ரோகிணி மகன் தான் கிரிஷ் … கண்டுபிடித்த முத்து… சிறகடிக்க ஆசையில் வசமாக சிக்கிய ரோகிணி…

0
Follow on Google News

விஜய் தொலைக்காட்சியில் ஒருபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசையின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்பார்த்த நிகழ்வு வந்துவிட்டது என்றே சொல்லலாம். அதாவது ரோகினி செய்துவரும் பித்தலாட்டம், பொய் மேல் பொய் சொல்லி விஜயா தலையில் மிளகாய் அரைப்பது மட்டுமில்லாமல் மனோஜ் உட்பட ஒட்டுமொத்த குடும்பத்துக்கு விபூதி அடித்து வருகிறார். மேலும் செய்வது எல்லாம் போர்ஜரி வேலை, இதில் முத்து – மீனா இருவரையும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இன்சல்ட் செய்வது ரோகிணி மீது ரசிகர்களுக்கு கடும் வெறுப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் ரோகிணி செய்யும் பித்தலாட்டத்தில் ஒவ்வொரு முறையும் இதோ இம்முறை வசமாக மாட்டிவிடுவார் என ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்தால், ஏதாவது செய்து சமாளித்து ஒவ்வொரு முறையும் தப்பித்து விடுகிறார் ரோகிணி ஆனால், தற்பொழுது செய்துவரும் பித்தலாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதுக்கு என்ட் கார்டு போடும் வகையில் வசமாக கையும் களவுமாக சிக்கியுள்ளார் ரோகினி.

ரோகினி ஏற்கனவே திருமணம் முடிந்து ஒரு குழந்தை இருப்பதை மறைத்து மனோஜை திருமணம் செய்துள்ளார், இந்நிலையில் ரோகினி மகன் க்ரிஷ்க்கு விபத்து ஏற்பட்டு க்ரிஷ் மற்றும் பாட்டி இருவரையும் முத்து மற்றும் மீனா இருவரும் சிகிச்சை பெரும் வரை எங்க வீட்டிலே இருங்க என அழைத்து வருகிறார். இது ரோகிணிக்கு மிக பெரிய சிக்கலை ஏற்படுத்தி தருகிறது. இந்நிலையில் வீட்டில் இருக்கும் அனைவரையும் ரோகினி திட்டம் போட்டு வெளியில் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு இடத்திற்கு அனுப்பி வைக்கிறார்.

தற்பொழுது வீட்டில் ரோகிணி , அவருடைய அம்மா , கிரிஷ் மட்டும் உள்ளார்கள், அப்போது ரோகிணி தன்னுடைய அம்மாவிடம் கிரிஷை எதற்கு இங்கே கூட்டிட்டு வந்த? நீ வீட்டிற்கு கூட்டிட்டு போயிருக்க வேண்டியதுதானே? என்று கேட்க, அதற்கு அவருடைய அம்மா அவன் கண்ணுல அடிபட்டு ரத்தம் கொட்டிச்சு உனக்கு இப்ப கூட உன்னோட சந்தோசம் தான் முக்கியமா? பிள்ளையை பற்றி நீ நினைச்சு கூட பாக்க மாட்டியா? என்று திட்ட.

அதற்கு ரோகிணி எப்படி நான் அவனை பற்றி நினைக்காமல் இருப்பேன். அவன் நான் பெத்த புள்ள அம்மா என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது தூங்கிக் கொண்டிருந்த கிரிஷ் வெளியே வந்து ரோகிணியும் அவருடைய அம்மாவும் பேசுவதை கேட்டு விடுகிறார். பிறகு ரோகிணியிடம், “அத்த… நீதான் என்னுடைய அம்மாவா?” என்று க்ரிஷ் கேட்க, ஆமா நான் தான் உன்னோட அம்மா என் பேரு ரோகினி என்று சொல்ல கிரிஷ் ரோகிணியை கட்டிப்பிடிக்க, இருவரும் தாய் – மகன் பாசத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

இந்நிலையில் இனிமேல் தான் ரோஹிணிக்கு பிரச்சனை தொடங்க இருக்கிறது, ரோகிணி தான் என்னுடைய அம்மா என்று வீட்டில் இருக்கும் யாரிடமாவது கிரிஷ் உளறிவிட்டால், ரோகிணியின் வசமாக சிக்கி விடுவார், அதனால் குடும்பத்தில் இருக்க கூடியவர்கள் வெளியில் சென்றுள்ள நிலையில் அவர்கள் வீட்டுக்கு வருவதற்குள் தன்னுடைய அம்மாவிடம் சொல்லி கிரிஷ் அழைத்து சிகிச்சை பெரும் வரை தன்னுடைய தோழி வித்யா வீட்டில் தங்கிக்க சொல்கிறார்.

இதனை தொடர்ந்து ஒரு வழியாக வீட்டில் இருந்து கிரிஷ் மற்றும் அவருடைய அம்மா இருவரையும் ரோகிணி வீட்டை விட்டு வெளியே அனுப்பி வைத்து விடுகிறார். இந்நிலையில் குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் வந்து பார்க்கும் போது கிரிஷ் மற்றும் அவருடைய அம்மா இருவரும் வீட்டில் இல்லை, இதில் விஜயா ரோகிணியை பரவாயில்லை அவர்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பி வெச்சுட்ட என ரோகிணியை பாராட்டுகிறார். அந்த வகையில் இம்முறையும் குடும்பத்தினரிடம் சிக்காமல் தப்பித்து கொள்கிறார் ரோகிணி,

ஆனால் அடுத்து இனி வரும் நாட்களில் முத்து – மீனா கண்ணில் மீட்டும் கிரிஷ் மற்றும் அவருடைய பாட்டி சிக்குகிறார்கள். அப்போது முத்துவிடம் கிரிஷ் ஒன்னு சொல்ல, பாட்டி ஓன்று சொல்லி சமாளிக்க முத்துவுக்கு இவர்களுக்கும் பார்லர் அம்மாவுக்கு ஏதோ ஒரு தொடர்பு இருக்கு என் ரோகிணி மீது சந்தேகம் வருகிறது, ஒரு கட்டத்தில் ரோகிணியின் மகன் தான் கிரிஷ் என்கிற சந்தேகம் வலுக்கிறது அதனை தொடர்ந்து கிரிஷ் மற்றும் அவருடைய பாட்டி குறித்து விசாரிக்க தொடங்கும் முத்துவுக்கு ரோகிணி பற்றி பல விஷயங்கள் தெரியவரும் என கூறப்படுகிறது.