போதை, சாதி தலைவன், வன்கொடுமை சட்டம், இதனால் பாதிக்கப்பட்ட மக்களின் ஆதரவே “ருத்ர தாண்டவம்” வெற்றிக்கு காரணம்..

0
Follow on Google News

“ருத்ர தாண்டவம்” படத்துக்கு மக்கள் வழங்கும் பேராதரவும், பெருகிவிட்ட தொழிநுட்பத்திலும் திரையரங்கில்தான் பார்ப்போம் என மக்கள் செல்வதும் , அவர்கள் இப்படத்துக்கும் இயக்குநருக்கும் அவர் சொல்லவரும் விஷயத்துக்குமான பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. அஜித்குமார் கால்ஷீட் கிடைக்குமா என அவனவன் தவமிருக்கும் காலத்தில் யாருமே தேடாத அஜித்தின் மச்சினனை படத்தின் ஹீரோவாக நடிக்க வைத்து இயக்குநர் ஜெயித்திருப்பது எப்படி?

ஜாம்பவான்கள் பீம்சிங் தொடங்கி ஷங்கர் வரை எல்லார் படமும் ஸ்டார் வேல்யூ என மிகபெரிய நட்சத்திரங்களையே நம்பும் பொழுது ஒரு இயக்குநருக்காக மக்கள் குவிந்தார்களே எப்படி? படத்தின் மிகபெரிய வரவேற்பு சொல்வது ஒன்றுதான், படத்தில் சொல்லும் ஒவ்வொரு விஷயத்தாலும் ஏராளமானவர்கள் பாதிக்கபட்டிருக்கின்றார்கள் என்பதே இந்த படத்தின் வெற்றி என்று கூட சொல்லலாம்,

அது போதை, சாதி தலைவன், தவறாக பயன்படும் சாதிய வன்கொடுமை சட்டம், அச்சட்டத்தின் பின்னணியில் சிலர் செய்யும் ரவுடியிசம் என பாதிப்புகள் ஏராளம், சாதிய வன்கொடுமை சட்டம் எவ்வளவு தவறாக பயன்படுத்தபட்டது என்றால் கடந்த ஆண்டில் அச்சட்டம் திருத்தபடும் அளவு அது மோசமாயிற்று, பிரபல சாதி ரவுடிகள் சொத்துக்களை ஆக்கிரமிக்கவும் மிரட்டவும் அபகரிக்கவும் பல இடங்களில் அது உதவிற்று.

சாதிய போர்வையின் சட்டங்களில் ஒளிந்தபடி ஒவ்வொரு ரவுடியும் செய்த அட்டகாசம் கொஞ்சமல்ல‌, அவர்களால் பாதிக்கபட்ட கண்ணீர்விட்ட நல்ல குடும்பத்து மக்கள், பக்திமிக்க மக்கள் கொஞ்சமல்ல‌, அந்த கண்ணீர்தான் பாஞ்சாலியின் கண்ணீர் போல் தர்மத்தை மீட்டெடுத்திருக்கின்றது, இயக்குநர் மோகன் என்பவர் பாதிக்கபட்ட மொத்த மக்களின் பாதிப்பாக அப்படத்தை கொடுத்திருக்கின்றார். கூட்டம் கூட்டமாக மக்கள் தரும் ஆதரவு காலம் காலமாக ஒரு குறிப்பிட்ட கும்பலிடம் இருந்த திரையுலகில் இப்படி ஒரு படம் வராதா என மக்கள் ஏங்கிய ஏக்கத்தை சொல்கின்றது.

இப்படம் செய்த மிகபெரிய சாதனை நடுநிலை,சமதர்மம்,சமூக நீதி என உளறிகொண்டிருந்த கும்பலை கதற வைத்திருப்பது, சினிமா என்பது விஞ்ஞான வித்தை, அதில் அவரவர் கருத்தை தன் திறமைபடி பதிவு செய்யலாம், மோகன் அதை திறம்பட நாட்டுபற்றுடன் சமூக நோக்குடன் செய்தார், தேசவிரோத இந்து விரோத கும்பல்கள் கதறுவதே படத்தின் மாபெரும் வெற்றி, இயக்குநர் மோகன் இன்னும் பல படங்கள் இப்படி கொடுக்க வாழ்த்துக்கள், தயாரிப்பாளர் இல்லையென்றால் இனி தேசாபிமான மக்களே அவரை ஆதரிப்பார்கள் என்பது உறுதி

எம்.ஆர் ராதா ஒருமுறை பேசியது, “டேய்.. கலைஞன்னு சொல்றவனுக்கு சமூக அக்கறை வேணும், நாட்டுபற்றும் போலிகளை கிழிக்கிற தைரியமும் வேணும் அவன் தாண்டா உண்மையான கலைஞன்” அவ்வகையில் தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவினை பெற்றிருக்கும் “திரை இயக்க கலைஞர்”ன் மோகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள், தர்மம் எப்பொழுதும் அதர்மம் அத்துமீறி ஆடும் பொழுது ஒருவனை உருவாக்கும், அப்படி, திரையுலகில் மோகன் எனும் தைரியமான இயக்குநரை அப்படி உருவாக்கியுள்ளது – ஸ்டான்லி ராஜன்