அவமானபடுத்தப்பட்ட ரோஹித் சர்மா… அம்பானி முகத்தில் அடித்தது போன்று மும்பை அணியில் இருந்து வெளியேறும் ரோஹித்…

0
Follow on Google News

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா மும்பை அணியில் விளையாட மாட்டார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் வாஷிம் அக்ரம் கருத்து தெரிவித்துள்ளார். இது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. பல வருடங்களாக மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தவர் ரோகித் சர்மா. இவர் இதுவரை ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை மும்பை அணிக்கு வென்று கொடுத்துள்ளார்.

ஆனால் கடந்த மூன்று வருடங்களாக மும்பை அணி ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை. இதனால் அம்பானி குடும்பம் மும்பை அணியின் கேப்டனை மாற்ற முடிவு செய்வது. அதன்படி, குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியாவை அழைத்து வந்து மும்பை அணியின் கேப்டனாக நியமித்தது. மும்பை அணி நிர்வாகம் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி பதவியை பறித்தது அவருக்கு மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தியதாக கருதப்பட்டது.

அதுமட்டுமில்லாமல், மும்பை அணி ரசிகர்களும் ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து தூக்கியதை விரும்பவில்லை. அம்பானி குடும்பத்தினர் ரோகித் சர்மாவை அசிங்கப்படுத்தும் விதமாக கேப்டன் பதவியில் இருந்து விலக்கி, ஹர்திக் பாண்டியாவுக்கு கீழ் விளையாட வைத்தது பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் உட்பட ரசிகர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனாலேயே மும்பை அணி ரசிகர்கள் பெரும்பாலானோர் ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாகவும் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராகவும் மைதானத்தில் குரல் கொடுத்து வருகின்றனர்.

நிலைமை இப்படி இருக்க, வெகு விரைவில் அடுத்த ஐபிஎல் சீசனுக்கான ஏலம் நடத்தப்பட உள்ளது.
மெகா ஏலத்தில் பொதுவாக ஒரு அணியால் நான்கு வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும். மேலும் இரண்டு வீரர்களுக்கு ஆர் டி எம் கார்டு பயன்படுத்த முடியும். இந்த விதிப்படி பார்த்தால் ஹர்திக் பாண்டியா, பும்ரா, சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட் ஆகிய 4 பேரை மட்டுமே மும்பை அணியால் தக்க வைக்க முடியும். திலக் வர்மா, ரோகித் சர்மா, இஷான் கிஷன் ஆகியோரில் 2 பேருக்கு மட்டுமே ஆர்டிஎம் கார்டை பயன்படுத்த முடியும்.

இதனால் ரோஹித் சர்மாவின் சம்பளம் குறைவதோடு மட்டுமில்லாமல், மீண்டும் மும்பை அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு கீழ் விளையாட வேண்டியது இருக்கும். அதை ரோகித் சர்மா விரும்ப மாட்டார். ஆகவே நிச்சயம் அடுத்த ஐபிஎல் சீசன் இல் அவர் மும்பை அணிக்காக விளையாட மாட்டார் என்று யூகிக்கப்படுகின்றன. அதுமட்டுமில்லாமல், சமீபத்தில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி படுதோல்வி அடைந்தது.

இதன் மூலமாக 12 ஆண்டுகளுக்கு பின் மும்பை அணியை அதன் ஹோம் கிரவுண்டில் வீழ்த்தி கொல்கத்தா அணி புதிய வரலாறு படைத்துள்ளது. இந்தப் போட்டிக்கு பின் கொல்கத்தா அணியின் சிஇஓ வெங்கி மைசூர் ரோகித் சர்மாவை சந்தித்து நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார். அவர் மட்டுமின்றி கொல்கத்தா அணியின் நிர்வாகிகள் பலரும் ரோகித் சர்மாவுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர்.

இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது, ரோகித் சர்மா அடுத்த சீசனில் கொல்கத்தா அணியில் விளையாட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. உண்மையில், அடுத்த ஐபிஎல் சீசன் இல் ரோகித் சர்மா எந்த அணியில் விளையாடப் போகிறார் என்பது பலருக்கும் மிகுந்த ஆவலை தூண்டி உள்ள நிலையில், தன்னை அவமான படுத்தும் விதத்தில் நடந்து கொண்ட மும்பை அணியின் உரிமையாளர் அம்பானி குடும்பத்தினரிடம் முகத்தில் அடித்தது போன்று மும்பை அணியில் இருந்து ரோகித் சர்மா இந்த ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்து விட்டார் என கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.