நெல்சன் சினிமா வாழ்க்கையை திருப்பி போட்ட ஜெயிலர்… அப்ப நெல்சன் சினிமா கேரியர்..

0
Follow on Google News

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது. ரஜினி கடைசியாக நடித்த அண்ணாத்தே படம் வெளியாகி 2 ஆண்டுகளுக்குப் பின்பு ரஜினியின் ஜெயிலர் படம் வெளி வருவதால், இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்தினை திருவிழாவை போன்று ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

கட் அவுட் வைப்பதும் போஸ்டர் ஒட்டுவதும் ‌ வெடி வெடிப்பதும் என தீபாவளி போன்று பண்டிகை நாளாக இன்றைய ஜெயிலர் பட ரிலீஸ் நாளை மாற்றி உள்ளனர் ரஜினி ரசிகர்கள். ஆனால் உண்மையில் இந்தப் படம் ரஜினிக்கும் நெல்சனுக்கும் கம்பேக் ஆக வந்துள்ளதா? இல்லை ‌ அவுட் ஆகியுள்ளதா? என்பதுதான் இன்றைய காரசார விவாதம் ஆகவும் உள்ளது.

ஏற்கனவே தகவல் வெளியானபடி தன்னுடைய மகனை காப்பாற்ற போராடும் தந்தையின் கதைதான் ஜெயிலர் ஒன்லைன் என்பது உறுதியாகியிருக்கிறது. நெல்சன் திலீப்குமார் வழக்கமான தனது டார்க் காமெடியை இதிலும் தூவியிருக்கிறார். இப்படத்தில் ரஜினிகாந்த் மாஸாக கெத்தாக உள்ளார் என்று அனைவரும் கூறி வருகின்றனர்.

மேலும் அனிருத் இசை தியேட்டரையே ஆட வைத்துள்ளது. என்னதான் பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் நெகட்டிவ் விமர்சனங்களும் வந்து கொண்டே உள்ளது. அவை யார் என்று உற்றுப் பார்த்தால் அனைத்தும் விஜய் ரசிகர்கள். விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள் இடையே யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற போட்டி நிலவி வருகிறது. ஜெய்லர் படத்தின் மூலம் ரஜினி என்றும் நான் தான் ஒரே சூப்பர் ஸ்டார் என்று நிரூபித்து விட்டார் ரஜினிகாந்த்.

அதனை கொஞ்சமும் ஏற்க முடியாத இந்த விஜய் ரசிகர்கள் படத்தைப் பற்றிய தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். இந்த கருத்துக்கள் அனைத்தும் படத்தின் வசூலை பாதிக்கும் என்று சிலர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயிலர் முன்பதிவுகளில் ₹19 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தற்பொழுது தகவல் வெளியாகி வருகிறது. இந்தியாவில் முன்பதிவு மூலம் ஜெயிலர் படம் ₹12.8 கோடி வசூலித்துள்ளது.

படத்தின் தமிழ் பதிப்பில் சுமார் ₹11.7 கோடியும், தெலுங்கு பதிப்பு மூலம் ₹1.1 கோடியும் வசூலித்துள்ளது. அமெரிக்காவில் ஜெயிலர் படத்திற்கான 37,000 டிக்கெட்டுகளை விற்று $802,628 (₹6.64 கோடி) வசூலித்துள்ளது. லைகா தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் முதல் நாளிலேயே 80 கோடி வசூல் செய்தது என லைகா போஸ்டரை வெளியிட்ட நிலையில், ஜெயிலர் படத்தின் புக்கிங் அதை விட அதிகமாக இருக்கும் நிலையில், முதல் நாளே தமிழ்நாட்டில் 40 கோடி ரூபாயும், உலகளவில் 100 கோடி வசூலையும் ஜெயிலர் திரைப்படம் அடைந்து மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைக்கும் என கணிப்புகள் வெளியாகி உள்ளன.

இதனால் பீஸ்ட் படத்தில் மொக்கை வாங்கிய நெல்சன் தற்போது மாஸ் காட்டுகிறார். அவரின் சம்பளமும் கூடியுள்ளது. பீஸ்ட் படத்திற்கு தனது சம்பளமாக எட்டு கோடி வாங்கியுள்ளார். ஆனால் தற்போது ஜெய்லர் படத்திற்கு பத்து கோடியை சம்பளமாக வாங்கியுள்ளார். இதனால் அவரின் அடுத்த படத்திற்கு 20 கோடியாக கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியோ விஜயை வைத்து பீஸ்ட் படம் எடுத்து அதாள பள்ளத்தில் விழுந்த நெல்சன், ரஜினியை வைத்து ஜெயிலர் படம் எடுத்து விழுந்த வேகத்தில் எழுந்துவிட்டார் என்றே சொல்லலாம்,அந்த அளவுக்கு ஜெயிலர் படம் மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.