அஸ்வினுக்கு ஓவர் அகம்பாவம்… இவர் ஒழுங்கா விளையாடாமல்.. அடுத்தவரை திட்டுவது சரியா.?

0
Follow on Google News

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்று நடைபெற்ற ஒன்பதாவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல் அணிகள் மோதிக்கொண்டன. ஜெய்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

இதனால் கிரிக்கெட் ரசிகர்களிடம் இருந்து அஸ்வினுக்கு பாராட்டுக்கள் குவிந்து வந்தாலும், நேற்றைய போட்டியின் போது இளம் கிரிக்கெட் வீரரிடம் அஸ்வின் நடந்து கொண்ட விதம் பெரும் விவாதத்திற்கு உள்ளாகி வருகிறது. அஸ்வின் அப்படி செய்திருக்கக் கூடாது என்று பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். டெல்லிக்கு எதிரான போட்டியில் அஸ்வின் என்ன செய்தார் என்பதை இங்கே பார்க்கலாம்.

கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான அணியினர் ஆரம்ப ஆட்டத்திலேயே அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். ராஜஸ்தானின் டாப் 3 கிரிக்கெட் வீரர்கள் பெரிதாக ரன் ஏதும் எடுக்காமல் சொற்ப ஆட்டம் இழந்தனர். இதை அடுத்து களம் இறங்கிய ரியான் பராக் அஸ்வின் உடன் ஜோடி சேர்ந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சுறுசுறுப்பாக விளையாடிய ரியான் 45 பந்துகளுக்கு 84 ரண்களை குவித்தார். இறுதியாக ராஜஸ்தான் அணியை ஐந்து விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்திருந்தது. ஆகவே 186 நாங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி அடுத்ததாக களம் இறங்கியது. டெல்லி அணி வீரர்களும் அபாரமாக விளையாடி வந்ததால் ராஜஸ்தான் அணைக்கு நெருக்கடி இருந்து கொண்டே இருந்தது.

குறிப்பாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர் அபாரமாக விளையாடி வந்தார். டேவிட் கார்னர் பௌண்டரி சிக்ஸர் என விளாசிக் கொண்டிருக்க ரண்களும் எகிற ஆரம்பித்தன. இதனால் ராஜஸ்தான் அணி மிரள ஆரம்பித்தது. இப்படியான நிலையில் அசத்தலாம் ஆடிக் கொண்டிருக்கும் டேவிட் வார்னரை அவுட் செய்ய அஸ்வினுக்கு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்தது.

அஸ்வின் வீசிய பந்தை பக்கத்திலேயே அடித்து விட்டு ரன் எடுக்க ஓடினார் டேவிட் வார்னர். அந்தப் பந்தை தடுத்த ஜெய்ஸ்வால், உடனடியாக அஸ்வினிடம் எறிந்தார். ஆனால் அஸ்வின் அந்த பந்தை பிடிக்கவில்லை. இதனால் வாரணரை ரன் அவுட் ஆகும் வாய்ப்பு பறிபோனது. ஜெய்ஷால் எறிந்த பந்தை அஸ்வின் தான் கவனிக்கவில்லை. அஸ்வின் அந்த பந்தை பிடித்திருந்தால் ஈஸியாக வாரனரை ரன் அவுட் செய்திருக்கலாம். ஆனால் அவர் தவற விட்டு விட்டார்.

ஆனால் அஸ்வின் தன் மீது இருக்கும் தவறை உணராமல் ஜெயஸ்வாலை கடுமையாக திட்டி விட்டார். அஸ்வின் கத்தியதை பார்த்ததும் அதிர்ச்சியில் ஜெய் ஸ்வால் உறைந்து போய் நின்றார். இப்படியான நிலையில் அஸ்வின் ஜெயஸ்வாலை கடுமையாக திட்டியது கிரிக்கெட் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் ரசிகர்கள் பலரும் அஸ்வினுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதாவது மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக பதவியேற்றுள்ள ஹர்திக் பாண்டியா மாதிரி அஸ்வினுக்கு ஆணவம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது தொடர்ந்தால் ரசிகரின் கடும் எதிர்ப்புக்கு உள்ளாக நேரிடும் என்பதால், தன்னுடைய தவறை உணர்ந்து இளம் வீரர்களிடம் கோபத்தை வெளிப்படுத்தாமல், அதாவது தன்னுடைய அகம்பாவத்தை அடங்கி வாசித்தால் அஸ்வினுக்கு நல்லது என பலரும் அட்வைஸ் செய்து வருவது குறிப்பிடதக்கது.