ஹர்திக் பாண்டியாவுக்கு ரெய்னா வைத்த ஆப்பு… டி 20 வேர்ல்ட் கப்பில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு வாய்ப்பில்லை…

0
Follow on Google News

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கோலாகலமாக தொடங்கிய 2024 ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வழக்கம்போல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாக விளையாடி புள்ளி பட்டியலில் முதல் ஐந்து வரிசைக்குள்  இடம் பிடித்துள்ளது.  ஆல் ரவுண்டரான சிவம் துபே தற்போது சென்னை அணியில் பேட்டிங் மட்டுமே செய்து வருகிறார், பவுலிங் செய்யவில்லை. ஐபிஎல் தொடரில் எதிரணியினர் வீசும் பந்துகளை சிக்ஸர் பவுண்டரி என பறக்க விடும் சிவம் துபேயின் அசாதாரண ஆட்டத்தை பார்த்து கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் ஆச்சரியமடைந்துள்ளனர்.

சமீபத்தியில்  நடந்த போட்டியில் கூட 27 பந்துகளில் 66 ரன்களை அசால்ட் ஆக எடுத்திருந்தார். இதில் ஏழு சிக்ஸர்கள் மூன்று பவுண்டரிகள் அடங்கும். இந்த ஆட்டத்தை பார்த்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, “சிவம் துபே டி20 உலக கோப்பை இந்திய அணியில் இடம்பெறும் வாய்ப்பை உறுதி செய்து விட்டார்” என்று கூறி பாராட்டி இருந்தார்.  டி20 கிரிக்கெட் அணிக்கு வேகப்பந்து வீசும் ஆல்ரவுண்டர் மிகவும் முக்கியம். அப்படிப் பார்த்தால் தற்போது இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா மட்டுமே ஆல்ரவுண்டர் பேட்ஸ்மேன் ஆக இருக்கிறார். 

ஆனால் அவரும் சமீபத்திய போட்டிகளில் பேட்டிங் பவுலிங் இரண்டிலுமே தடுமாறி வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியாவின் ஆட்டம் திருப்திகரமாக இல்லை என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் இந்திய அணியின் தேர்வு குழுவும் இது குறித்து ஹர்திக் பாண்டியாவிடம் கவலை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இத்தகைய சூழ்நிலையில் ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக சிவம் துபே வை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக பலரும் கூறுகின்றனர். அவ்வளவு ஏன் ரவி சாஸ்திரி கூட,  சிவம் துபேவின் பங்கு இந்தியா அணிக்கு தேவைப்படுவதாக புகழாரம் சூட்டியுள்ளார். அதே சமயம், தற்போது பேட்டிங்கில் கலக்கி கொண்டிருக்கும் சிவம் துபேவுக்கு பவுலிங்கில் அவரது திறமையை காட்ட சென்னை அணி அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி வலியுறுத்தியுள்ளார்.

இம்பேக்ட் விதியால் சிவம் துபேவுக்கு பந்து வீசும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று சுட்டிக் காட்டிய ரவி சாஸ்திரி, “சென்னை அணிக்க வேண்டுமானால் சிவம் துபைவின் பவுலிங் அவசியமற்றதாக இருக்கலாம் ஆனால் இந்திய அணியில் அவர் கண்டிப்பாக இரண்டு ஓவராவது வீச வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். ஆகவே சிஎஸ்கே இப்போதே சிவன் துபேய்க்கு பவுலிங் வாய்ப்பை கொடுத்து அவரை தயார் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

ஒருவேளை சிவம் துபேய் தற்போதைய ஐபிஎல் தொடரின் சிறப்பாக பௌலிங் வீசி தனது திறமையை நிரூபித்து விட்டால், ஹர்திக் பாண்டியாவுக்கு இந்திய அணியில் இடம் இருக்காது என தகவல் வெளியாகியுள்ளது.  இந்நிலையில், டி20 உலக கோப்பை இந்திய அணியில் சிவம் துபைக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ரெய்னா உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், ஆல்ரவுண்டரான பாண்டியா இந்திய அணியில் இடம் பெறமுடியாத வகையில் ரெய்னா உட்பட பலரும் ஆப்பு வைக்க தொடங்கிவிட்டார்கள் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.