என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க.. ஹெச். வினோத்தை வெளுத்து வாங்கிய அஜித்.. ஏன் டென்ஷன் தெரியுமா.?

0
Follow on Google News

போனி கபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்த நேர்கொண்ட பார்வை சிறிய பட்ஜெட்டில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம். மேலும் இந்த படத்தில் பணியாற்றிய பொழுது அஜித் மற்றும் ஹெச்.வினோத் இருவருக்கும் இடையில் நெருக்கம் அதிகமானது. பொதுவாகவே அஜித்துக்கு ஒரு இயக்குனரை பிடித்து விட்டால், அடுத்தடுத்து தன்னுடைய படத்தை இயக்கும் வாய்ப்பை அந்த இயக்குனருக்கு கொடுப்பார்.

அந்த வகையில் அஜித்துக்கு விருப்பமான பைக் சம்பந்தமான கதையை மையப்படுத்தி வலிமை படத்தின் கதையை ஹெச்.வினோத் தெரிவிக்க உடனே ஓகே செய்துவிட்டார் அஜித். இதனை தொடர்ந்து, போனி கபூர், அஜித் , ஹெச்.வினோத் கூட்டணியில் வலிமை படம் உருவானது. இரண்டு வருட தாமதத்திற்கு பின்பு வெளியான வலிமை படம் அஜித் ரசிகர்களுக்கு மிக பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. மேலும் தயாரிப்பாளர் போனி கபூருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் போனி கபூருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்யும் வகையில் மீண்டும் அவருக்கு கால் சீட் கொடுத்தார் அஜித், அதே போன்று வலிமை பட தோல்வியால் மிக பெரிய சரிவை சந்தித்த ஹெச்.வினோத்துக்கு கை கொடுத்து உதவும் வகையில் மீண்டும் தன்னுடைய படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார் அஜித், இதனை தொடர்ந்து போனி கபூர், அஜித் ஹெச்.வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக துணிவு படத்தில் இணைந்தது.

துணிவு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஆந்திராவில் எடுத்து முடிக்கப்பட்டு இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் சென்னையில் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.துணிவு படம் பொங்கல் பண்டிகையின் போது வெளியாகும் வாரிசு படத்துடன் நேருக்கு நேர் மோதி ஆக வேண்டும் என்பதில் அஜித் உறுதியாக இருக்கிறார். சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள ஒரு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் நடக்கும் கொள்ளை சம்பந்தமான கதை தான் துணிவு என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் ஹாலிவுட் தரத்திற்கு ஏற்ப மிக பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகள் இருப்பதால், துணிவு படத்தின் சி.ஜி வேலைகள் அதிகமாக இருக்கிறது. இதனால் பொங்கலுக்குள் இந்த வேலையை முடிக்க முடியாது, ஆகையால் ரிலீஸ் தேதியை தள்ளிவைக்க வேண்டும் என ஹெச். வினோத் தயாரிப்பாளரிடம் தெரிவித்துள்ளார். இதன் பின்பு இந்த தகவல் அஜித் கவனத்துக்கு ஹெச் வினோத் கொண்டு சென்றுள்ளார்.

இதை கேட்ட உடனே டென்ஷனான அஜித், ஹெச்.வினோத்தை லெப்ட் ரைட் வாங்கியுள்ளார். என்னுடைய வேலை இன்னும் டப்பிங் பேசுவது மட்டும் தான், இரவு பகல் என உடனே டப்பிங் பேசி முடித்து விடுகிறேன். சி.ஜி வேலை அதிகமாக இருந்தால் பல கம்பெனிகளுக்கு பிரித்து கொடுத்து வேலையை சீக்கிரம் முடிக்க பாருங்க. அதை விட்டு விட்டு இது ஒரு காரணம் என தெரிவித்து படத்தை தள்ளி வைக்க செல்வது சின்ன பிள்ளை தானமாக இருக்கிறது.

வாரிசு படத்துடன் என்னுடைய படம் பொங்கலுக்கு வருவது உறுதி, தேதி அறிவித்து வியாபாரம் செய்த பின்பு எப்படி தள்ளி வைக்க முடியும்.? என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்? என அஜித் இது போன்று இதற்கு முன்பு இப்படி கோபம் பட்டதே இல்லை என்று சொல்லும் அளவுக்கு டென்ஷனாக ஹெச். வினோத்தை டீல் செய்துள்ளார் என கூறப்படுகிறது.