஆர்சிபி அணிக்கு வெளிப்படையாக எதிராக அமைந்த காரணத்தினால், விராட் கோலியும் தனது கோபத்தை வெளிப்படுத்தினார். ஆர் சி பி ரசிகர்களும் கோபத்தை கடுமையாக வெளிப்படுத்தி வருகிறார்கள். இதனால் நடுவர்கள் மும்பை அணிக்கு சாதகமாக செயல்படுவதாகவும், ஒருசார்பாக நடந்துகொள்வதாகவும் சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டி வருகின்றனர். அதோடு, போட்டி வர்ணனையாளர்களும் நடுவர்களுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஜெர்சியை அணிவித்து விடலாம் என கிண்டலடித்தனர்.
மேலும் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த மும்பை அணியை வெற்றி அடைய செய்ய மும்பை அணையின் ஓனர் அம்பானி அம்பெயர்களை விலைக்கு வாங்கி விட்டார் என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.