ஆண்ட்டி இந்தியன் திரைப்படத்துக்கு சிங்கப்பூரில் தடை… பின்னணி என்ன?

0
Follow on Google News

இளமாறன் இயக்கியுள்ள ஆண்ட்டி இந்தியன் திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. யுடியுபில் தமிழ் சினிமாக்களை கண்டபடி கழுவி ஊற்றி விமர்சனம் செய்து பிரபலம் ஆனவர் மாறன். மாறன் என்று சொன்னால் கூட யாருக்கும் தெரியாது. ப்ளு சட்ட மாறன் என்றுதான் சொல்லவேண்டும்.

இந்நிலையில் அவர் தானே ஒரு படத்தை எடுக்கிறேன் என்று சில வருடங்களுக்கு முன்னர் அறிவிப்பை வெளியிட்டார். படத்தைத் தொடங்கி முடித்த அவர் சென்ஸாருக்கு சென்றபோதுதான் பிரச்சனைகளை சந்தித்தார். படத்தில் 38 இடங்களில் வெட்டு சொன்ன சென்சார் அதிகாரிகள் அதற்கு படக்குழு சம்மதிக்காததால் சென்சார் சான்றிதழ் தர மறுத்தனர்.

இதையடுத்து நீதிமன்றம் சென்று படக்குழுவினர் சான்றிதழ் பெற்றனர். இதையடுத்து திரைப்படம் டிசம்பர் 10 ஆம் தேதி நேற்று எதிர்பார்த்ததை விட அதிக எண்ணிக்கையில் ரிலீஸ் ஆனது. தமிழகத்தைப் பொறுத்தவரை நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் சிங்கப்பூரில் இந்த படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. மத அமைப்புகளை விமர்சிப்பதால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது படத்துக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

டேய்…தம்பி சூர்யா ..இனி உன் படம் தியேட்டரில் ஓடாது… புரட்சி பேசும் நடிகர்கள்… மீடியா… பேடிகள் எங்கே.?