இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்துள்ளதாக அறிவிக்கப்பட்டதில் இருந்தே அவர் அடுத்தடுத்து நிறைய பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார். கிரிக்கெட் ரசிகர்கள் எவரும் ஹர்திக் பாண்டியாவை மும்பை அணியின் கேப்டனாக ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. இதனால், மும்பை அணி ரசிகர்கள் நெகட்டிவ்வான விமர்சனங்களையும் வெறுப்பையும் அவர் மீது கொட்டி தீர்த்தனர்.
இதைத்தொடர்ந்து, t20 உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இந்த பட்டியலில் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டது மீண்டும் விமர்சிக்கப்பட்டது. கிரிக்கெட் ஆர்வலர்கள் பலரும் ரிஷப் பண்ட் துணை கேப்டன் பதவிக்கு பொருத்தமாக இருப்பார் என்று கருத்து தெரிவித்து வந்தனர். ஏனெனில், அவர் சில சர்வதேச போட்டிகளில் இந்திய அணியை சிறப்பாக வழி நடத்திச் சென்றிருக்கிறார்.
முக்கியமாக அவரது கேப்டன்சி தோனியின் உள்ளுணர்வைச் சார்ந்த இருக்கும். இதனாலேயே பலரும் ரிஷப் பண்டை துணை கேப்டனாக வேண்டும் என்று பரிந்துரைத்தனர். இப்படியான நிலையில், கடந்த ஜூன் ஒண்ணாம் தேதி நியூயார்க்கில் உள்ள ஸ்டேடியத்தில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி போட்டியின் போது மைதானத்தில் நடந்த சில நிகழ்வுகள் ரோகித் சர்மாவுக்கு அடுத்ததாக ரிஷப் பண்டு தான் கேப்டன் பதவிக்கு பொருத்தமானவராக இருப்பார் என்று நினைக்க வைத்துள்ளது.
அதாவது, இந்த போட்டியின் போது ரிவ்யூ கேட்பது , ஃபீல்டிங் நிறுத்துவது மற்றும் பந்துவீச்சாளர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றிய பல்வேறு ஆலோசனைகளையும் ரிஷப் பண்ட் தொடர்ந்து ரோகித் சர்மாவுக்கு சொல்லிக் கொண்டே இருந்தார். ஆனால் துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா போட்டியின் போது ரோஹித் சர்மாவின் பக்கத்தில் கூட செல்லவில்லை.
இந்த காட்சிகளை எல்லாம் பார்க்கும் பொழுது,ரோகித் சர்மாவுக்கு பிறகு இந்திய அணியை வழிநடத்திச் செல்ல ஏற்ற வீரர் ரிஷப் பண்டு தான் என்று தோன்ற வைக்கிறது. அது மட்டும் இல்லாமல், இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்பதற்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் பேராதரவு அவசியமாகும். கடந்த 15 ஆண்டுகளாக டோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா என இந்திய ரசிகர்களின் பெயர் ஆதரவை பெற்ற கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே இந்திய அணியை வழிநடத்திச் சென்று இருக்கின்றனர்.
அப்படி பார்க்கும் பொழுது, சமீப காலமாக ரசிகர்கள் மத்தியில் ஹர்திக் பாண்டியாவின் அந்தஸ்து பலத்த அடி வாங்கி சரிந்து கிடக்கிறது. அதே சமயம் ரிஷப் பண்டின் அதிரடி ஆட்டத்திற்கு ஏராளமான ரசிகர்களின் ஆதரவு கிடைத்து வருகிறது. குறிப்பாக கடந்த சனிக்கிழமை நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது, ரிஷப் பண்ட் களம் இறங்கிய போதும் பின்னர் பேட்டிங் செய்து அரை சதம் அடித்து வெளியேறிய போதும் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்து அவரை கொண்டாடினர்.
ஆனால் ஹர்திக் பாண்டியாவிற்கு இது போன்ற எந்தவித ஆரவாரமும் கூச்சலும் ரசிகர்கள் மத்தியில் எழவில்லை. தற்போது துணை கேப்டனாக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்டியா, கூடிய விரைவில் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்க வேண்டும் என்ற கனவில் இருந்து வருகிறார். ஆனால் இந்த சமயத்தில் ரிஷப் பண்ட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருவதால் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன் கனவுக்கு இடையூறாக இருப்பார் என்று கூறப்பட்டு வருகிறது.