இயக்குனர் ஷங்கரை விடாமல் துரத்தும் லைக்கா… இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்குமா?

0
Follow on Google News

இந்தியன் 2 திரைப்படத்தை இயக்காமல் இயக்குனர் ஷங்கர் வேறு படங்களை இயக்கக் தடை கோரி லைக்கா நிறுவனம் ஐதராபாத்தில் மேலும் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளது. கமலஹாசன் நடித்து இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 1996ல் வெளிவந்து பெரும் வெற்றியை கொடுத்தது. இந்த இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இந்தியன் 2 திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கி வந்தார்.

இந்தியன் 2 திரைப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் இங்கே திரைப்படத்தைத் தயாரிக்கிறது. இந்தியன் 2 2019 ஆண்டு படப்பிடிப்பு தொடங்கியது. இந்தநிலையில் கடந்த ஆண்டு பிப். மாதம் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் ஒன்று சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதை தொடர்ந்து இந்தியன் 2 படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தத் திரைப்படம் 2021 வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதன்பிறகு கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், படப்பிடிப்பை மீண்டும் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது. படப்பிடிப்பு தளர்வுகள் அளித்தும் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. லைக்கா நிறுவனம் இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படத்தை இயக்க ஷங்கருக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் இயக்குனர் ஷங்கர் தரப்பில் விளக்கம் கேட்காமல் வேறு படங்களை இயக்க தடை விதிக்க முடியாது என்று தனி நீதிபதி மறுத்து விட்டார். இதனைத்தொடர்ந்து லைக்கா நிறுவனம் ஐதராபாத் நீதிமன்றத்தில் இதே கோரிக்கையுடன் வழக்கு தொடர்ந்தது. இதைத்தொடர்ந்து இயக்குனர் ஷங்கரை இந்தியன் 2 படத்தை இயக்காமல் விடப்போவதில்லை என்று விடாப்பிடியாக உள்ளது லைகா தயாரிப்பு நிறுவனம்.