மாரி செல்வராஜ் இப்போது நடிகர் உதயநிதியைக் கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் இருக்கிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் ஆகிய இரு படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. அதுமட்டுமில்லாமல் அரசியல் ரீதியாகவும் கவனிக்கப்பட்டன.
கர்ணன் படத்தில் குறிப்பிட்ட காலத்தைக் குறிப்பிடுவது சம்மந்தமாக இணைய திமுகவினர் படக்குழுவினரைக் கடுமையாக விமர்சனம் செய்தனர். அப்போது உதயநிதி தலையிட்டு பிரச்சனையை சுமுகமாக்கினார். அப்போது மாரி செல்வராஜுடன் ஒரு படம் பண்ணவேண்டும் என்ற தன் ஆசையை வெளிப்படுத்தினார். அதையடுத்து இப்போது இருவரும் இணையும் படத்தின் வேலைகள் நடந்து வருகின்றன.
இந்த படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதையடுத்து இப்போது முக்கியமான கதாபாத்திரத்தில் வைகைப்புயல் வடிவேலுவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.