சிஎஸ்கே பிளே ஆப் போவதில் மிக பெரிய சிக்கல்… இது மட்டும் நடந்துச்சுனா சிஎஸ்கே தப்பிச்சது… இல்லை சோலி முடிந்தது…

0
Follow on Google News

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 2024 ஐ பி எல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த மார்ச் மாதம் தொடங்கிய 17 வது ஐபிஎல் சீசன் மே மாதம் இறுதியில் முடிவடைய உள்ளது. இந்நிலையில், வருகிற மே 18ஆம் தேதி சனிக்கிழமை சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே ஆன போட்டியை காண ஒட்டுமொத்த கிரிக்கெட் ஆர்வலர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் இந்தப் போட்டி நடப்பு சீசனிலேயே மிக முக்கியமானதாக இருக்கும். ருதுராஜ் தலைமையிலான சென்னை அணி இந்த சீசனில் இதுவரை 7 போட்டிகளில் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதே சமயம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 12 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் எனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள பெங்களூருக்கு அணிக்கு எதிரான போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். ஒருவேளை சென்னை அணி அந்த போட்டியில் தோற்று விட்டால் அது மிகப்பெரிய பின்னடைவாக அமைந்து விடும். இதனாலேயே பெங்களூரு அணி ரசிகர்களும் சென்னை அணி ரசிகர்களும் இந்த போட்டியை பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இவ்வாறு ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் இந்த ஆட்டத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில், சனிக்கிழமை அன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களின் வானிலை கணிப்பின்படி, ஒரு வேலை அன்றைய தினம் பெங்களூருவில் மழை பெய்தால் சென்னை பெங்களூர் அணி இடையேயான ஆட்டம் தடைபடும். பலத்த மழை காரணமாக ஒரு ஓவர் கூட வீச முடியாமல் அன்றைய ஆட்டம் தடைபட்டால் சென்னை அணி 15 புள்ளிகளை பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

மாறாக அன்றைய தினம், இரு அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது லேசாக மழை குறுக்கிட்டால் ஆட்டத்தின் ஓவர்கள் குறைக்கப்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு ஓவர்களை குறைக்கும் பட்சத்தில் அன்றைய ஆட்டம் சென்னை அணியை விட பெங்களூரு அணிக்கு சாதகமாகத்தான் இருக்கும்.ஏனெனில் சின்னசாமி ஸ்டேடியம் அதிக அளவில் ரன் எடுப்பதற்கு ஏதுவான பிட்ச்சை கொண்டுள்ளது.

இப்படிப்பட்ட பிச்சில் எட்டு ஓவர்கள் இல்லை ஐந்து ஓவர்கள் குறைக்கப்பட்டாலும் டாஸ் என்பது முக்கியமானதாக மாறிவிடும். ஆம் சென்னை அனிதா என்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தால் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இல்லையெனில் அது சென்னை அணிக்கு பெரிய சரிவை ஏற்படுத்தி விடும். ஓவர்கள் குறைக்கப்படும் பட்சத்தில் பெங்களூரு அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த கூடும்.

முக்கியமாக, விராட் கோலி, டூ ப்ளசிஸ், தினேஷ் கார்த்திக், கேமரூன் போன்ற பெங்களூரு அணி வீரர்கள் அதிரடி காட்டுவார்கள். அதுமட்டுமில்லாமல் முகமது சிராஜும் தற்சமயம் நல்ல ஃபார்மில் இருக்கிறார். எனவே ஓவர்கள் குறைக்கப்படும் பட்சத்தில் சிஎஸ்கே அணி தடுமாற கூடும். அதே சமயம், மழை பெய்தால் சென்னை அணியில் உள்ள சுழற் பந்துவீச்சாளர்களையும் பயன்படுத்த முடியாது.

எனவே சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் எனில் மழை குறுக்கிட கூடாது. அவ்வாறு பெய்தாலும் சுத்தமாக போட்டி நடைபெறாத அளவிற்கு நன்றாக பெய்ய வேண்டும். இல்லையெனில் சென்னை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ய வேண்டும். இதுதான் சென்னை அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும் என்று பல்வேறு தரப்பினரும் கூறுகின்றனர்.