இந்திய கோடீஸ்வரர்கள் வரிசையில் 82 வது இடத்தில் உள்ள தமிழகத்தின் மிக பெரிய தொழில் அதிபர் கலாநிதி மாறனின் ஒரே மகள் தான் SRH உரிமையாளர் காவ்யா மாறன். சுமார் 24ஆயிரம் கோடிக்கு அதிபரான கலாநிதிமாறன் தொலைக்காட்சி சேனல்கள், செய்தித்தாள்கள், வார இதழ்கள், செயற்கைக்கோள் சேவைகள், தயாரிப்பு வசதிகள் ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன் போன்ற பல துறைகளில் வெற்றிக்கொடி நாட்டி வருகின்றவர் கலாநிதி மாறன்.
காவ்யா மாறன் ஒரே மகள் என்பதால் தந்தை கலாநிதிக்குச் சொந்தமான சொத்துகள் அனைத்தும் காவ்யாவுக்குதான். எனவே, காவ்யா மாறன் சுமார் 24,000 கோடிக்குச் சொந்தக்காரர் என்றே சொல்லலாம். ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகத்தை காவ்யா மாறன் கவனிக்கிறார். சன் டிவி இ-காமர்ஸ் வணிகத்திலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் காவ்யா மாறன்.
1992ம் ஆண்டு சென்னையில் பிறந்த காவ்யா மாறன், பள்ளிப் படிப்பை சென்னையில். பின்னர் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வணிகவியலில் பட்டம் பெற்றவர், பிறகு லண்டன் சென்று எம்பிஏ முடித்தார். காவ்யாவின் குடும்பம் அரசியல் மற்றும் வணிகம் பின்னணி கொண்டவை, SRH அணியின் உரிமையாளரான காவ்யா மாறன், கடந்த ஆண்டு டிசம்பரில் ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் நடந்தபோது காவ்யா மாறன் ஊடக வெளிச்சத்துக்கு வந்தார்.
அவரது அணி ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸை 20 கோடி ரூபாய்க்கு வாங்கி மற்ற அணி உரிமையாளர்களை திக்குமுக்காட செய்துவிட்டார், அந்த ஏலத்தில் மிகவும் உயர்ந்த விலைக்கு எடுக்கப்பட்ட வீரர் பாட் கம்மின்ஸ் தான். அந்த வகையில் அதிக விலை கொடுத்து ஒரு வீரரை வாங்கியது காவ்யா மாறன் தான், அப்போது காவ்யா மாறனை பார்த்து எவ்வளவு தொகை கொடுத்து வாங்கியதை மற்ற அணியின் உரிமையாளர்கள் கிண்டல் செய்து சிரித்தனர்.
ஆனால் SRH இறுதி போட்டிக்கு சென்ற போது தான் ஏலத்தின் போது கிண்டல் செய்து சிரித்தவர்களுக்கு தெரிந்தது, காவ்யா மாறன் அதிக விலை கொடுத்து ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸை வாங்கியது சரி என்று, அந்த வகையில் புலிக்கு பிறந்தது பூனையகுமா.? என்பதை நிறுவித்தவர் காவ்யா.இந்த சீசன் தொடங்கியது முதல் ஐபிஎல் போட்டியில் அதிக கவனம் பெற்றவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன்தான்.
SRH விளையாடும்போது காவ்யா மாறன் கொடுத்த ஒவ்வொரு ரியாக்ஷன்ஸூம் அதிகளவில் இளைஞர்களை கவர்ந்தது. இந்நிலையில் இறுதி போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தோல்வி அந்த அணி வீரர்கள், ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியது எனலாம். தோல்வியை விட தோல்வியடைந்த விதமே கூடுதல் வலியை ஏற்படுத்தியிருக்கும். தொடர் முழுவதும் தொடர்ச்சியாக அதிரடி பேட்டிங்கை மேற்கொண்ட சன்ரைசர்ஸ் அணி, இறுதிப்போட்டியில் இப்படி சொதப்பும் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
இந்நிலையில் ஐதராபாத் அணியின் தோல்வியை தாங்கி கொள்ள முடியாமல் அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் கண்ணீர் விட்டு அழுதார். ஆனால், அதை மறைத்து சிரித்தப்படி அவரது அணியின் வீரர்களை கைதட்டி பாராட்டினார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. காவ்யா மாறன் கண்களாகியதை பார்த்த பலரும் காவ்யா மாறனுக்கு ரசிகர்களாகவே மாறிவிட்டனர்.
இந்நிலையில் இது தொடர்பாக இந்தி நடிகர் அமிதபட்சன் தன்னுடைய சமூக வலைதளத்தில் மூலம் காவ்யா மாறனுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார் அதில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் ஆட்டம் ஏமாற்றமளிக்கிறது. ஏனென்றால் ஹைதராபாத் ஒரு சிறந்த அணி. கடந்த ஆட்டங்களில் அவர்கள் சிறப்பாக விளையாடினர். அந்த அணியின் உரிமையாளரான அந்த இளம்பெண் காவ்யா மாறன் , தோல்விக்குப் பிறகு உணர்ச்சிவசப்பட்டு அழுதது என் மனதை பாதித்தது. தான் உணர்ச்சிவசப்படுவதை வெளிக்காட்டாமல் கேமராக்களில் இருந்து அவர் முகத்தை திருப்பிக்கொண்டார்.
அதைப் பார்க்கும்போது வருத்தமாக இருந்தது. பரவாயில்லை. நாளை என்பது மற்றுமொரு நாள் மை டியர். ஒருபோதும் பின்வாங்கிவிடாதீர்கள். நாளை என்பது மற்றுமொரு நாள்தான்’ என அமிதாப்பச்சன் ஆறுதல் தெரிவித்துள்ளார்.