இதுக்கு மேல என்னை அசிங்கப்படுத்த முடியாது… விஜய் அப்பாவிடம் கொந்தளித்த விஜயகாந்த்.. எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

கேப்டன் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரது இறப்பு செய்தி பலரையும் அதிர்ச்சி அடைய செய்தது. கேப்டன் விஜயகாந்தின் மறைவு தமிழ்நாட்டு மக்களிடையே கடுமையான சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகை சார்ந்த பலரும் அவரின் மறைவிற்கு கண்ணீர் சிந்தி வருகிறார்கள்.

அந்த வகையில் விஜய் தந்தை இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் ஆடியோ வாயிலாக கேப்டனின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், ‘என் இனிய நண்பர் விஜயகாந்தை உயிரோடு இருக்கும் போதே ஆரத்தழுவி முத்தமிட விரும்பினேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக அதற்காக முயற்சியும் செய்தேன். அதற்கான வாய்ப்பும் கிடைக்கவில்லை. இப்போது ஒரு உயிரற்ற உடலை பார்க்கக்கூடாது என கடவுள் நினைத்தாரோ இல்லையோ தெரியவில்லை. தற்போது நான் துபாயில் இருக்கிறேன்.

திரையுலகிலும், அரசியல் உலகிலும் ஒரு சகாப்தம் இன்று முடிந்திருக்கிறது. அதற்காக கண்ணீர் சிந்துவதை விட வேறொன்றும் தெரியவில்லை’. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு அந்த ஆடியோவில் உருக்கமுடன் பேசியுள்ளார் எஸ்ஏ.சி…. எஸ்ஏ.சியும் கேப்டனும் மிகவும் நெருக்கமானவர்கள். இந்நிலையில் விஜயகாந்த் குறித்து எஸ்ஏ.சி முன்னாள் பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அதில், நடிகர் விஜய் அறிமுகமான ‘நாளைய தீர்ப்பு’ பெரிதாக மக்களிடம் வரவேற்பை பெறாத நிலையில் அடுத்தடுத்து தோல்விகளை மட்டும் சந்தித்து வந்த விஜய், நடிப்பில் விஜயகாந்த் உடன் இணைந்து நடித்த செந்தூரப்பாண்டி படத்தை விஜயின் தந்தையான எஸ் ஏ சந்திரசேகர் இயக்கியிருந்தார். தொடர் தோல்விகளை சந்தித்து வந்த விஜய்க்கு படங்கள் அமையாத நிலையில், விஜயகாந்தை செந்தூரபண்டி படத்தில் கமிட் செய்தால் விஜயகாந்திற்கு கிடைக்கக்கூடிய வெளிச்சம் விஜயின் மீது படும்.

இதன் மூலம் விஜய் கிராமங்களிலெல்லாம் சென்று சேருவார் என்பது எஸ்.ஏ.சியின் கணக்கு. அந்தத்திட்டத்தின் அடிப்படையிலேயே எஸ்.ஏ.சி விஜயகாந்தை இந்தப்படத்தில் ஒப்பந்தம் செய்தார். ஆனால் அந்தப்படத்தில் நடிக்க விஜயகாந்த் 1 ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை; அதற்கான காரணத்தை எஸ்.ஏ.சி அண்மையில் கொடுத்த நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார்.

இதுகுறித்து பேசிய அவர், “இரண்டு மாதம் கதை பண்ண டைம் வேண்டுமென கூறி ஒரு 15 நாட்கள் அவரிடம் கேட்டேன். தொடர்ந்து சம்பளம் எவ்வளவு வேண்டுமென்று கேட்டேன். உடனே அதெல்லாம் ஒன்று வேண்டாம்.. உதவி என்று தான கேட்டு வந்தீர்கள். அதற்கு சம்பளமெல்லாம் தேவையில்லை என்று சொல்லிவிட்டார். ஆனாலும் நான் ஒரு 15 நாட்கள் எல்லாவற்றையும் ரெடி செய்து விட்டு ஒரு ஒரு லட்ச ரூபாய் அட்வான்ஸ் எடுத்துக் கொண்டு அவரிடம் சென்றேன். ஆனால் கடைசி வரை அவர் அதை வாங்கவே இல்லை.

இதனிடையே பிரேமலதா விஜயகாந்த் நான் விஜயகாந்த் வீட்டு அருகில் வாங்கி போட்டிருந்த நிலத்தை முன்பிருந்தே கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் விஜயகாந்த் பக்கத்தில் நான் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த நிலத்தை வாங்கி போட்டு இருக்கிறேன், அப்படி இருக்கையில் அதை நீங்கள் எப்படி கேட்கலாம் என்று அவரிடம் கொடுக்காமல் இருந்தேன்.

செந்தூரபாண்டி படம் ரிலீஸ் ஆனது, சம்பாதித்தேன், அதற்கு பலனாக விஜயகாந்துக்கு தெரியாமல் அந்த இடத்தை விஜயகாந்த் பெயருக்கு எழுதி அந்த பத்திரத்தை பிரேமலதா விஜயகாந்திடம் கொண்டு கொடுத்து விட்டேன். இதை கேட்டு கோபம் அடைந்த விஜயகாந்த், என்னை கேவலப்படுத்தி விட்டீர்கள் என்று வருந்தி கொண்டதாக எஸ் ஏ சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.