சக வீரர்களால் தொடர் அவமரியாதை… மனம் விட்டு நடந்ததை போட்டுடைத்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்…

0
Follow on Google News

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாகவும், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக இருக்கும் ஹர்திக் பாண்டியா துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர 3வது வீரராக களமிறங்க விராட் கோலி, யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 4வது வரிசைக்கு சூர்யகுமார் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பந்த், சஞ்சு சாம்ஸனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக வீரர்கள் யாருக்கும் இடம் இல்லாமல் போனது. ஐபிஎல் வில் கலக்கிய தினேஷ் கார்த்திக்கும் இடம் இல்லாமல் போய்விட்டது. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அதற்கு முன்னதாக நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் பெங்களூரு அணியை, ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

எலிமினேட்டர் சுற்றில் ஆர்சிபி அணி தோல்வி அடைந்ததை அடுத்து, பிளே ஆஃபில் இருந்து வெளியேறியதால், அந்த அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான தினேஷ் கார்த்திக்கும் தனது ஓய்வை அறிவித்தார். கடந்த 2008 முதல் டெல்லி, குஜராத், கொல்கத்தா போன்ற பல்வேறு அணிகளுக்காக விளையாடிய அவர் 2015 சீசனில் மும்பை அணியுடன் இணைந்து சாம்பியன் பட்டம் வென்றார்.

இறுதியாக பெங்களூரு அணியில் விளையாடிய அவர் வர்ணனையாளராக மாறிய பின்பும் 2022 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக விளையாட தேர்வாகி கம்பேக் கொடுத்தார். அதே போல இந்த வருடமும் ஓரளவு நன்றாக செயல்பட்ட அவர் 38 வயதை கடந்து விட்டதால் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அந்த வகையில் 17 வருடங்கள் ஐபிஎல் தொடரில் விளையாடிய அவர் தோனிக்கு பின் அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகள் எடுத்த விக்கெட் கீப்பராக சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, ரோஹித் சர்மா ஆகியோருக்கு எதிராக விளையாடிய போது அவர்கள் செய்த ஸ்லெட்ஜிங் பற்றி தினேஷ் கார்த்திக் மனம் திறந்துள்ளார். குறிப்பாக பெங்களூருவுக்கு எதிராக விளையாடி அவுட்டாகும் போதெல்லாம் விராட் கோலி தம்மை பென் ஸ்டோக்ஸ் உச்சரிப்பை மையப்படுத்திய பிரபல இந்தி கெட்ட வார்த்தையில் திட்டுவார் என்று கார்த்திக் கூறியுள்ளார்.

இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசுகையில்,“ஆர்சிபி அணிக்கு எதிராக நான் விளையாடிய ஒவ்வொரு முறையும் என்னுடைய கேட்ச்சை பிடித்து விட்டால் விராட் கோலி வாயில் பென் ஸ்டோக்ஸ் வார்த்தை கண்டிப்பாக வரும். ஆனால் அது வழியனுப்பும் விஷயமாகும். “அதே போல இவருக்கு எதிராக லெக் ஸ்பின்னர் நன்றி சொல்லிவிட்டு எளிதாக பந்து வீசலாம்” என்று ஹர்திக் பாண்டியா என்னை ஸ்லெட்ஜிங் செய்வார்”

ஒருவேளை நான் நன்றாக விளையாடினால் “இப்போது இவர் கொஞ்சம் முன்னேறி விட்டார் போல” என்று பாண்டியா சொல்வார். நல்ல நண்பரான அவர் “வர்ணனையாளராக மாறிய பின்பும் இவர் தன்னுடைய ஆட்டத்தில் வேலை செய்துள்ளார்” என்று என்னை கிண்டலடிப்பார். இந்த வருடம் ரோகித் சர்மாவும் என்னை கொஞ்சம் இந்தியாவுக்காக விளையாடும் ஆசையை காட்டி வம்பிழுத்தார்” என்று கூறினார்.

அதாவது இந்த வருடம் மும்பைக்கு எதிராக சிறப்பாக விளையாடிய போது “2022 போல 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாட முயற்சிக்கிறீர்களா சபாஷ் டிகே” என்று சொல்லி தினேஷ் கார்த்திக்கை களத்திலேயே ரோஹித் சர்மா கலாய்த்தார். இப்படி ரோஹித், பாண்டியா, விராட் கோலி ஆகியோர் தம்மை நட்பாக ஸ்லெட்ஜிங் செய்ததை பெரிதுபடுத்தியதில்லை என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.