ஓவர் ஆட்டம் போட்ட ஹர்திக் பாண்டியா… வெச்சு செஞ்ச டோனி… யாருகிட்ட உன் சேட்டையை காட்டுற…

0
Follow on Google News

மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணி மோதிக்கொண்டன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி ஆரம்பத்தில் ரன் எடுக்க திணறியது. சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரகானே மற்றும் ரச்சின் ரவீந்தரா சொற்பரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினர்.

இதனால் ஆரம்பத்தில் சென்னை அணி ரசிகர்கள் கலக்கமடைந்தனர். ஆனால் அதன் பிறகு களம் இறங்கிய ருத்ராஜ் கேய்க்வாட் 40 பந்துகளில் 69 ரன்களையும், சிவம் துபே 38 பந்துகளில் 66 ரன்களையும் குவித்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். அதையடுத்து 14 பந்துகளில் 17 ரன்கள் எடுத்த டேரில் மிட்ச்சல் 19.2 ஓவரில் அவுட் ஆகி வெளியேறினார். கடைசியாக நான்கு பந்துகள் மீதம் இருந்தபோது தோனி களம் இறங்கினார்.

அப்போது ஹர்திக் பாண்டியா பந்து வீசியது தவறான முடிவாக அமைந்தது. அதாவது, சென்னை அணியில் சிவம் துபே சுழற் பந்துவீச்சாளர்கள் வீசும் பந்துகளை எளிதாக சிக்ஸ்க்கு பறக்க விடுவார் என்பதால், அவர் பேட்டிங் செய்ய வந்தபோது மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஸ்பின்னர்களுக்கு ஓவர் கொடுக்கவில்லை. அவர்களுக்கு பதிலாக தானே பந்து வீசினார். ஹர்திக் பாண்டியா வீசிய முதல் ஓவரில் சிவம் துபே மூன்று பவுண்டரிகளை விலாசி 15 ரன்கள் எடுத்திருந்தார்.

ஆனால் அடுத்த ஓவரில் சுதாரித்துக் கொண்ட ஹர்திக் பாண்டியா டுபைக்கு ரெண்டு ரன்கள் மட்டுமே எடுக்க விட்டு விக்கெட்டை எடுத்தார். இதனால், கடைசி ஓவரிலும் தானே பந்து வீசலாம் என்று ஹர்திக் பாண்டியா முடிவெடுத்தார். அதன்படி கடைசி ஓவரில் பந்துவீசிய ஹர்திக் பாண்டியா, டேரில் மிட்ச்சலை முதலில் ஃபோர் அடிக்க விட்டு அதன் பிறகு இரண்டாவது பந்தில் அவரது விக்கட்டை எடுத்தார்.

இதனால் மைதானத்தில் இருந்த மும்பை அணி ரசிகர்கள் ஹர்திக் பாண்டியா சிறப்பாக ஆடி வருவதாக நினைத்து வந்தனர். அதே சமயம், ஹர்திக் பாண்டியாவும் ரசிகர்கள் மத்தியில் தன்னை நிரூபிக்க இதுதான் சரியான தருணம் என்று நினைத்துக் கொண்டு கடைசி நான்கு பந்துகளை தோனிக்கு வீசினார். ஆனால், மகேந்திர சிங் தோனி ஹர்திக் பாண்டியா வீசிய பந்துகளில் ஹட்ரிக் சிக்ஸ் அடித்தார்.

கடைசியாக நான்கு பந்துகளில் 20 ரன்கள் குவித்த மகேந்திர சிங் தோனியை ரசிகர்கள் ஆரவாரம் செய்து கொண்டாடினர். அதே சமயம், ரோகித் சர்மா ரசிகர்கள் தோனி ஹர்திக் பாண்டியாவுக்கு சரியான பதிலடி கொடுத்து விட்டதாக கருத்து தெரிவித்து வந்தனர். நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்தே ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்கள் முழக்கமிட்டு வரும் நிலையில், தற்போது தோனி ஹர்திக் பாண்டியாவை பழி தீர்த்து விட்டதாக சோசியல் மீடியாவில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த போட்டியில் கடைசியாக நான்கு பந்துகளில் 20 ரன்கள் குவித்த மகேந்திர சிங் தோனி, மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் ஆணவத்தை அடக்கியிருப்பதாகவும், பழிதீர்த்திருப்பதாக கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவித்து வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.