நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், அந்த அணியின் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மா மற்றும் மும்பை அணியின் ஓனர் அம்பானி குடும்பத்தினருக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரோகித் சர்மா நடப்பு ஆண்டு ஐபிஎல் போட்டியில் அவரது கேப்டன்சியை பறிகொடுத்ததால், மும்பை அணி நிர்வாகத்தின் மீதும் ஹர்திக் பாண்டியா மீதும் அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், ஆகாஷ் அம்பானியின் காரில் ரோகித் சர்மா சென்றிருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் இணையவாசிகள் மத்தியிலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் லீக் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டு வரும் நிலையில், ரோகித் சர்மா அதே அணியில் பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார். கேப்டன் பதவியை பறித்ததால் ரோகித் சர்மா 2025 ஐபிஎல் போட்டியில் மும்பை அணியை விட்டு விலகி வேறு அணியில் சேர்ந்து விடுவார் என்றும், அவரை ஏலத்தில் எடுப்பதற்காக ஹைதராபாத், லக்னோ உள்ளிட்ட அணிகள் இப்போதே பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் ஏராளமான தகவல்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
சமீபத்தில் கூட லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், ரோஹித் சர்மாவை தங்கள் அணிக்கு வரவழைப்பது குறித்து பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல டெல்லி அணியின் ஆலோசகரான சௌரவ் கங்குலி 2025 ஐபிஎல் ஏலத்துக்கு முன்னதாகவே ரோகித் சர்மாவை அணிக்கு அழைத்து வர முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
2025 ஐபிஎல் போட்டிக்கு முன்னதாக மெகா ஏலம் நடைபெறும். அந்த ஏலத்தில் அனைத்து அணிகளும் நான்கு வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும். மற்ற வீரர்களை ஏலத்தில் தான் தேர்வு செய்ய வேண்டும்.
இதற்கிடையில் மும்பை அணி ரோகித் சர்மாவை வேறு அணிக்கு விட்டுக் கொடுக்க விரும்பவில்லை என்றும், அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்யவே ஆகாஷ் அம்பானி தனது காரில் ரோகித் சர்மாவை அழைத்துச் சென்றதாகவும் பேசப்படுகிறது.
அதாவது தற்பொழுது பல அணிகள் ரோகித் சர்மாவிடம் போச்சுவார்தை நடத்தி வரும் நிலையில், ரோகித் சர்மாவும் மும்பை அணியை விட்டு போகும் மனநிலையில் இருந்து வருவதை அறிந்த மும்பை அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி ரோகித் சர்மாவை காரில் அழைத்து சென்று சமாதனம் செய்ததாகவும், அதாவது ப்ளீஸ் மும்பை அணியை விட்டு வேறு அணிக்கு சென்று விட வேண்டாம் என ஆகாஷ் அம்பானி ரோகித் சர்மாவை சமாதானம் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் ரோகித் சர்மா மும்பை அணியை விட்டு விலகுவதில் உறுதியாக இருப்பதால், என்ன சொல்லியும் ரோகித் கேட்க மாட்டேங்கிறாரே என கதறும் நிலையில் உள்ளாராம் மும்பை அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி.