இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு இடமில்லை… நல்ல பார்மில் இருந்தாலும் தமிழன் என்பதால் புறக்கணிப்பதா.?

0
Follow on Google News

ஆஸ்திரேலியாவின் கோட்டை என அழைக்கப்பட்ட பிரிஸ்பேன் கப்பா மைதானத்தில் இந்திய அணி போட்டியை வென்றது. 30 ஆண்டுகளுக்கு பிறகு கப்பாவில் தோற்றது ஆஸ்திரேலியா. அந்த டெஸ்ட் போட்டியில் விளையாடிய நடராஜன், முதல் இன்னிங்சில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இப்படி உச்சத்தில் இருந்த தமிழக வீரர் நடராஜன் இடையில் சில சொதப்பல் ஆட்டங்கள் மற்றும் காயங்கள் என நடராஜனின் கிரிக்கெட் வாழ்வை கேள்விக்குறியாக்கியிருந்த நிலையில், 2023 ஐபிஎல் போட்டியில் மீண்டும் களம் கண்டார் நடராஜன். ஐபிஎல்லில் என்ன தான் சிறப்பாக விளையாடினாலும் இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு விஜய் ஹசாரே ஒருநாள் கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழக வீரர் நடராஜன் அபாரமாக பந்துவீசி பரோடா அணியை 124 ரன்களில் சுருட்டி அசத்தினார். இதில் 3 போட்டிகளில் 7 விக்கெட்களை எடுத்துள்ளார். டி20 உலககோப்பை இன்னும் 6 மாதத்தில் வர உள்ள நிலையில், நடராஜன் சிறப்பாக பந்துவீசி வந்ததால் மீண்டும் இந்திய அணியில் என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டித் தொடருக்கான இந்திய அணியில் அவர் பெயர் அறிவிக்கப்படவில்லை. அப்போது, இடது கை வேக பந்துவீச்சாளர் தேவைப்படும் நிலையில் நடராஜனை பிசிசிஐ ஏன் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணியில் இடம்பெற்று மிக சிறப்பாக விளையாடி செம்ம பார்மில் இருந்து வருகிறார் நடராஜன்.

இதுகுறித்து ஐதராபாத் அணியின் புவனேஷ்வர் குமார் பேசுகையில், நடராஜனின் யார்க்கர் பந்துகள் குறித்து அனைவருக்கும் நன்றாக தெரியும். அவர் எப்போதும் அமைதியாக இருப்பார். ஆனால் கடின உழைப்பாளி. சில நேரங்களில் அவரின் உழைப்பு அங்கீகரிக்கப்படுவதில்லை. நிச்சயம் மிகப்பெரிய மேட்ச் வின்னர் அவர் தான் என தற்பொழுது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் தமிழக வீரர் நடராஜன் தான் என சுட்டி கட்டியிருந்தார்.

இந்நிலையில் டெல்லி அணிக்கு எதிரான நபோட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. 20 ஓவர் முடிவில் அந்த அணி 266 ரன்களை குவித்தது. அடுத்ததாக களமிறங்கிய டெல்லி அணி 19.1 ஓவரில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்கள் எடுத்து. ஹைதராபாத் அணி சார்பில் அந்த அணி வீரர் நடராஜன் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 19 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.

அவரின் இந்த சிறப்பான ஆட்டத்தை பாராட்டி அணி நிர்வாகம் அவருக்கு 80 பவுன் தங்க சங்கிலியை பரிசாக அளித்துள்ளது. இந்நிலையில் ஐபிஎல் 17ஆவது சீசன் மே 26ஆம் தேதி நிறைவு பெறும். இதனைத் தொடர்ந்து ஜூன் 1 முதல் டி20 உலகக் கோப்பை 2024 தொடர் துவங்கும். லீக் ஆட்டங்கள் அமெரிக்காவிலும், சூப்பர் 8 போட்டிகள், நாக்அவுட் போட்டிகள் மேற்கிந்தியத் தீவுகளிலும் நடக்க உள்ளது, இந்த போட்டியிலும் இந்திய அணியில் விளையாட நடராஜனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் நடராஜன் தமிழ்நாட்டில் பிறக்காமல் வேறு ஒரு மாநிலத்தில் பிறந்திருந்தால் மீண்டும் மீண்டும் இந்தியா அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்திருக்கும், அந்த வகையில் தமிழ்நாட்டில் பிறந்த ஒரு காரணத்திற்காக நல்ல பார்மில் இருக்கும் நடராஜன் புறக்கணிக்க படுகிறாரா.? என்கிற விமர்சனம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.