சொதப்பிய ருதுராஜ்… நீயெல்லாம் எதுக்கு விளையாட வரணும்… உனக்கு இது தான் கடைசி… செம்ம டோஸ் விட்ட தோனி…

0
Follow on Google News

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் சென்னையை 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ வீழ்த்தியது. சேப்பாக்கத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை கேப்டன் ருதுராஜ் 108*, சிவம் துபே 66 ரன்கள் எடுத்த உதவியுடன் 211 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அதை சேசிங் செய்த லக்னோ அணிக்கு கேப்டன் கேஎல் ராகுல், நிக்கோலாஸ் பூரான் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க தவறினர்.

ஆனாலும் 3வது இடத்தில் களமிறங்கி சென்னை பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்ட மார்க்கஸ் ஸ்டோனிஸ் 13 பவுண்டரி 6 சிக்சருடன் சதமடித்து 124* (63) ரன்கள் குவித்து 19.3 ஓவரில் லக்னோவை வெற்றி பெற வைத்தார். அதனால் பதிரனா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தும் 8 போட்டிகளில் 4வது தோல்வியை பதிவு செய்த சென்னை புள்ளிப்பட்டியலில் பின்னடைவை சந்தித்தது.

முன்னதாக இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் வீரர் எம்எஸ் தோனி பேட்டிங்கில் கடைசி பந்தை மட்டுமே எதிர்கொண்டார். ஆனால் அதில் பவுண்டரியை அடித்த அவர் மீண்டும் தம்மை காண வந்த ரசிகர்களுக்கு விருந்து படைத்து சிறந்த ஃபினிஷர் என்பதை நிரூபித்தார். சிஎஸ்கே அணியின் இந்த தோல்விக்கு ஜடேஜா, தீபக் சஹர் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்சி முக்கிய காரணமாக அமைந்துள்ளது. சிஎஸ்கே அணியின் பேட்டிங்கின் போது நம்பர் 4ல் களமிறங்கிய ஜடேஜா, அதிரடியாக ரன்கள் சேர்க்காமல் ஒருநாள் ஆட்டத்தை போல் 18 பந்துகளில் 16 ரன்களை மட்டுமே சேர்த்தார்.

இதனால் இவருக்கும் சேர்த்து ருதுராஜ் அதிரடியாக ஆட வேண்டிய தேவை எழுந்தது. அதேபோல் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்சியில் செய்த தவறுகளும் தோல்விக்கு காரணமாக உள்ளது. பதிரானா மற்றும் முஸ்தஃபிசுர் ரஹ்மான் இருவரும் டெத் ஓவர்களில் வீசப் போகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிய பின், கடைசி 5 ஓவரில் ஒரு ஓவரை யார் வீசப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது. அப்போது 16வது ஓவரை ஷர்துல் தாக்கூர் வீசி 20 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

இதில் 16 முதல் 19 ஓவர்களை முஸ்தஃபிசுர் ரஹ்மான் மற்றும் பதிரானா வீசியிருந்தால், கடைசி ஓவரை அதிக ரன்களுடன் ஷர்துல் தாக்கூர் கைகளில் ஒப்படைத்திருக்கலாம். ஓவருக்கு 30 ரன்களுக்கு மேல் இருக்கும் பட்சத்தில் நிச்சயம் ஷர்துல் தாக்கூர் நம்பிக்கையுடன் வீசி இருப்பார். ஏற்கனவே சிஎஸ்கே அணிக்காக இதுபோன்ற செயல்களை செய்தவர் தான் அவர். ஆனால் ருதுராஜ் கெய்க்வாட் செய்த தவறு தோல்விக்கு முக்கிய காரணமாகியது.

அத்துடன் சேப்பாக்கத்தில் எப்போதுமே 2 ஸ்பின்னர்கள் ரன்களை கொடுத்தாலும் கூட 8 ஓவர்களை வீசினால் விக்கெட்டுகளை எடுத்து வெற்றியில் பங்காற்றுவார்கள். ஆனால் இப்போட்டியில் ஜடேஜா மற்றும் மொய்ன் அலி ஆகியோருக்கு கேப்டன் ருதுராஜ் தலா 2 ஓவர்கள் வீதம் மொத்தமாக 4 ஓவர்கள் மட்டுமே கொடுத்தது மறைமுக காரணமானது. அதேபோல் சிஎஸ்கே அணியின் தீபக் சஹர் நேற்றைய ஆட்டத்தில் மோசமான ஃபீல்டிங் மூலமாக சிஎஸ்கே அணியை வெற்றியை தாரை வார்த்துள்ளார்.

ஹூடா கொடுத்த கேட்சை பிடிக்காமல் சிக்சருக்கு பந்தை அனுப்பியது, 19வது ஓவரில் பதிரானா பவுலிங்கில் அடிக்கப்பட்ட பந்தை பிடிக்காததால் பவுண்டரி விட்டுக் கொடுத்தது, ஸ்டாய்னிஸ்-க்கு ஒரு பவுண்டரியை கொடுத்தது என்று தீபக் சஹர் வேறலெவல் சம்பவம் செய்தார். இதனால் தோனியே கடுப்பாகியுள்ளார். எனவே இப்போட்டி முடிந்தப் பிறகு, ஓய்வு அறையில் அணி மீட்டிங் போட்டுள்ளனர்.

அப்போது பேசிய தோனி, ”தீபக் சஹாருக்கு என்னதான் ஆச்சு? பீல்டிங்கில் மிகவும் மந்தமாக இருந்ததற்கு காரணம் என்ன? மீண்டும் காயம் ஏற்பட்டு விடுமோ என பயந்தால் ஏன் விளையாட வேண்டும். உன்னிடம் அடிக்கப்பட்ட பந்துகளில், நீ மட்டும் மூன்று பவுண்டரிகளை விட்டுவிட்டாய். இது மிகவும் தவறு. அடுத்த முறை இதே தவறு நடந்தால், அடுத்து வாய்ப்பே வழங்கப்படாது” என கோபத்தில் பேசியுள்ளார். தற்போது இந்த தகவல் தான் இணையம் முழுதும் பரவி வருகிறது.