இந்தியன் 2 கூடவே செல்லும் தயாரிப்பு நிறுவனம் … சங்கர் மீது நம்பிக்கை இல்லையா.?

0
Follow on Google News

இயக்குனர் சங்கர் தயாரிப்பில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், விறுவிறுப்பாக நடைபெற்று வரும் திரைப்படம் இந்தியன் 2, இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் சில காட்சிகள் எடுக்கப்பட்ட நிலையில், தைவான் மற்றும் தென் ஆஃப்ரிக்காவில் பிற காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. ரயில் தொடர்பான சண்டை காட்சிகள் தைவானில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது தென் ஆப்ரிக்காவில் உள்ள அடர்ந்த காட்டு பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்று வருகிறது, இந்த பகுதி தென் ஆப்ரிக்காவில் உள்ள நகர் பகுதியில் இருந்து சுமார் 6 மணிநேரம் அடர்ந்த காட்டு பகுதி வழியாக பயணம் செய்து படப்பிடிப்பு நடைபெறும் இடத்தை சென்றடைய வேண்டுமாம்.

அதனால், ஒவ்வொரு நாளும் வருவதற்கு 6 மணிநேரம், திரும்பி செல்வதற்கு 6 மணிநேரம் என 12 மணிநேரம் பயணம் செய்து படப்பிடிப்பு தளத்திற்கு வர முடியாது என்பதால், படப்பிடிப்பு நடைபெறும் அடர்ந்த காட்டு காட்டு பகுதியில் உள்ள அந்த கிராமத்தில் அருகில் உள்ள சிறிய ஹோட்டல்களில் தங்கி பட குழுவினர் படப்பிடிப்பு நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தைவான் மற்றும் சவுத் ஆப்பிரிக்காவில் இந்தியன் 2 படத்தின் கடைப்பிடிப்பு நடைபெறும் இடங்களுக்கு இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்காவை சார்ந்த தமிழ் குமரன் மற்றும் ரெட் ஜீன்ஸ் மூவிசை சேர்ந்த செண்பகமூர்த்தி இருவரும் படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்கு கூடவே செல்வதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் படத்தின் பட்ஜெட்டை அதிகரித்து விட வேண்டாம் என்கின்ற அச்சத்தில்தான் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கூடவே இருந்து சென்று கவனித்து வரலாம் என கூறப்பட்டது.

ஆனால் வெளிநாடுகளில் கடைபிடிப்பு நடைபெறுவதால் இயக்குனர், நடிகர்களுக்கு தேவையான உதவிகளை கூடவே இருந்து செய்வதற்காக தான் தமிழ் குமரன் மற்றும் செண்பகமூர்த்தி இருவரும் அங்கே சென்றுள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் தென் ஆப்ரிக்காவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியதும் 25நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த உள்ளார்கள், அதற்காக பிரசாத் ஸ்டுடியோவில் மிக பிரமாண்ட செட் அமைக்கும் பனி நடைபெற்று வருகிறது.