குணசேகரன் கேரக்டர் இனி கிடையாது… கதையில் திடீர் மாற்றத்தை கொண்டு வந்த இயக்குனர்..

0
Follow on Google News

தமிழ் சின்னத்திரையின் முக்கிய சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து இந்த சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்தார். மேலும் அவரின் வசன உச்சரிப்பு பல மீம்ஸ்களுக்கு பொருந்துகிற மாதிரியான டெம்ளேட்டாக மாறியது.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அந்த சீரியலின் நாயகியை விட வில்லன் குணசேகரனுக்கே ரசிகர்கள் அதிகம்.ஆனால் சமீபத்தில் நடிகர் மாரிமுத்து திடீரென மரணமடைந்தது தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனால் அடுத்த குணசேகரன் யார், மாரிமுத்துவின் இடத்தை பூர்த்தி செய்வாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், கடந்த வாரம் நடிகர் வேல ராமமூர்த்தி குணசேகரனாக என்டரி கொடுத்தார்.

ஆனால் அவர் மாரிமுத்து போல் இல்லாமல் தனக்கே உரிய அதிரடி பாணியில் என்டரி கொடுத்து முதல் காட்சியிலேயே போலீசை அடித்து அறிமுகமானார், அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த அவர், தனது அதிரடி ஆக்ஷனை தொடர்ந்த நிலையில். அடுத்த இரு தினங்களில் அவர் போலீசை அடித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பட்டார். இதனால் குணசேகரன் கேரக்டர் இல்லாமல் சீரியல் கதை வேறு கோணத்திற்கு மாறப்போகிறது என்று தகவல் வெளியானது.

மாரிமுத்து எப்படி இந்தக் கதாபாத்திரத்திற்குக் கூடுதல் மெனக்கெடல்கள் செய்தாரோ அதே போன்றுதான் வேல ராமமூர்த்தியும் மெனக்கெட்டிருக்கிறார். எம்மா ஏய்’ என்பது மாரிமுத்துவின் ட்ரேட் மார்க்கானது போல வேல ராமமூர்த்தியின் ட்ரேட் மார்க் டயலாக் ஆனஇளந்தாரிப்பயலுக’ வசனமும் இந்தத் தொடரில் இடம் பெற்றது. எம்மா ஏய்’யிலிருந்துஇளந்தாரிப்பயலுக’விற்கு ஆதி குணசேகரன் ரசிகர்களால் சட்டென மாற இயலவில்லை. அதற்குச் சில காலங்கள் ஆகும் என்பதை வேல ராமமூர்த்தியுமே நிச்சயம் புரிந்து வைத்திருப்பார்.

இனி, ஆதி குணசேகரனின் தம்பிகளைச் சுற்றியும், வீட்டு மருமகள்களைச் சுற்றியுமே கதை ஓட்டம் நகர இருக்கிறது. அந்தத் தொடரின் நாயகியான ஜனனியின் தங்கைக்குத் திருமணம் செய்து வைப்பதை நோக்கித்தான் தற்போதைய கதை ஓட்டம் இருக்கும் எனத் தெரிகிறது. வேல ராமமூர்த்தி கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பாரிஸில் இருப்பதாகப் பதிவிட்டிருந்தார். அதன் மூலம் அவர் படத்தில் பிஸியாக இருப்பதால்தான் தற்போது தொடரில் அவரால் நடிக்க முடியவில்லை என்பது தெரிகிறது.

தேதி பிரச்னையின் காரணமாகவே ஆதி குணசேகரன் கைதாகியது போலக் காட்டப்பட்டிருப்பதும் புரிகிறது. ஆனாலும், ஆதி குணசேகரனுக்காகவே தொடரை ரசித்த ரசிகர்களால் அவர் இல்லாததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அந்தக் கதாபாத்திரத்தின் நக்கலும், நையாண்டியும் மக்கள் ரசித்தவை என்பதால் அவர்களால் அந்தக் கதாபாத்திரம் இல்லாமல் தொடர் நகர்வதை ரசிக்க முடியவில்லை. இனி முழு நீளமாக, முக்கியமான கதாபாத்திரமாக ஆதி குணசேகரன் வருவாரா என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.

இந்த நிலையில் இப்போது குணசேகரன் இல்லை என்றாலும் காட்சிகள் இருக்கு என்று சொல்கிற மாதிரி கதை மாற்றப்பட்டிருக்கிறது. அதாவது ஜீவானந்தத்திற்கு தன் மனைவி கயல்விழியை கொலை செய்தது குணசேகர் தான் என்பது தெரியாது. மேலும் இன்று வெளியான ப்ரோமோவில் என்னுடைய புருஷன் குணசேகரனும் அவருடைய தம்பி கதிரும்தான் உங்க மனைவியை கொலை செய்தது என்ற ரகசியத்தை ஈஸ்வரி ஜீவானந்தரிடம் சொல்லி விடுகிறார்.

அதே நேரத்தில் ஜீவானந்தம் பங்க்ஷனுக்கு வரவேண்டும் அப்போது ஜீவானந்தத்தையும் அப்பத்தாவையும் போட்டு தள்ள வேண்டும் என்று கதிர் ப்ளான் போட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இனி என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பை சீரியல் தரப்பினர்கள் வேகமாக ரசிகர்களின் மனதில் பற்றி எரிய வைத்திருக்கின்றனர்.அதே நேரத்தில் கோவில் திருவிழாவில் கதிரால் அப்பத்தாவுக்கு ஏதோ நடக்கப்போகிறது என்பது மட்டும் தெரிகிறது.

அது போல தான் அப்பத்தாவும் தன் வீட்டு மருமகளிடம் என்னால் இனி எதுவுமே உங்களுக்கு சொல்லித் தர முடியாது. நீங்களாகத்தான் எல்லாமே முடிவெடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி இருக்கிறார். அதே போல நந்தினி ஆரம்பத்திலேயே மாரிமுத்து இருக்கும்போது கதிரை யாராவது அடிக்க வேண்டும் என்று சொன்னது போலவே ஜீவானந்தம் ஆபீசில் வைத்து பர்ஹானா கதிரை அடித்திருந்தார். அதுபோல இப்போது கதிர் கைகால்களை யாராவது உடைத்து போட வேண்டும் என்று நந்தினி கூறி இருக்கிறார்.

இந்த நிலையில் இனி வரும் கோவில் திருவிழாவில் கதிருக்கு ஏதாவது நடக்கப் போகிறது என்பதை இப்படி முன்கூட்டியே சொல்கிறார்களா? என்றும் யோசிக்க வைக்கிறது. அதே நேரத்தில் கிள்ளிவளவனை எதற்காக கதிர் பார்க்க வேண்டும் என்ற சந்தேகம் ஞானத்திற்கு அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் ஜீவனந்தத்தின் மனைவியை கொலை செய்தது கதிர் மற்றும் குணசேகரன் தான் என்ற ரகசியம் ஞானத்திற்கு தெரிய வரும்போது ஞானம் யார் பக்கம் நிற்கப் போகிறார்? என்று எதிர்பார்ப்பும் அதுபோல தன்னுடைய மகன்கள் கொலைகாரங்கள் என்ற தெரியபோது விசாலாட்சி என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.