இனி ரோகிணி தப்பிக்கவே முடியாது…விஷயம் தெரிந்து ரோஹிணியை கொடுமை படுத்த தொடங்கும் விஜயா…

0
Follow on Google News

எதார்த்தமான கதைக்களத்தில் விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் தொடர் சிறகடிக்க ஆசை. இப்போதைக்கு விஜய் டிவியின் டிஆர்பி மானத்தை காப்பாற்றக்கூடிய ஒரே சீரியல் என்றால் அது சிறகடிக்க ஆசை சீரியல்தான். இந்த சீரியலில் நடிக்கும் ஒவ்வொரு கேரக்டரையும் இயக்குனர் சரியாக தேர்ந்தெடுத்து நடிக்க வைத்திருப்பது தான் இந்த சீரியலின் பிளஸ் பாயிண்ட்.

இதில் ரோகினி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை சல்மா அருண் அந்த கேரக்டருக்கு நச்சுனு பொருந்தி இருக்கிறார். இந்த ஹிட் சீரியலின் தினசரி எபிசோடை இடைவிடாமல் பார்த்து நேயர்கள், குறிப்பாக ரோகிணி பற்றிய விஷயங்கள் முத்து மற்றும் விஜயாவிற்கு எப்போது தெரியவரும் என்று நேயர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள. ஆனால் அதற்குள் முத்து மீனாவிற்கு பிரச்சனை வந்து விட்டதால் கதை வேறு போக்கில் திரும்பி விட்டது.

அதைத்தொடர்ந்து மீண்டும் குதூகலமான எபிசோடு வரப்போகிறது. அதாவது ஒருவழியாக மனோஜ்க்கு வேலை கிடைத்து விடுகிறது. எப்படியோ வேலை கிடைத்து விட்டது என்ற நிம்மதியில் வீட்டிற்கு திரும்புகிறார் மனோஜ். வீட்டிற்கு வந்ததும் விஜயாவிடம் ஒரு சீக்ரெட்டை சொல்கிறார். மனோஜ் சொன்ன சீக்ரெட்டை கேட்டவுடன் விஜயா குண்டை தூக்கி போட்டது போல் ஒரு ரியாக்ஷன் கொடுக்கிறார்.

தொடர்ந்து மனோஜ் ரோகினி மற்றும் வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் முன்னிலையும் எனக்கு வேலை கிடைத்துவிட்டது என்று சொல்கிறார். குறிப்பாக எனது படிப்புக்கும் தகுதிக்கும் ஏற்றார் போல கனடாவில் வேலை கிடைத்திருக்கிறது என்று சொல்கிறார். இந்த விஷயத்தை கேட்டதும் ரோகினிக்கு தலைகால் புரியவில்லை. உடனடியாக மனோஜை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை தெரிவிக்கிறார்.

ஆனால் இங்குதான் கதையில் ஒரு மிகப்பெரிய ட்விஸ்ட் இருக்கிறது. அதாவது வேலை முக்கால்வாசி உறுதியாகிவிட்டது, ஆனால் அதற்கான அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் வேணும் என்றால் 14 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால் பாஸ்போர்ட் விசா கிடைத்துவிடும் என்று முழு விவரத்தையும் மனோஜ் கூறுகிறார்.

இதைக் கேட்டதும் ரோகிணியின் முகம் உடனடியாக வாடி போகிறது. அதே சமயம், இந்த கூத்தெல்லாம் பார்த்துக் கொண்டு முத்து மற்றும் அண்ணாமலை சந்தோஷத்தில் குதூகலமாக கொண்டாடுகிறார்கள்.
அத்துடன் இனி இது சம்பந்தமாக மனோஜ் செய்த ஒவ்வொரு காமெடியும் தினமும் பார்த்து ரசிக்கலாம் என்று சொல்லிக்கொண்டே முத்து விழுந்து விழுந்து சிரிக்கிறார்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், விஜயா மனோஜ்க்காக 14 லட்சம் ரூபாய் உங்க அப்பாவிடம் கேட்டு வாங்கி கொடு என்று ரோகினியை டார்ச்சர் செய்ய தொடங்குவார், ஏற்கனவே சிட்டியிடம் ஒரு லட்சம் கடன் வாங்கி வட்டி கட்டி கொண்டிருக்கும் ரோகிணி 14 லட்சத்துக்கு என்ன செய்வது என விதிபிதிங்கி நிற்க்க, ஒவ்வொரு நாளும் என்னமா.? உங்க அப்பாவிடம் கேட்டியா.? 14 லட்சம் எப்ப வருகிறது என தொடர்ந்து விஜயா நச்சரிக்க, மறுப்பக்கம் மனோஜ்ம் கனடா போகவேண்டிய நேரம் நெருங்கி விட்டது, 14 லட்சம் கட்டவில்லை என்றால் இந்த வேலை கேன்சலாகிவிடும் என ரோகிணியை டார்ச்சர் செய்ய இருக்கிறார் மனோஜ். மறுபக்கம் ரோகிணி, மனோஜ், விஜயா ஆகிய மூவரையும் கேலி கிண்டல் செய்ய அடுத்தடுத்து விறுவிறுப்பாக செல்ல இருக்கிறது சிறகடிக்க ஆசை.