அஜித் .. நீயெல்லாம் மனுசனா.. நீ ஏமாற்றிய ஆதாரம் இதோ.. அஜித்தின் முகத்திரையை கிழித்த பிரபல தயாரிப்பாளர்..

0
Follow on Google News

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் தனது மகன் ஆத்விக் பிறந்த நாளை கொண்டாடிய அஜித் சிறிது நாட்களுக்கு முன்பு உள்ள திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சாதராண மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து அவர்க்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அதனைத் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றுள்ள அஜித், ஓய்வு நேரத்தில் தனது பைக்கில் உலா வந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி டிரெண்டானது. இந்நிலையில் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் அஜித் குறித்து பல்வேறு குற்றசாட்டுகளை தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். அவர் பேசுகையில், “அஜித் தன்னை தானே சுயம்பு என்று சொல்லிக் கொள்கிறார்.

சினிமாவில் யாருடைய உதவியும் இல்லாமல் மேலே வந்து கிழித்து விட்டேன் என்கிறார். அப்படி பார்த்தால் சிவாஜிக்கு யார் பின்னால் இருந்து உதவினார்கள். கமல்ஹாசனுக்கு, ரஜினிகாந்திற்கு அவர்களது குடும்பம் சினிமாவில் மேலே வர உதவியதா என்ன… ஒரு சில சினிமா கலைஞர்களுக்கு அவர்களது குடும்பம் பின்னணியாக இருந்திருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அஜித், தான் சாதித்து விட்டதாக சொல்லிக் கொள்கிறார்.

அப்படி என்ன நீ சாதித்து விட்டாய்… உன்னை போல் சாதித்தவன் 100 பேர் இருக்கிறார்கள்.. ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உன்னை போல சாதித்தவர்கள் பல பேர் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் பொழுது நான் கிழித்து விட்டேன்…சாதித்து விட்டேன்… கோழி பிரியாணி வைத்தேன்..ஆடு பிரியாணி வைத்தேன்… என்று சொல்லிக்கொள்கிறார்.

என்னடா பண்றீங்க.. நான் கூடத்தான் நன்றாக சமைப்பேன்.. ஆனால் எனக்கு பிரியாணி வைக்க தெரியாது. காரணம் என்னவென்றால் நான் ஆடு கோழிகளை வெட்டுவதில்லை; யார் வேண்டுமென்றாலும், தன்னுடைய மனைவிக்காக சமைக்கலாம் அதில் என்ன தவறு கிடையாது. நாங்கள் தென்ஆப்பிரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினோம். அந்த நிகழ்ச்சியில் பல பாடகர்கள் கலந்து கொண்டார்கள்.

அவர்களுக்கெல்லாம் நானும் என்னுடைய மனைவியும்தான் இணைந்து சமைத்துக் கொடுத்தோம். இதில் என்ன இருக்கிறது… நடிகனாக இருந்தால் சமைக்க கூடாதா என்ன.. உனது மனைவி ஷாலினி மிக நன்றாக சமைப்பாள் என்று எனக்கு தெரியும். அவளுக்கு நீ நன்றாக சமைத்து கொடு… உனக்கு உணவு ஸ்ரெஸ் பஸ்டராக செயல்படுகிறது. அப்படியானால் அதை எதற்கு நீ நான் செய்கிறேன் சொல்லிக் கொள்கிறாய்.

ஜென்டில்மேன் என்று சொன்னால் சமைக்க வேண்டுமா என்ன? ஜென்டில்மேன் என்பது உன்னுடைய நடத்தையில் தெரிய வேண்டும். அதில் உன்னுடைய ஜென்டில்மேன் தனத்தை காண்பிக்கலாம். வாங்கிய பணத்தை முதலில் திருப்பி கொடு.. வாங்கியதற்கு ஆதாரம் கொடுத்தால் அவனை அழைத்துப் பேசு.. நீ ஏன் மணிரத்னம் போல் பணிந்து ஓடுகிறாய். தயவு செய்து சாவதற்குள் ஒரு நாளாவது மனிதனாக மாறு..

நீ என்னிடம் பணம் வாங்கியது உண்மையா இல்லையா என்பதை நிரூபி. நான் அதை ஆதாரத்தோடு நிரூபித்து விட்டேன். இல்லை என்று நீ நிரூபித்து விட்டால்,நான் வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்க போகிறேன்.” நடிகர் அஜித்தை கிழித்து தொங்கவிட்டு விட்டார் தயாரிப்பாளர் மாணிக்க நாராயணன்.