ஐபிஎல் பாதியிலே ஓய்வு பெரும் தோனி… மீறி விளையான்டால் மோசமாகி விடும்… தோனிக்கு மருத்துவர் அறிவுரை…

0
Follow on Google News

நடப்பு தொடரில் முதல்முறையாக டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் ஆட களமிறங்கியிருந்தார் தோனி. சென்னை அணி விளையாடிய முதல் இரு ஆட்டங்களிலும் தோனிக்கு பேட்டிங் ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. விசாகப்பட்டினத்தில் டெல்லி கேப்பிடல்ஸ்க்கு எதிராக சி.எஸ்.கே விளையாடிய 3வது ஆட்டத்தில் டாப் ஆர்டரின் தடுமாற்றத்தால் தோனிக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைத்தது.

ஷிவம் துபே ஆட்டமிழந்த பிறகு களத்திற்குள் நுழைந்தார் தோனி. தான் எதிர்கொண்ட முதல் பந்தையே பவுண்டரிக்கு விளாசி தனது அதிரடியை தொடங்கினார். கடைசி ஓவரை நார்ட்ஜே வீசினார். ஸ்டிரைக்கில் நின்றது தோனி. முதல் பந்து பவுண்டரி. 2வது பந்தில் மிட் விக்கெட்டில் ஒற்றை கையால் சிக்சருக்கு விளாசினார் தோனி. அரங்களில் இருந்த மஞ்சள் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். 3வது பந்தில் ரன் ஏதுமில்லை. 4வது பந்து மீண்டும் பவுண்டரி. 5வது பந்தில் ரன் ஏதுமில்லை. கடைசி பந்தில் ஒரு சிக்சர்.

இப்படியாக தனி ஆளாக ஒரு ஓவரை விளையாடி 20 ரன்களை விளாசித் தள்ளினார் தோனி. மொத்தமாக அவர் சேர்த்தது 37 ரன்கள். அதுவும் 16 பந்துகளில். இதில் 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் அடக்கம். 3 ரன்களை தவிர்த்து இதர ரன்கள் அனைத்துமே பவுண்டரி, சிக்சர்களும் மூலம் சேர்த்திருக்கிறார். தோனியின் ஸ்டிரைக் ரேட் 231.25. நேற்றைய ஆட்டத்தில் தோனியை தவிர்த்து வேறு எந்த ஒரு வீரரின் ஸ்டிரைக் ரேட்டும் 200-ஐ கூட தாண்ட வில்லை. ஆட்டம் முடிந்தது Electric Striker of the match விருது தோனி வசம் வந்தது.

தோனிக்கு 42 வயதாகிறது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு மூட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனாலும் உலகின் வேகமான பந்துவீச்சாளர்களில் ஒருவரான நார்ட்ஜே உள்பட பவுலர்களை தனக்கே உரிய ஆட்டப்பாணியில் எதிர்கொண்டு ரசிகர்களை கவர்ந்தார் தோனி. சமூக ஊடகங்களிலும் தோனியே ஆதிக்கம் செலுத்துகிறார். ஐபிஎல்லில் சென்னை அணி தோற்ற தருணங்களில் பெரும்பாலும் கடுமையான விமர்சனங்களையே எதிர்கொண்டிருக்கிறது. ஆனால் இந்த முறை தோற்றதையே மறந்துவிட்டு ரசிகர்கள் தோனியை கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு மைதானத்தில் இருந்த ஊழியர்களுடன் தோனி புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது காலில் அடிபட்டது போல கட்டு கட்டி இருந்தார். மேலும் நடப்பதற்கும் மிகவும் சிரமப்பட்டார் தோனி. இதனால் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் தோனியின் விளையாடுவது குறித்த கேள்வி எழுந்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனி களமிறங்குவது கேள்விக்குறி தான் என்று கூறப்படுகிறது.

ஒருவேளை காலில் வலி அதிகமாக இருக்கும் பட்சத்தில் வேறொரு விக்கெட் கீப்பர் சென்னை அணியில் இடம் பெறலாம். தோனி தனது கடைசி போட்டியை சென்னையில் தான் விளையாடுவேன் என்று கூறி இருந்தார். தற்போது அடிபட்டுள்ளதால் மீதமுள்ள போட்டியில் இருந்து ஓய்வு எடுத்து கொள்வாரா என்று ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். மேலும் பவுண்டரி, சிக்ஸ் மட்டுமே அடிக்க முயற்சி செய்கிறார் தோனி. சிங்கிள் எடுக்க கூட முயற்சி செய்யவில்லை. காலில் உள்ள காயம் காரணமாக தான் ரன்கள் ஓட முயற்சி செய்யவில்லை.

இது தொடர்பான வீடியோவை சிஎஸ்கே தங்களது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த நிலையில் தான் தோனி சிங்கிள் ஓடாததற்கும், பயிற்சியில் இடம் பெறாததற்கும் என்ன காரணம் என்று தற்போது தெரியவந்துள்ளது. தோனியின் இடது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவருக்கு பதிலாக ஆரவெல்லி அவனிஷ் விக்கெட் கீப்பிங் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் மருத்துவர்கள் தோனிக்கு அறிவுரை கூறியுள்ளார். வலியுடன் விளையாடி காயத்தை பெரிதாக்கி கொள்வது அவருடைய வாழ்க்கை முறைக்கும் நல்லதல்ல. ரசிகர்களாகிய நமக்கு தோனியை மிகவும் பிடிக்கும் தான். ஆனால் அதற்காக அவர் தன்னுடைய உடல் தகுதியை தியாகம் செய்து கொண்டு விளையாடுகிறார். தோனி உடல் தகுதி எப்படி போனாலும், பரவாயில்லை அவர் இன்னும் நிறைய ஆண்டுகள் விளையாட வேண்டும் என்று நினைப்பது நிச்சயம் நமது சுயநலம் தான். உண்மையான அன்பு இருக்கும் பட்சத்தில் நீங்கள் நல்லா இருந்தால் போதும் என்று மனது நினைக்க வேண்டும். ஒருவேளை தோனி ஐபிஎல் தொடரிலிருந்து பாதியில் ஓய்வு பெற்றால், அதை வரவேற்கும் மனப்பக்குவத்தை ரசிகர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.