சினிமா சான்ஸ் வேணுமா? என்கூட ஒருநாள் இருக்கணும்!: அனிதா சம்பத் வெளியிட்ட பரபரப்பு

0
Follow on Google News

சன் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக வலம்வந்தவர் அனிதா சம்பத். இவர் கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதன்பிறகு விஜய் டிவியில் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடனப்போட்டியில் அனிதா சம்பத் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், அனிதா சம்பத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பரபரப்பு செய்தியை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். அதாவது, ஒரு இளம்பெண் ஒருவர், அனிதா சம்பத்துக்கு தனக்கு சினிமாவில் சான்ஸ் வேண்டுமென்றால் ஒருவர் தன்னை தவறான பாதைக்கு அழைப்பதாக கூறி, அவருக்கு வந்த ஒரு உரையாடலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவேண்டுமென்றால் இதையெல்லாம் அனுசரித்துத்தான் போகவேண்டும் என்பதுபோல் அமைந்துள்ள அந்த உரையாடலை பகிர்ந்த அனிதா சம்பத், படவாய்ப்புக்காக இப்படியெல்லாம் இளம்பெண்களை ஏமாற்றும் சிலபேர் இருக்கத்தான் செய்கிறார்கள். தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ளார்.

இந்த பதிவு தற்போது மிகப்பெரிய சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் பெண்கள் சிலருக்கு ஒத்துழைப்பு அளித்தால் தான் முன்னேற முடியும் என்ற பேச்சு இருக்கிறது. இந்த பதிவின் மூலம் அது உண்மையாகியுள்ளது.