பொது இடங்களுக்கு செல்பவர்கள் கட்டாயம் தடுப்பூசி சான்றிதழைக் காட்ட வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா மற்றும் எஸ் ஏ சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்னரே அறிவிக்கப்பட்ட இந்த படம் பல பிரச்சனைகளைத் தாண்டி இப்போது நவம்பர் 25 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் அறிமுக விழா சென்னையில் சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்றது. டைம் லூப் என சயின்ஸ் பிக்ஷன் கருத்தாக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் நல்ல எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.
சிம்புவும் ஒரு வெற்றிப்படம் கொடுத்து நீண்ட ஆண்டுகள் ஆவதால் அவரும் இந்த படத்தை பெரிதும் நம்பி இருக்கிறார். இந்நிலையில் தமிழக அரசு திரையரங்கம் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்பவர்கள் கட்டாயம் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி இருக்க வேண்டும் என அறிவித்துள்ளது. இது பெரிய அளவில் தியேட்டர் வரும் ரசிகர்களின் எண்ணிக்கையைப் பாதிக்கும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த வாரம் ரிலீஸ் ஆக உள்ள மாநாடு படத்தின் தயாரிப்பாளர் இது சம்மந்தமாக ‘உலகத்திலேயே திரையரங்கிற்குச் செல்ல தடுப்பூசி கேட்பது இங்குதான் முதல் முறை. அவனவன் சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்? முன்பு போலவே திரையரங்கிற்குள் மக்களை அனுமதிக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.