வேட்டையன் படம் எப்படி இருக்கு.? படத்தின் கதை இது தான்.. முழு விமர்சனம் இதோ..

0
Follow on Google News

வேட்டையன் படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக வருகிறார் ரஜினிகாந்த். கல்வியில் எந்த அளவுக்கு ஊழல் நடக்குது என்பது தான் படத்தின் கதையின் கரு. ராணா டகுபதி இந்த படத்தின் கல்வி தந்தையாக வருகிறார். ஆசிரியர் ஒருவரை ராணா டகுபதி கொலை செய்து விடுகிறார். இதன் காரணமாக ராணா டகுபதியை எப்படியாவது என்கவுண்டரில் போட்டு தள்ள வேண்டும் என ரஜினிகாந்த் காய்களை நகர்த்துகிறார்.

ஆனால் ரஜினிகாந்தின் மூத்த அதிகாரியாக வேட்டையன் படத்தில் வரும் அமிதாப் பச்சன், ராணா டகுபதியை என்கவுண்டர் செய்வதற்கு அனுமதிக்கவில்லை, இதனால் அமிதாபச்சன் – ரஜினிகாந்த் இருவருக்கும் இடையிலான விவாதம் வேற லெவலில் உள்ளது. பொதுவாகவே என்கவுண்டர் சரியா.? தவற.? என்கின்ற விவாதம் பொதுத்தளத்தில் எழுந்து வரும் நிலையில், எதற்காக என்கவுண்டர் செய்ய வேண்டும் ,என்கவுண்டரின் அவசியம் என்ன.? என்பதை இந்த படத்தில் தெளிவு படுத்துகிறார்கள்.

படத்தில் ஆசிரியராக வரும் துஷாரா விஜயனை சுற்றி தான் படத்தின் கதை நகர்கிறது ஒரு போலீஸ் அதிகாரி எப்படி நடந்து கொள்ள வேண்டும்? எப்படி நடக்க கூடாது என்பதை இயக்குனர் ஞானவேல்ராஜ் தன்னுடைய வேட்டையன் படத்தின் மூலம் அருமையா காட்சிகள் மூலம் வடிவமைத்துள்ளார். காவல்துறை அதிகாரியாக வரும் ரித்திகா சிங் இதற்கு முன்பு எத்தனையோ படங்கள் நடித்து இருந்தாலும், இந்த படத்தில் அவருடைய நடிப்பு வேற லெவலில் உள்ளது.

ராணா டகுபதி நடித்த படங்களிலேயே வேட்டையன் படத்தில் மிக கொடூரமான வில்லனாக காட்சியளிக்கிறார். வேட்டையன் ஒரு பேன் இந்தியா படம் என்று சொல்லும் அளவிற்கு தெலுங்கில் ரானா டகுபதி, இந்தியில் அமிதாபச்சன், மலையாளத்திற்கு பகத் பாஸில் என பல மொழிகளில் உள்ள ஸ்டார் நடிகர்கள் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளார்கள். பகத் பாசில் நடிப்பு வேற லெவல். குறிப்பாக பகத் பாசிலை மிக சிறப்பாக கையாண்டுள்ளார் இயக்குனர் தாசை ஞானவேல்.

வேட்டையன் படத்தின் கதை சொல்ல ஞானவேல் ராஜா ரஜினியை சந்தித்தபோது, ரஜினிகாந்த் நீங்கள் கருத்துள்ள படமாக எடுப்பீர்கள், ஆனால் எனக்கு ஞானவேல் ராஜா படமாகவும் இருக்க வேண்டும், அதே போன்று ரஜினிகாந்த் படமாக இருக்க வேண்டும், அதனால் கமர்சியலாக மாஸாக வேண்டும்.? உங்களால் முடியுமா என்று ரஜினிகாந்த் கேட்டிருக்கிறார். அதற்கு ஞானவேல் ராஜா நிச்சயம் முடியும் என்று இருக்கிறார்.

அதன் பின்பு இந்த கதையை கிளிக் செய்துள்ளார்கள். அதேபோன்று பொதுவாகவே ஞானவேல் ராஜா படத்தை இதற்கு முன்பு பார்த்தவர்கள் ஜெய் பீம் போன்று இது கருத்துள்ள படமாக இருக்குமா.? ரஜினிகாந்த்க்கு செட் ஆகுமா.? என்று பலரும் சந்தேகப்பட்டு வந்த நிலையில், ரஜினிக்கு ஏற்றார் போல் முழுக்க முழுக்க மாஸாக கமர்சியலாக இந்த படத்தின் கதையை கொண்டு சென்றுள்ளார் ஞானவேல் ராஜா.

இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத்துக்கு ரஜினிகாந்த் மிகப்பெரிய ஒரு வாய்ப்பை இந்த படத்தில் கொடுத்திருக்கிறார். அதாவது ரஜினியுடன் குத்தாட்டம் போட்டவர்களில் கேஎஸ் ரவிக்குமார் படையப்பா படத்தில் குத்தாட்டம் போட்டிருப்பார். அதேபோன்று வேட்டையன் படத்தில் ரஜினியுடன் குத்தாட்டம் போட்டுள்ளார் அனிருத். இது மற்ற யாருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்காது.

பொதுவாகவே அனிருத் தற்பொழுது இசையில் டாப்பில் இருந்தாலும் அவர் ரஜினிகாந்துக்கு கூடுதலாக ஒரு எபெக்ட் போடுவார். அது நிச்சயம் வேட்டையன் படத்திலும் பார்க்க முடிகிறது, படத்தின் நீளம் சுமார் 2 .45 மணி நேரம் ஆகின்றது. ஆனால் படம் தொடங்கியது முதல் இறுதி வரை பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் படத்தைக் கொண்டு சென்றுள்ளார் வேட்டையன் படத்தின் இயக்குனர் ஞானவேல் ராஜா.

இந்த நிலையில் இதற்கு முன்பு ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தின் வசூல் சாதனையை வேட்டையன் முறியடிக்குமா? நீங்கள் வேட்டையன் படம் பார்த்து விட்டீர்களா? வேட்டையன் படம் எப்படி இருக்கு என்பது போன்ற உங்கள் கருத்துக்களை மறக்காமல் கமெண்ட் செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here