தோனியை கிரிக்கெட்டில் இருந்து காலி செய்ய கோலி போட்ட மாஸ்டர் பிளான்… பிசிசிஐ கையில் தான் உள்ளது தோனியின் கிரிக்கெட் வாழ்கை…

0
Follow on Google News

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 2024 ஐ பி எல் கிரிக்கெட் தொடருக்குப் பிறகு ஓய்வை அறிவிப்பார் என்று பல தரப்பினரும் கூறிவரும் நிலையில், சென்னை அணி நிர்வாகம் ஓய்வு குறித்து தோனி என்ன தெரிவித்திருக்கிறார் என்பது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பை போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக தோனி அறிவித்திருந்தார்.

அதன் பிறகு, ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக களம் இறங்கி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்த தோனி, நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கேப்டன் பதவியில் இருந்து விலகி ருத்துராஜ் கெய்க்வாட்டை சென்னை அணியின் புதிய கேப்டனாக நியமித்தார். ஆகவே, இந்த ஐபிஎல் தொடருக்கு பிறகு தோனி தனது ஓய்வை அறிவிப்பார் என்று தொடர்ந்து சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பேசப்பட்டு வந்தன.

அதற்கேற்ப தோனியும் தன்னுடைய கடைசி போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் நடைபெறும் என்று சமீபத்தில் தெரிவித்து இருந்தார். எனவே, இந்த முறை சென்னை அணி நிச்சயமாக ஐபிஎல் கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால், 14 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த சென்னை அணி மே 18ஆம் தேதி நடைபெற்ற பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்து ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பை நழுவ விட்டது.

இது சென்னை அணி ரசிகர்களுக்கு மட்டுமின்றி தோனிக்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. இருப்பினும் தற்போது தோனிக்கு 42 வயதாகிவிட்ட நிலையில், அவர் இந்த ஆண்டு ஓய்வு அறிவிப்பார் என்று தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. இந்நிலையில் சென்னை அணி நிர்வாகம் தோனியின் ஓய்வு குறித்து தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது தோனி சென்னை அணியில் தன் ஓய்வு குறித்து யாரிடமும் கூறவில்லை என்றும், சென்னை அணி நிர்வாகத்திடம் இன்னும் இரண்டு மாதங்கள் காத்திருங்கள் அதன் பிறகு இறுதி முடிவை கூறுகிறேன் என்றும் கூறியதாக சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அதே சமயம் ஏன் இரண்டு மாதங்கள் கால அவகாசம் கேட்கிறார் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இரண்டு மாதங்கள் காத்திருக்குமாறு தோனி கூறியதற்கு ஐபிஎல் தொடரில் தற்போது நடைமுறையில் உள்ள இம்பேக்ட் வீரர் விதி தான் காரணம் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

கடந்த மூன்று ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் வீரர் என்ற விதி உள்ளது. அதன்படி 11 வீரர்களை தாண்டி 12 ஆவதாக ஒரு வீரரை பேட்டிங் அல்லது பவுலிங்கின் போது மாற்ற வீரராக எப்போது வேண்டுமானாலும் களமிறக்கலாம். இந்த இம்பாக்ட் வீரர் விதியை கைவிட வேண்டும் என ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற மூத்த வீரர்கள் பிசிசிஐ-இடம் முறையிட்டுள்ளனர்.

பிசிசிஐ அதை நீக்குவது குறித்து விவாதித்து வருகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் பிசிசிஐ இம்பாக்ட் பிளேயர் விதி குறித்து அதன் முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இம்பாக்ட் பிளேயர் விதி தொடர்ந்து ஐபிஎல் தொடரில் நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டால், தோனி அடுத்த ஆண்டு தொடரில் இம்பாக்ட் வீரராக இடம் பெறுவார் எனக் கூறப்படுகிறது.

அதாவது விக்கெட் கீப்பிங் செய்யாமல், பேட்டிங்கின் போது கடைசி ஓவர்களில் பேட்டிங் செய்யும் சூழ்நிலை ஏற்பட்டால், அப்போது மட்டும் அவர் வந்து பேட்டிங் செய்வார் எனக் கூறப்படுகிறது. ஆனால் இம்பாக்ட் வீரர் விதியை கைவிட வேண்டும் என விராட் கோலி பிசிசிஐ-இடம் முறையிட்டு வருவதற்கு பின்னணியில் தோனியை அடுத்த ஐபிஎல் மேட்ச்சில் விளையாடாமல் செய்வதற்கான மாஸ்டர் பிளான் தான் என தோனி ரசிகர்கள் தெரிவித்து வருவது குறிப்பிடதக்கது.