பிரபல நடிகையின் தந்தை திடீர் மரணம்

0
Follow on Google News

பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த ‘அட்டக்கத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை நந்திதா. தொடர்ந்து எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, கபடதாரி உள்ளிட்ட கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்து முக்கியமான கதாநாயகிகளில் ஒருவரானார்.

சினிமாவில் மட்டுமில்லாது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்துவரும் நந்திதா, சமீபத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று திரையுலகை மட்டுமில்லாது அவரது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அந்த பதிவில், ‘தனது அப்பா சிவசாமி (வயது 54) நேற்று காலமானார் என்பதை எனது நலம் விரும்பிகள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

நந்திதாவின் இந்த பதிவை பார்த்த திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். நந்திதா அப்பாவின் மறைவு அவரது குடும்பத்தினரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளளது.