எங்க இஷ்டத்துக்கு படம் எடுக்க முடியாது… ரஜினியை தூக்கி எறிந்துவிட்டு வெளியேறிய இளம் இயக்குனர்..

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் அண்ணாத்தே, இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதனால் படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் நஷ்டத்தை சரி செய்வதற்காக அதே தயாரிப்பு நிறுவனத்திற்கு மீண்டும் கால் சீட் கொடுத்து தற்பொழுது ஜெயிலர் என்கின்ற படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இந்த படத்தை நெல்சன் இயக்குகிறார். அண்ணாத்தே படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே பல இளம் இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்த ரஜினிகாந்த், அந்த வகையில் சிபி சக்கரவர்த்தி, தேசிங்கு பெரியசாமி என பலரிடம் கதை கேட்டு வந்தவர். இறுதியில் நெல்சன் திலீப் குமாரை ஒப்பந்தம் செய்து ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இந்நிலையில் ரஜினிகாந்த் அடுத்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது, இந்த படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது, கதையைக் கேட்ட ரஜினிகாந்த் ஆரம்பத்தில் ஓகே செய்தவர் படத்தின் ஸ்கிரிப் மற்றும் திரைக்கதையை தயார் செய்ய வலியுறுத்தியுளளார். இதனைத் தொடர்ந்து சிபிச் சக்கரவர்த்தி படத்திற்கான அனைத்து வேலைகளையும் விறுவிறுப்பாக தொடங்கினார்.

ஆனால் சிபி சக்கரவர்த்தி மீது நம்பிக்கை இல்லாத ரஜினிகாந்த் பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமௌலிய தந்தை தேவேந்திர பிரசாத்தை சிபி சக்கரவர்த்திக்கு சில ஆலோசனை வழங்க நியமித்துள்ளார் ரஜினிகாந்த். இந்த நிலையில் விஜய் பிரகாஷ் படத்தில் பல மாற்றங்களை கொண்டுவர வற்புறுத்தி உள்ளார். ஆனால் சிபி சக்கரவர்த்தி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

இந்த தகவல் ரஜினிகாந்த் கவனத்திற்கு சென்றுள்ளது, அதனால் சிபிச் சக்கரவர்த்தி மீது இருந்த நம்பிக்கையை விட விஜயேந்திர பிரசாத் மீது தான் அதிக நம்பிக்கை வைத்துள்ளார் ரஜினிகாந்த், மாற்றம் செய்யவில்லை என்றால் சிவி சக்கரவர்த்தி தேவையில்லை என்று ரஜினி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது சிபி சக்கரவர்த்தி கவனத்திற்கு சென்றதும் உங்க இஷ்டத்துக்கு என்னால் படம் எடுக்க முடியாது என ரஜினியை தூக்கி எறிந்து விட்டு அந்த புதிய படத்திலிருந்து சிபி சக்கரவர்த்தி வெளியேறிவிட்டார் என்று கூறப்படுகிறது