“இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு (ஓபிசி) 27% இட ஒதுக்கீடு வழங்குவது செல்லும் என உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது குறித்து கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளதாவது. அகில இந்திய ஒதுக்கீட்டில் PG மருத்துவ மாணவர்களுக்கு 27% OBC இட ஒதுக்கீடு செல்லும் என வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு தமிழகத்தின் சமூக நீதி வரலாற்றுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி.
மோடி அரசின் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டிற்கு முடிவு கட்டப்பட்டிருக்கிறது. இந்த பிரச்சினையை நான் ஆரம்பத்திலேயே நாடாளுமன்றத்தில் எழுப்பினேன். நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்திய திமுக,காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு மனமார்ந்த நன்றிகள்!சமூக நீதியை பாதுகாப்போம், சமூக நீதிக்கு எதிரான பாஜகவை தோலுரிப்போம் என் ஜோதிமணி தெரிவித்திருந்தார்.
ஜோதிமணியின் இந்த கருத்து பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் பதிலடி கொடுத்துள்ள அரசியல் விமர்சகர் சுந்தர் ராஜன் சோழன், 1952 – 2014 வரை பெரும்பங்கு இந்தியாவை ஆண்டது காங்கிரஸ்தான்.. ஆனால் மண்டல் கமிஷனை அமைத்தது மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா அரசு.அதை அறிமுகப்படுத்தியது பாஜக ஆதரவுடன் ஆட்சியிலிருந்த விபிசிங் அரசு.. அதை செயல்படுத்தியது இன்று சோனியா காந்தி குடும்பத்தாரால் வெறுத்து ஒதுக்கப்பட்ட நரசிம்மராவ்..
இத்தனை வருடத்தில் OBC ஆணையத்துக்கு அரசியல் சாசன அங்கிகாரத்தை காங்கிரஸ் அரசு கொடுத்ததில்லை..மண்டலலுக்கு ஆதரவாகவோ? அல்லது அதை உள்வாங்கவோ கூட இல்லை இதுவரை காங்கிரஸில்.. இந்தியாவின் இணையற்ற OBC பிரதமரான மோடியை பாஜகதான் கொடுத்துள்ளது. அதுமட்டுமல்ல கல்யாண்சிங்,சௌகான் என்று OBC தலைவர்களை பிரதமர்களை வட இந்தியாவில் உருவாக்கி எழுச்சி பெற வைத்ததும் பாஜகதான்..
இன்று OBC ஆணையத்துக்கு அரசியல் சாசன அங்கீகாரமும்,27% AIQ வில் இடஒதுக்கீடும் கொடுத்தது மோடி தலைமையிலான பாஜக அரசுதான்..2004 – 2014 வரை காங்கிரசும்,அதன் கூட்டணி திமுகவும் இதை செய்யவில்லை.. நம்ம ஜோதிமணி அக்கா அகில இந்திய காமெடி செய்கிறார்கள்..என ஜோதிமணியின் பொய்யான கருத்துக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் சுந்தர் ராஜன் சோழன்.