ஹர்திக் பாண்டியா உடன் ஏற்பட்ட மோதல் கைகலப்பில் முடிந்தது… உள்ளே புகுந்து விளக்கி விட்ட வீரர்கள்…

0
Follow on Google News

இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் 2024 ஐ பி எல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை வெல்லும் முனைப்பில் ஒவ்வொரு அணியும் தீவிரமாக விளையாடி வருகிறது. ஆனால், ஒன் பேமிலி என்று பல வருடங்களாக மாஸ் காட்டி வந்த மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் ஆரம்பம் முதலே மிகவும் தடுமாறி வருகிறது.

ஏற்கனவே கேப்டன்சி பிரச்சனையால் மும்பை அணியில் பல்வேறு சர்ச்சைகள் பூதாகரமாக வெடித்துக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது அந்த அணி வீரர்கள் இடையே ஒற்றுமையில்லாமல் மோதல் ஏற்பட்டு அணியில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மும்பை அணி நிர்வாகம் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது.

இதற்கு முன்பு மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்ட ரோகித் சர்மா, அந்த அணிக்கு ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை பெற்றுக் கொடுத்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக, ஒரு முறை கூட மும்பை அணி ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை. இதனாலையே மும்பை அணி நிர்வாகம் ரோகித் சர்மாவின் கேப்டன்சி பறவையை பறித்து ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக அழைத்து வந்தது.

கேப்டனை மாற்றினால் இந்த முறை ஐபிஎல் கோப்பையை வென்று விடலாம் என்று தப்பு கணக்கு போட்ட மும்பை அணி நிர்வாகத்திற்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது. ஆம், ஹர்திக் பாண்டியா கேப்டனாக வந்தது அணியில் உள்ள வீரர்களுக்கும் மும்பை அணி ரசிகர்களுக்கும் சுத்தமாக பிடிக்கவில்லை. ஒரு பக்கம் எதிர்ப்பு தெரிவித்து வரும் ரசிகர்கள், மற்றொரு பக்கம் அணியில் உள்ள வீரர்கள் ஒத்துழைக்காதது என சுற்றிலும் நெருக்கடியை சந்தித்து வந்த ஹர்திக் பாண்டியா, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். இதன் விளைவு கேப்டன்சியிலும் படுமோசமாக சொதப்பி வந்தார்.

இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. மீதமுள்ள எட்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து 6 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதனால் மும்பை அணி நிர்வாகமும் மும்பை அணி ரசிகர்களும் ஏமாற்றத்தில் உள்ளனர். மேலும் ஒட்டுமொத்த ரசிகர்களும் ஹர்திக் பாண்டியாவை ரோஸ்ட் செய்து வருகின்றனர்.

இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருக்கும் ஹர்திக் பாண்டியா, என்ன செய்வது என்று தெரியாமல் அணி வீரர்கள் மீது கோபத்தை காட்டி இருக்கிறார்.குறிப்பாக, திலக் வருமா ஒரு போட்டியில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்திருந்தாலும், ஹர்திக் பாண்டியா அவர் மீது குறை கூறி இருக்கிறார்.
அதாவது, திலக்கு வர்மா அந்த போட்டியில் முதல் பந்தில் இருந்தே அடித்து ஆடி இருக்க வேண்டும் என்றும், திலக்கு வர்மாவிடம் ஆட்டம் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்றும் ஹர்திக் பாண்டியா குற்றம் சாட்டியதாக சொல்லப்படுகிறது.

இதனால் ஹர்திக் பாண்டியாவுக்கும் திலக் வர்மாவுக்கும் இடையில் பிரச்சனை இருக்கலாம் என்று கூறப்பட்டு வந்தது. இப்படியான நிலையில், கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி தோல்வியை தழுவியது. இந்த போட்டிக்கு பிறகு திலக்கு வர்மா ஹர்திக் பாண்டியா இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், பின்னர் கைகலப்பு உருவானதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் அந்த சமயத்தில் ரோஹித் சர்மா உட்பட சக வீரர்கள் அவர்களை விலக்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சம்பவத்தின் மூலம் மும்பை அணி வீரர்களிடையே பிரச்சனை இருப்பது உறுதியாகி இருக்கிறது.