சாப்பிட வந்தவர்களை விரட்டிய வடிவேலு… கூப்பிட்டு வெச்சு சோறு போட்ட விஜயகாந்த்…

0
Follow on Google News

நடிகர் விஜய்காந்த்தால் சினிமாவில் வளர்ச்சி அடைந்த வடிவேலு, ஒரு கட்டத்தில் நன்றி இல்லாமல் ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பது போன்று, கேப்டன் விஜயகாந்த் அவர்களை மிகவும் தரம் தாழ்ந்து மேடைகளில் பேசியதின் விளைவு சினிமாவில் உச்சத்தில் இருந்த வடிவேலு அட்ரஸ் இல்லாமல் போனார் என்பது தான் வரலாறு.

பொதுவாகவே வடிவேலு மீது சினிமா துறையினர் மத்தியில் கடும் விமர்சனம் உண்டு, அவருடன் நடித்த துணை நடிகர்கள் பலர் அவருடைய வண்டவாளங்களை தண்டவாளம் ஏற்றி வருகிறார்கள், அதாவது வடிவேலு மாதிரி ஒரு மோசமான மனிதர் இந்த உலகில் இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் மிக கேவலமாக நடந்து கொண்டுள்ளார் என அவருடன் பயணித்தவர்கள் பொது வெளியில் தெறிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் கேப்டன் விஜயகாந்த் உடன் ஆயிரம் முரண்பாடுகள் இருந்தாலும், விஜயகாந்த் மறைவுக்கு வடிவேலு நேரில் வந்த அஞ்சலி செலுத்தி இருக்கு வேண்டும் என பலரும் தெறிவித்து வரும் நிலையில், ஒரு வேலை வடிவேலு நேரில் செலுத்த வந்திருந்தால், நிச்சயம் அவர் மீது பல செருப்புகள் வீசப்பட்டிருக்கும் அந்த அளவுக்கு விஜயகாந்த் அனுதாபிகள் கடும் கோபத்தில் இருந்து வருகிறார்கள், இருந்தாலும் ஒரு அறிக்கை வாயிலாகவது விஜயகாந்த இரங்கல் தெறிவித்து இருக்கலாம் வடிவேலு, ஆனால் அதை கூட செய்யவில்லை.

இந்நிலையில் வடிவேலு விஜயகாந்த் குறித்து பல தகவல் தொடர்ந்து வெளியாகி வருகிறது. கடந்த 2018ம் ஆனது வடிவேலுவின் கடைசி மக்கள் கலைவாணியின் திருமணம் மதுரையில் நடைபெற்றுள்ளது. அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்களை திருமணத்துக்கு அழைத்தால், தேவையில்லாத செலவு என பிரபலங்கள் யாரையும் வடிவேலு அழைக்கவில்லை யாம். சுமார் இரண்டாயிரம் நபர்களுக்கு மட்டுமே வடிவேலு அழைப்பு கொடுத்துள்ளார்.

அந்த வகையில் சுமார் 2000 நபர்களுக்கு மட்டுமே சமையல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, ஆனால் வடிவேலு மகள் திருமணம் நடக்கிறது என தெரிந்ததும் அவரைப் பார்க்கும் ஆசையில் 1500 பேர் கிட்ட அந்த திருமண மண்டபத்திற்கு வந்து விட்டார்கள். இதனை தொடர்ந்து கேட்டரிங் சர்வீஸ் ஆட்கள் வடிவேலுவிடம் சார், 2000 பேர் சொல்லி இருந்தீங்க, 2500 பேர் சாப்பிட்டுள்ளார்கள், மேலும் 1500 பேர் வந்துள்ளார்கள், என்ன சார் எக்ஸ்ட்ரா 1500 பேருக்கு சாப்பாடு போடலாமா.? என கேட்க.

ஆனால் வடிவேலு, அழைப்பு இல்லாமல் உள்ளே வந்தவர்களுக்கு நான் எதற்கு சோறு போடணும், அதெல்லாம் வேண்டாம், சாப்பாடு இல்லை என்று அனுப்பி விடுங்க என வடிவேலு தெரிவித்துள்ளார். இதை பார்த்து கொண்டிருந்தஹ் அங்கே திருமணத்திற்கு வந்த வடிவேலுவை வைத்து எலி படத்தை தயாரித்த தயாரிப்பாளர் மேலும் 1500 பேருக்கு சாப்பாடு பணத்தை நான் தருகிறேன், சாப்பிட வந்தவர்களை சாப்பாடு இல்லை என திருப்பி அனுப்ப வேண்டாம் என தெரிவித்து அனைவர்க்கும் சாப்பாடு ரெடி செய்துள்ளார்.

வடிவேலுவின் இந்த செயலுக்கு எதிர்மாறாக அமைத்தது கேப்டன் விஜயகாந்தின் திருமணம் . விஜயகாந்த்- பிரேமலதா தம்பதிகளின் திருமண மதுரையில் உள்ள தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றது. அங்கே அவருடைய ரசிகர்களும் அனுமதிக்கப்பட்டதோடு, மதுரையில் உள்ள நிறைய மண்டபங்களை புக் செய்து அங்கே ரசிகர்கள் பொதுமக்கள் யார் வந்தாலும் சாப்பாடு இல்லை என்று சொல்ல கூடாது ஏன் தரமான சாப்பாடு கொடுத்துள்ளார் விஜயகாந்த். இது தான் வடிவேலுக்கு விஜய்காந்துக்கும் உள்ள வித்தியாசம்.