எனக்கு இந்திய அணியில் இடம் இல்லையா.? தரமான சம்பவம் செய்த தமிழன் நடராஜன்.. மூக்குடைபட்ட தேர்வு குழு…

0
Follow on Google News

ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐம்பதாவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிக்கொண்டன. இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் நடராஜன், இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தியதன் மூலமாக ஐபிஎல் தொடரில் அதிக விக்கட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இதனால் நடராஜனுக்கு பர்பிள் கேப் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத் அணியின் நட்சத்திர வீரரான டிராவிஸ் ஹெட், நடராஜனுக்கு பர்பிள் கேப்பை அணிவித்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இணையம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் நடராஜனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்காமல் அலைக்கழித்து வரும் பிசிசிஐ தேர்வு குழுவிற்கு தமிழக வீரர் நடராஜன் தக்க பதிலடி கொடுத்திருப்பதாகவும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில்லான வெற்றி பெற்றது. நேற்றைய போட்டி கடைசி ஓவர் வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடைசி ஒரு பந்தில் ஹைதராபாத் அணி வெற்றியை கைப்பற்றியது.
நேற்றைய போட்டியில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களம் இறங்கியது.

இறுதியாக, 20 ஓவர் முடிவில் மூன்று விக்கெட்டுகளை பறிகொடுத்து 201 ரண்களை எடுத்திருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 202 ரண்களை இலக்காக நிர்ணயித்துச் சென்றது. அடுத்ததாக களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை பறிகொடுத்து 200 ரண்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இந்த போட்டியின் போது, ஹைதராபாத் அணியின் பந்து வீச்சு ராஜஸ்தான் அணியின் விக்கெட்டுகளை வரிசையாக வீழ்த்தி அந்த அணியை திணறடித்தது.

அதாவது ராஜஸ்தான் அணி 25 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தால் போதும் என்கிற நிலையில் இருந்த போது, ஹைதராபாத் அணியில் உள்ள பவுலர்கள் நிதானமாக பந்து வீசினார்கள். குறிப்பாக புவனேஸ்வர் குமார், நடராஜன், கம்மின்ஸ் ஆகிய வீரர்கள் சிறப்பாக விளையாடி தூள் கிளப்பினர். இந்த போட்டியில் புவனேஸ்வர் குமார் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அதேபோல் நடராஜன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.

மேலும் இதன் மூலமாக நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்களின் பட்டியலில் நடராஜன் முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.ஆம், இதுவரை எட்டு போட்டிகளில் விளையாடியுள்ள நடராஜன் 15 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இதனால் பர்பிள் கேப்பையும் வென்றுள்ளார்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ஜூன் மாதம் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள பும்ரா, தமிழக வீரர் நடராஜனால் பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஆம் நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா 14 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றி இருக்கிறார். இதனால் நடராஜன் முதல் இடத்திலும் பும்ரா இரண்டாவது இடத்திலும் இருக்கிறார்கள். இவ்வாறு பும்ராவை பின்னுக்கு தள்ளி பர்பிள் கேப்பை வென்ற தமிழக வீரர் நடராஜனுக்கு எக்கச்சக்கமான பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன. அதே சமயம், டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் நடராஜனை புறக்கணித்த பிசிசிஐ தேர்வு குழு நிர்வாகிகளுக்கு நடராஜன் சரியான பதிலடி கொடுத்திருப்பதாகவும் இணையத்தில் விவாதங்கள் சூடு பிடித்துள்ளன.