துருவ் விக்ரம்மை இயக்கப் போகும் விக்னேஷ் சிவன்!

0
Follow on Google News

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது அடுத்த படத்தில் துருவ் விக்ரம்மை நடிக்க வைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.அர்ஜுன் ரெட்டியின் இரண்டு ரீமேக் வடிவங்களிலும் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் துருவ் விக்ரம். வர்மா படத்தின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாவிட்டாலும், ஒரு நடிகராக துருவ் விக்ரம்மை ஒரு நடிகராக ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர்.

இதையடுத்து இப்போது தனது தந்தையோடு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மகான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலினை அடுத்த இயக்க உள்ளதால், அந்த படம் தாமதம் ஆகும் என தெரிகிறது.

இதனால் இப்போது அவர் குறுகிய காலத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு ஜாலியான படத்தில் நடிக்க உள்ளாராம். இதற்காக சமீபத்தில் துருவ்வை சந்தித்த விக்னேஷ் சிவன் கதையை சொல்லியுள்ளாராம்.