இது சாதிய வன்மத்தை வளர்த்தெடுக்கின்ற வேலை..! நடிகர் சூர்யாவுக்கு தரமான பதிலடி..

0
Follow on Google News

நடிகர் சிவகுமார் குடும்பம் மீது சினிமா துறையில் மட்டுமில்லை, பொது மக்கள் மத்தியில் ஒரு நற்பெயர் இருந்து வந்தது, ஆனால் நடிகர் சூர்யா ஜோதிகா திருமணம் முடிந்த சில வருடங்களில் நடிகர் சிவகுமார் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர் அந்த வகையில் தற்போது நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

சூர்யா நடிப்பில் இதற்கு முன் வெளியான சூரரை போற்று படம் பிரமன் சமூகத்தை சேர்ந்த கோபிநாத் உண்மை கதையை படமாக்கப்பட்டது என கூறப்பட்ட நிலையில், ஆனால் அந்த படத்தில் கோபிநாத் வேடத்தில் நடித்த சூர்யா தன்னை ஒரு பகுத்தறிவாதி போன்றும், பெரியாரிஸ்ட் போன்றும் காட்சிகள் மூலம் வெளிப்படுத்தினார், அதே போன்று தற்போது வெளியான ஜெய்பீம் படத்தில் சில சர்ச்சைக்குரிய கட்சிகளால் ஒரு குறிப்பிட்ட சமூக மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

படத்தில் குருமூர்த்தி என்கிற பெயரில் வரும் போலீஸ் அதிகாரியை சில குறியீடு மூலம் வன்னிய சமூகத்தை சேர்ந்தவர் போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது, ஆனால் உண்மை சம்பவத்தில், அவருடைய பெயர் அந்தோனி சாமி என்றும் தலித் சமூகத்தை சேர்ந்த கிறிஸ்துவர் என்பது தெரியவந்துள்ளதை தொடர்ந்து, மேலும் வன்னிய சமூகத்தை திரைப்படத்தில் தவறாக சித்தரித்துள்ள இயக்குனர் மற்றும் நடிகர் சூர்யாவுக்கு எதிராக வன்னிய சமூகத்தினரிடம் இருந்து கடும் எதிர்ப்பு குரல் எழுந்து வருகிறது.

இந்நிலையில் இது குறித்து மறைமுகமாக கருத்து தெரிவித்துள்ள பிரபல பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே,உண்மைச் சம்பவம் என்பது, உள்ளதை உள்ளபடி சொல்வது. பெயர்களையும் அடையாளங்களையும் (மட்டும்) மாற்றினால், அதன் நோக்கம் சந்தேகிக்கப்படுவது இயல்பே. என யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் மறைமுகமாக ஜெய்பீம் படத்தில் நடித்த நடிகர் சூர்யாவுக்கு தரமான பதிலடி கொடுத்தது போன்று அமைந்துள்ளது ரங்கராஜ் பாண்டேவின் கருத்து.

இந்நிலையில் ரங்கராஜ் பாண்டே கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நெட்டிசன், ஜெய்பீம் படத்தின் இயக்குநர்,அந்த படத்தில், வழக்கறிஞர் சந்துரு அதே சந்துருவாக, ராசாகண்ணு அதே ராசாகண்ணுவாக, விசாரனை அதிகாரியான பெருமாள்சாமி அதே பெருமாள்சாமியாக காட்சி படுத்தப்பட்டுள்ளது. ஆனால், போலீஸ் அதிகாரி தலித் சமுதாயத்தை சேர்ந்த அந்தோணிசாமி என்கிற கிருஸ்துவரை வன்னிய சமூதாய குருவாக சித்தரிக்கப்பட்டுள்ளார்.

இந்த செயல் தமிழ் குடிகளுக்குள் சாதிய வன்மத்தை வளர்த்தெடுக்கின்ற வேலை என கருத்து தெரிவித்து வரும் நெட்டிசன்கள் மேலும் உன் சாதி என் சாதி எல்லா சாதி லையும் திருட்டு பய இருகிறார்கள் என வசனம் வைத்துவிட்டு, நீங்க இவளோ திருட்டு பயலா இருக்க கூடாது ஜெய் பீம் இயக்குனர் மற்றும் நடிகர் சூர்யா என ரங்கராஜ் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடிகர் சூர்யாவை வெளுத்து வாங்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.