அள்ளி கொடுத்த விஜயகாந்த் தம்பி என்ன நிலையில் இருக்கிறார் தெரியுமா.?வருமானத்திற்கு மதுரையில் என்ன வேலை செய்கிறார் பாருங்க…

0
Follow on Google News

புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சினிமாவின் மீது கொண்ட பேராசையால் மதுரையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்த விஜயகாந்த் 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சிறந்த நடிகராக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

தனது இறுதி காலம் வரை பிறருக்கு வாரி வாரி வழங்கிய விஜயகாந்தின் குடும்பத்தினர் பற்றிய தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன. குறிப்பாக விஜயகாந்தின் தம்பி ஒருவர் மதுரையில் இருப்பதாகவும், அவர் இப்போது வருமானத்திற்கு என்ன தொழில் செய்கிறார் என்பது பற்றியும் செய்திகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜயகாந்த் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ராமானுஜபுரத்தில் பிறந்தவர். அவரது பெற்றோர் அழகர்சாமி மற்றும் ஆண்டாள் இருவரும் குழந்தைகளை பெற்றெடுத்த பின்னர் மதுரைக்கு வந்து கீரை துறையில் ரைஸ் மில் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். அப்போது மதுரை மேலமாசி வீதியில் உள்ள சௌராஷ்டிரா சந்தில் குடியேறியது விஜயகாந்த் குடும்பம்.

அழகர்சாமி- ஆண்டாள் தம்பதியினருக்கு விஜயகாந்த் மட்டுமின்றி நாகராஜ், விஜயலட்சுமி, திருமலா தேவி என்ற குழந்தைகளும் இருந்தனர். கேப்டனின் சிறு வயதிலேயே அவரது தாயார் ஆண்டாள் இறந்து விடுகிறார்.
அதன் பிறகு, தனது அக்காள் மகளான ருக்மணியை அழகர்சாமி இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார். இந்த தம்பதியினருக்கு செல்வராஜ், பால்ராஜ் சித்ராதேவி, ராமராஜ், மீனா குமாரி, சாந்தி மற்றும் பிரித்திவிராஜ் போன்ற குழந்தைகள் இருந்தனர்.

சிறுவயதிலேயே தாயை இழந்த கேப்டன் சித்தியின் பிள்ளைகளோடு உடன் பிறந்த சகோதரரை போலவே பழகி வந்துள்ளார். விஜயகாந்த் உடன் பிறந்த சகோதரர் நாகராஜ் தற்போது உயிருடன் இல்லை என்றாலும், அவரது சித்தி மகனான செல்வராஜ் என்பவர் இப்போதும் மதுரையில் தான் வசித்து வருகிறாராம்.இவர் அப்பா அழகர்சாமி கீரை துறையில் தொடங்கிய ரைஸ் மில்லுடன் சேர்த்து ஆண்டாள் ருக்மணி என்ற இரண்டு ரைஸ் மில்லில் நடத்தி வருகிறாராம்.

அதுமட்டுமில்லாமல் பல வருடங்களுக்கு முன்பு அழகர்சாமி குடும்பம் குடியேறிய மேலமாசி வீட்டில் தான் செல்வராஜ் வசித்து வருகிறாராம். மேலும் இவர் வருமானத்திற்காக மதுரையில் பிளாஸ்டிக் கடை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் அண்ணன் விஜயகாந்த் என்னதான் மிகப்பெரிய அரசியல்வாதியாக இருந்தாலும், தம்பி செல்வராஜ் மதுரையில் எளிமையான வாழ்க்கையை தான் வாழ்ந்து வருகிறார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.