இந்த முறை இரண்டு வீட்டுடன் களம் காணும் பிக் பாஸ் சீசன் 7

0
Follow on Google News

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான ஷோ என்றால் அது கண்டிப்பாக பிக் பாஸ் தான். 100 நாள் தொடர்ந்து ஒரு வீட்டில் 15 பேரை அடைத்து வைப்பர். அவர்கள் போடும் சண்டை விஜய் டிவியின் டிஆர்பி வேட்டை. இந்நிகழ்ச்சிக்கு மற்றொரு பலம் என்றால் உலக நாயகன் கமல்ஹாசன் தான். இவர் தான் இந்த நிகழ்ச்சிற்கு தொகுப்பாளராக இருந்து வருகிறார்.

இந்த சோவின் வெற்றி காரணமாக தற்போது இதனது சீசன் 7 வரவுள்ளது. தற்போது சீசன் 7-க்கு ஆட்களை தேர்வு செய்யும் பணியில் விஜய் டிவி ஆனது தீவிரம் காட்டி வருகிறது. இந்நிகழ்ச்சியில் சோஷியல் மீடியாவில் புகழ்கள், விஜய் டி.வியில் உள்ளவர்கள், ஒரு காலத்தில் புகழ் பெற்ற நடிகைகள், பாடலாசிரியர்கள், மாடல்கள், நாட்டுபுற கலைஞர்கள் போன்றவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்குபெறுவார்கள்.

இந்நிகழ்ச்சியில் கலந்து வெற்றி பெரும் நபர்களுக்கு சிறந்த வரவேற்ப்பு கிடைக்கும். பொதுவாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றாலே அவர்களுக்கு பாப்புலாரிட்டி கிடைக்கும். அது நல்ல விதமாகவும் இருக்கலாம் கெட்ட விதமாகவும் இருக்கலாம். உதாரணமாக கடந்த சீசன் வின்னர் அசீமுக்கு முழுவதும் எதிர்ப்புதான் அதிகமாக இருந்தது. இன்னொரு பக்கம் நிகழ்ச்சியில் வெற்றியே காணாவிட்டாலும் ஓவியாவிற்கு என ஒரு ஆர்மியே உள்ளது.

தற்போது வெளியாக உள்ள பிக்பாஸ் சீசன் 7 குறித்து சில முக்கியமான தகவல்கள் கசிய தொடங்கின. அது என்னவென்றால் வரும் பிக்பாஸ் சீசன் 7-ல் இரண்டு வீடுகள் பயன்படுத்தப்படும் என்பது தான். இரண்டு வீடுகளிலும் போட்டியாளர்களை பிரித்து தங்க வைக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதில் புதிய வீட்டில் புதிய போட்டியாளர்களையும் பழைய வீட்டில் பழைய போட்டியாளர்களை தங்க வைக்க கூடும் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன. இந்த சீசன் இரண்டு வீடுகள் இருப்பதால் போட்டியாளர்கள் அதிகமாக்க படுமா என்ற கேள்விக்கு இல்லை அதே அளவில் தான் போட்டியாளர்கள் பங்குபெருவர்கள் எனவும் அவர்களை தனி தனியே பிரித்து தங்கவைக்கப் படலம் என்றும் தகவல்கள் கூறுகின்றன. மேலும், இந்த முறை போட்டியாளர்களாக விஜய் டிவிக்கு நெருக்கமானவர்கள்,

சோஷியல் மீடியாவில் வைரலானவர்கள், ஒருகாலத்தில் பரபரப்பாக இருந்து இன்று ஒதுங்கியிருக்கும் சீனியர் நடிகைகள், மாடல்கள், வெளிநாடுவாழ் தமிழர்கள் என்று கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த இரண்டு வீடு கான்சப்ட் ஏற்க்கனவே வெளியான பிறமொழி பிக் பாஸில் உள்ளது என்றும் தமிழில் முதல் முறையாக முயற்ச்சிக்க படுவதாகவும் சொல்கிறார்கள்.

அதே நேரம் இரண்டு வீடு கான்செப்ட் போட்டியாளர்களிடம் முன் கூட்டியே அறிவிக்கப்படுமா? அல்லது பங்கேற்று சில நாட்களுக்கு பிறகு இரண்டு வீடுகளையும் ஒன்றாக்கி அந்த விஷயத்தை கூறுவார்களா என்பது கூறித்து இன்னும் முடிவாகவில்லை எனவும் தகவல்கள் வெளியாகின. மேலும் இந்த சீசனின் ப்ரோமோ இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.