சென்னையை அடுத்த ஆவடி அருகே திருமுல்லைவாயலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புவெங்கடேஷ் -ரம்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். நான்காவது மாடியில் வசித்து வரும் இவர்களது 7 மாத குழந்தை தவறி பால்கனி தகர சீட்டில் விழுந்துள்ளார். அதாவது ரம்யா பால்கனி அருகே குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்துள்ளார், அப்போது பால்கனி அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக, தாயின் பிடியில் இருந்து தவறிய குழந்தை, பால்கனி வழியாக கீழே விழுந்தது.
தாய் அலறித் துடிக்க, அதிர்ஷ்டவசமாக, 2-வது மாடியில் மழைக்காக அமைக்கப்பட்டிருந்த தகர கூரை மீது குழந்தை விழுந்தது. பால் கனியில் இருந்து தவறி விழுந்த குழந்தை சன் சைடு தகர ஷீட்டில் சரிந்தபடி கீழே வந்தது. இதைப் பார்த்து எதிரே உள்ள குடியிருப்பில் இருந்தவர்கள் பார்த்து கூச்சல் போட்டனர். பின்னர், சத்தம் கேட்டு அங்கு கூடியவர்கள் குழந்தையை பாகாப்பாக மீட்டனர்.
இந்த வீடியோ வைரலாகி வந்ததை தொடர்ந்து பெற்றோரின் கவன குறைவு தான் என மிக கடுமையாக விமர்சனம் செய்து வந்த நிலையில், அந்த குழந்தைக்கு தாய் உணவு ஊட்டி கொண்டிருந்த போது, தவறி விழுந்தது, அப்போது அந்த தாய் ஐய்யோ என் குழந்தையை காப்பாற்றுங்கள் என கதறியுள்ளார். மேலும் அந்த குழந்தையை பெற்றோர்கள் பொத்தி பொத்தி வளர்த்து வருகிறார்கள், ஆகையால் பெற்றோரை குறை சொல்ல வேண்டாம் என அக்கம் பக்கத்தினர் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகர் பிரசாந்த் ரெங்கசாமி, குழந்தை தவறி விழுந்த வீடியோவை அவருடைய சமூக வலைதளத்தில் பதிவு செய்து, அந்த குழந்தையை பெற்றவர்களுக்கு – உங்களுக்கு கொழந்த ஒரு கேடாடா ? என்று குழந்தையின் பெற்றோரை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார், அவரின் பதிவுக்கு கீழே பலரும், “எத்தனையோ பேர் குழந்தை இல்லாம கஷ்டப்படுறாங்க. ஊர்ல குழந்தை
இல்லாம கோவில் கோவிலா அலைஞ்சுட்டு இருக்காங்க. இவ்ளோ அசால்டா இருக்காங்க என பி-பால்கனியில் விழுந்த குழந்தை மீது எந்த தவறும் இல்லை என்கிற உண்மை தெரியாமல் கருத்து தெறிவிக்கிறேன் என்கிற பெயரில் குழந்தையின் பெற்றோரை விமர்சனம் செய்து வந்தனர்.
அந்த குழந்தை விழுந்தது விபத்துதான். அப்பா, அம்மா மேல எந்த தவறும் இல்லை என்று குழந்தையை காப்பாற்றிய அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் விளக்கம் கொடுத்தாலும் சமூக வலைத்தளத்தில் சிலர் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். இதனால் குழந்தையின் தாய் ரம்யா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்துள்ளார், இதனால் ஒரு மாறுதலுக்காக 7 மாத பெண் குழந்தை மற்றும் 5 வயது ஆண் குழந்தையுடன் கோவை மாவட்டம் காரமடைக்கு தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார்கள்.
கணவர் வெங்கடேஷுடன் ரம்யாவும் காரமடை வீட்டில் வொர்க் ப்ரம் ஹோம் முறையில் பணி செய்து
வந்துள்ளனர். ரம்யா மன உளைச்சலில் இருந்ததால் அவருக்கு தொடர்ந்து கவுன்சிலிங்க கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது. இந்த நிலையில் தாயும் தந்தையும் திருமணத்திற்காக சென்றிருந்த நிலையில் ரம்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து காவல் துறை விசாரணை மேற்கொண்டதில் குழந்தை விழுந்தது தொடர்பாக சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக வந்த விமர்சனங்களால் மன உளைச்சல் அதிகமாகி ரம்யா தற்கொலை செய்துகொண்டுள்ளது தெரியவந்தது.
ஆபத்தான நிலையில் இருந்த குழந்தையை மீட்டு வெறும் விமர்சனங்களால் ஒரு உயிரை எடுத்துவிட்டுள்ளது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ரம்யாவின் தற்கொலையை குறிப்பிட்டு பின்னணி பாடகி சின்மயி சினிமா விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி உட்பட பலரை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த விவகாரத்தில் குழந்தையின் பெற்றோர்களை விமர்சித்த பிரசாந்த் உள்ளிட்டவர்கள் இனி மகிழ்ச்சியாக கொண்டாடலாம் .
மேலும் ஒரு நிகழ்வு பற்றி எந்த வித பின்னணியும் தெரிந்துகொள்ளாமல் சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோக்களை மட்டும் வைத்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தை திணிக்கும் போக்கு தொடர்ச்சியாக நடந்துகொண்டு வருகிறது. மக்களின் அன்றாட வாழ்க்கையில் எதிர்பாராமல் நடக்கும் இப்படியான விபத்துக்கள் சில நேரங்களில் யார் கட்டுப்பாட்டிலும் இருப்பவை அல்ல என்பதை கருத்திக் கொள்ளாமல், தங்கள் சமூக அக்கறையை கோபத்தை வாய்க்கு வந்த வார்த்தைகளால் வெளிப்படுத்துவது ஒரு பெண்ணை தற்கொலை செய்யும் அளவிற்கு தூண்டியுள்ள நிகழ்வு இணையச் சமூகம் எந்த மாதிரியான மனநிலையில் இருக்கிறது என்கிற கேள்வியையே எழுப்புகிறது என பின்னணி பாடகி சின்மயி தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.