விஜயகாந்த் புகைப்படம் எல்லாம் உண்மையில்லை… மருத்துவமனையில் விஜயகாந்த் நிலை என்னாச்சு தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் விஜயகாந்த் சினிமாவில் ரசிகர்களின் மனதை வென்றது மட்டுமின்றி, தனது தேமுதிக கட்சியின் மூலம் அரசியலிலும் தொண்டர்களையும் மக்களையும் ஈர்த்துள்ளார். அன்றைய காலகட்டத்தில் உச்ச நட்சத்திரங்களாக விளங்கிய ரஜினி, கமலுக்கு இணையான ரசிகர் பட்டாளம் விஜயகாந்த்-கும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எந்த ஒரு சினிமா பின்னணியும் இன்றி சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்த விஜயகாந்த், அரசியல்வாதி, நடிகர் என்பதையெல்லாம் தாண்டி விஜயகாந்த் ஒரு மனிதநேயம் மிக்கவராக திகழ்ந்து வருகின்றவர்.

தன்னைத் தேடி வரும் ஏழை எளியோருக்கு உணவளித்து, அவர்களுக்கு தேவையான உதவி செய்து அனுப்பி வைக்கும் குணம் கொண்டவர். இவ்வாறு அனைவரும் மத்தியிலும் சிறந்த மனிதராக திகழ்ந்துவரும் விஜயகாந்த், சமீப காலமாகவே உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வருகிறார். 71 வயதாகும் விஜயகாந்த். அறுவை சிகிச்சைக்கு பின்னர் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்த விஜயகாந்தின், புகைப்படங்களை அவ்வப்போது அவரது மனைவி பிரேமலதா மற்றும் மகன்கள் இருவரும் சமூக வலைதளத்தில் வெளியிட்டு வந்தனர்.

இந்த சூழலில் கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே விஜயகாந்த் உடல்நிலை தேறி வருவதாகவும், இரண்டு வாரங்களுக்கு அவருக்கு சிகிச்சை தேவைப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. இது அனைத்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த அறிக்கையை தொடர்ந்து, விஜயகாந்த் மீண்டு வருவது கடினம் என்று வதந்திகள் இணையத்தில் பரவ ஆரம்பித்தன. இதைப் பார்த்த விஜயகாந்த் குடும்பத்தினர், செய்தி மூலமாகவும் வீடியோ மூலமாகவும் விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார் என்று தெரிவித்து வந்தனர். அதே சமயம் அவரது மனைவி பிரேமலதா, மருத்துவமனையில் விஜயகாந்த் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தெரிவித்திருந்தார்.

இதனால் அவரது ரசிகர்களும் தொண்டர்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஆனால் பயில்வான் ரங்கநாதன் மகிழ்ச்சியில் மண்ணை அள்ளி போடும் விதமாக விஜயகாந்த் உடல்நிலை குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதாவது பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி விஜயகாந்த் பார்க்க மருத்துவமனைக்கு சென்ற போது, தொற்று ஏற்பட்டு விடும் என்று சொல்லி அவரைப் பார்க்க அனுமதி தர மறுத்தது மருத்துவமனை நிர்வாகம்.

அப்படியே இருக்கையில் பிரேமலதா எப்படி விஜயகாந்துக்கு அருகில் இருப்பது போல புகைப்படம் எடுக்க முடியும். இது தேமுதிக தொண்டர்களை ஆறுதல் படுத்தவும் ரசிகர்களை அமைதி படுத்தவும் ஒரு மாதத்துக்கு முன்போ அல்லது அதற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்களை இப்போது வெளியிடுகிறார்கள் என்று கூறியுள்ளார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது சசிகலா தவிர யாரும் அவரை பார்க்க அனுமதிக்கப்படவில்லை.

அதேபோல்தான் விஜயகாந்த்தை அவரது குடும்பத்தினர் தவிர பிறர் பார்க்க அனுமதி இல்லை. அவரின் இப்போதைய உண்மையான நிலை என்ன என்பது பிரேமலதா குடும்பத்துக்கு மட்டும்தான் தெரியும். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளியை புகைப்படம் எடுக்க மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்காது. ஏனெனில் கேமராவில் இருந்து வரும் கதிர்கள் நோயாளியை பாதிக்கும். கண்டிப்பாக இது பழைய புகைப்படங்கள்தான்” என பயில்வான் தெரிவித்துள்ளார்.