ஹர்திக் பாண்டியாவால் நொந்து நூடுல்ஸ் ஆன அம்பானி குடும்பத்தினர்… பறிக்கப்படும் கேப்டன் பதவி…

0
Follow on Google News

புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்த சீசனில் இதுவரை நடந்த 3 போட்டிகளிலும் தோற்ற மும்பை ஹாட்ரிக் தோல்விகளால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடுகிறது. முன்னதாக இந்த தொடரில் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக கேப்டனாக செயல்பட்டு வரும் பாண்டியாவுக்கு மும்பை ரசிகர்களே கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்த சூழ்நிலையில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பைக்கு ரோகித் சர்மா, நமன் திர், தேவாலட் ப்ரேவிஸ் ஆகியோர் ட்ரெண்ட் போல்ட் வேகத்தில் கோல்டன் டக் அவுட்டானார்கள். அதனால் 14/3 என தடுமாறிய மும்பைக்கு அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் பாண்டியா அதிரடியாக விளையாடினார். எதிர்புறம் திலக் வர்மா சூழ்நிலையை அறிந்து நிதானமாக விளையாடினார்.

ஆனால் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாகவே விளையாடிய பாண்டியா 6 பவுண்டரியுடன் 34 (21) ரன்களில் அவுட்டாகி ஃபினிஷிங் செய்யாமல் சென்றார். ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன் மாற்றப்பட்டது குறித்து விமர்சனம் எழுந்து வருகிறது. இதையடுத்து ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடும் ரசிகர்களிடையே கோபத்தை உண்டாக்கியிருக்கிறது.

இதையெல்லாம் தாண்டி தற்போது கேப்டன்ஸி மீதே விமர்சனம் எழும் வகையில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 3 போட்டியிலும் தோல்வி அடைந்து ஹாட்ரிக் தோல்வி அடைந்துள்ளது. மேலும், புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடம் பிடித்துள்ளது. இந்த சீசனில் குறைந்த ஸ்கோர் எடுத்த அணி என்ற மோசமான சாதனையை மும்பை இந்தியன்ஸ் படைத்துள்ளது.

அதோடு, பவுலிங்கில் அதிக ரன்கள் கொடுத்த அணி என்ற மோசமான சாதனையையும் படைத்திருக்கிறது. தற்போது ஹாட்ரிக் தோல்வி அடைந்த அணி என்ற சாதனையையும் மும்பை இந்தியன்ஸ் படைத்துள்ளது. சொந்த மண்ணான அகமதாபாத்தில் ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பிய நிலையில், ஐதராபாத் மண்ணிலும் ரசிகர்களின் எதிர்ப்பை எதிர்கொண்டார். இது மும்பை அணி நிர்வாகத்தையும் கலக்கமடைய செய்தது.

இதனால் சொந்த மண்ணில் என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்தது. இதனால் வான்கடே மைதானத்தில் நடக்கவுள்ள ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினால், ரசிகர்கள் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்படுவார் என்று மறைமுக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் வான்கடே மைதானத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவான குரல்கள் வரும் என்று பார்க்கப்பட்டது.

ஆனால் டாஸின் போது ஹர்திக் பாண்டியா களமிறங்கும் போதே ரோகித் சர்மா ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினார்கள். அதேபோல் தொடக்க வீரராக ரோகித் சர்மா களமிறங்கிய போது, “ரோகித்.. ரோகித்.. ரோகித்” என்ற கோஷம் விண்ணை பிளந்தது. முதல் முறையாக சொந்த மண்ணிலேயே மும்பை அணி கேப்டன் ஒருவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இதனால் மும்பை அணியின் ஓனர் அம்பானியே நொந்து விட்டாராம்.

ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று ஹாட்ரிக் தோல்வியை பெற்றுக் கொடுத்துள்ளார். அடுத்தடுத்த தோல்வியைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளரான அம்பானி குடும்பத்தினர் நொந்து நூடுல்ஸ் ஆகி உள்ள நிலையில், ஹர்திக் பாண்டியா கேப்டன் பதவி பறிக்க படலாம் என்றும், அந்த வகையில் இனி வரும் போட்டிகளில் மும்பை அணியின் கேப்டன்ஸி மாற்றப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.