அமராவதி படத்தில் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் அஜித்குமார் யாருடைய பின்பலமும் இல்லாமல், தனி நபராக போராடி அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்று வந்தவர் நடிகர் அஜித்குமார். தொடக்கத்தில் இவர் கதாநாயகனாக நடித்த ஒரு படம் தோல்வியை தழுவி இருந்தால் கூட சினிமாவில் காணாமல் போயிருப்பார் அஜித்குமார், அந்த அளவுக்கு யாருடைய உதவியும் இல்லாமல், தனி நபராக சினிமாவில் போராடியவர் அஜித்.
இவர் கதாநாயகனாக அறிமுகமாகி நடித்த அமராவதி, ஆசை, வான்மதி என தொடர்ந்து மூன்று படங்கள் வெற்றியை கொடுக்க, அடுத்து இவர் நடிப்பில் வெளியான காதல் கோட்டை நடிகர் அஜித்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றது.இதன் பின்பு தான் அஜித்துக்கென ரசிகர்கள் உருவானார்கள், அஜித் நடிப்பில் வெளியான 25வது படம் அமர்க்களம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்ததை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்தார்.
இந்நிலையில் வெறும் 30 ஆயிரம் சம்பளத்தில் அமராவதி படத்தில் ஹீரோவாக நடித்த அஜித் , இன்று பல கோடி சம்பளம் வாங்கி கொண்டிருக்கிறார், ஒரு கட்டத்தில் தனது ரசிகர் மன்றங்களை அஜித் கலைத்த பின்பு மேலும் அவருக்கு ரசிகர்கள் அதிகரிக்க தொடங்கினார்கள், இப்படி தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் வெறித்தனமான ரசிகர் பட்டாளத்தை கொண்ட அஜித் திரையில் வந்தாலே அதை பணம் செலவு செய்து வரிசையில் காத்திருந்து பார்க்க பெரும் கூட்டமே உள்ளது.
இப்படி ஒரு வெறித்தனமான ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகர் அஜித், வருடத்துக்கு ஒரு படம் நடித்தாலும், அதில் கதையில் கவனம் செலுத்தாமல் கோட்டை விட்டது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது, நடிகர் அஜித் நீண்ட நாட்களாக பைக் சம்பந்தமான படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்துவந்ததை, சரியான திரைக்கதை அமைப்பு இல்லாமல் பைக்கை மட்டுமே மய்ய படுத்தி நடக்கும் சண்டைக்காட்சிகளை வைத்து அஜித்தை ஏமாற்றிவிட்டார் வலிமை படத்தின் இயக்குனர் என்று கூறலாம்.
இருந்தும், இதில் அஜித்துக்கு முக்கிய பங்கு உண்டு, கதையை தேர்வு செய்வதில் கோட்டை விட்ட அஜித், அவரை நம்பி இருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிவிட்டார் அஜித், இந்நிலையில் வலிமை படம் மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை என்றாலும் வசூல் ரீதியாக அஜித் ரசிகர்கள் வெற்றி அடைய செய்து விடுவார்கள்,அப்படிப்பட்ட வெறித்தனமான உண்மையான ரசிகர்கள் கொண்ட அஜித் குமார்.
அடுத்த அவர் நடிக்கும் படங்களின் கதைகளை தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அவருக்கு ரசிகர்கள் தேவையில்லாமல் இருக்கலாம், ஆனால் அவருக்கான வெறித்தனமான ரசிகர்கள் வலிமை படத்திற்காக இரண்டு வருடம் காத்திருந்து மிகுந்து ஆர்வத்துடன் திரையரங்கு சென்று திரும்பியவர்கள், படத்தை பற்றி எந்த ஒரு கருத்தும் சொல்லாமல், வெளியில் தெரியாமல் வாய் மூடி தேம்பி தேம்பி அழுது கொண்டிருக்கிறார்கள் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது கூறிப்பிடத்தக்கது.