இப்படி தான் எங்களை அழைத்து சென்றர்கள்… நீயா நானா நிகழ்ச்சி உள்ளே நடந்ததை அப்படியே போட்டுடைத்த கலந்து கொண்டவர்…

0
Follow on Google News

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் நீயா நானா. பிரபல தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சி மக்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஒரு தலைப்பின் கீழ் இரு தரப்பினரிடையே நடைபெறும் அனல் பறக்கும் விவாதம், அதில் கோபிநாத்தின் கருத்து என்று நீயா நானா நிகழ்ச்சியின் ஒவ்வொரு எபிசோடும் விறுவிறுப்பாக இருக்கும்.

இருப்பினும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் தங்களின் சொந்த கருத்தை பேசுகிறார்களா, அல்லது அவர்கள் இப்படி தான் பேச வேண்டும் என்று எழுதி தரப்படுகிறதா என்று நம்மில் பலருக்கும் சந்தேகம் இருக்கலாம். உண்மையில் நீயா நானா நிகழ்ச்சியில் என்ன நடக்கிறது என்பதை பற்றி கடந்த வார எபிசோடில் கலந்து கொண்ட தவம் என்கிற நபர் தனது youtube சேனலில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

அவர் கூறிய விஷயங்கள் ஒவ்வொன்றும் வியப்பூட்டும் வகையில் இருப்பதாக பலரும் கமெண்ட்டின் தெரிவித்து வருகின்றனர். அப்படி அவர் என்ன கூறியிருக்கிறார் என்று இங்கே பார்க்கலாம். நீயா நானா நிகழ்ச்சி ஷூட்டிங் இன் காலை முதல் மாலை வரை என்னவெல்லாம் நடக்கிறது? ,கோபிநாத் எப்படி பேசுகிறார்?, நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களை எப்படி பேச வைக்கிறார்கள்? என்பது பற்றி எல்லாம் விவரமாக பேசி இருக்கிறார்.

அதில் “நீயா நானா நிகழ்ச்சியில் நாம் கலந்து கொள்வதை உறுதி செய்த உடனே சென்னைக்கு வர சொல்லி விடுகிறார்கள். மேலும் நம்முடன் எத்தனை பேர் வருகிறார்கள் என்பதையும் கேட்பார்கள். நாம் நம் குடும்ப உறுப்பினர்கள் எத்தனை பேரை வேண்டுமானாலும் கூட்டிட்டு போகலாம். சென்னையில் நாம் எந்த ஏரியாவில் இருந்தாலும் நம்மை அழைத்துப் போக கார் அல்லது வேன் வந்துவிடுகிறது.

நீயா நானா நிகழ்ச்சிக்கு வடபழனி தாண்டி ஒரு செட் அமைத்திருக்கிறார்கள். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எல்லாம் நிகழ்ச்சிக்கும் அங்கு தான் ஷூட்டிங் நடைபெறுகிறது. சென்னையில் பல ஏரியாக்களில் இருந்து வந்த எல்லோரையும் ஒரே வேனில் கூட்டி சென்றார்கள். நாங்கள் அங்கு சென்று இருந்த போது நீயா நானா நிகழ்ச்சி காண ஏற்பாடு செய்திருந்தார்கள்.

இன்னொரு இடத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்காக செட் அமைக்கப்பட்டு இருந்தது. அதுபோல பல செட் உள்ளே அமைக்கப்பட்டிருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக நமக்காக சூட்டிங் ஸ்பாட்டில் ஒரு ரூம் ஏற்பாடு செய்து தருகிறார்கள். அந்த ரூமில் சென்று குளித்துவிட்டு வெளியாகி நாமும் நம்முடன் வந்தவர்களும் காலை உணவை சாப்பிட போகலாம். அந்த செட்டிலையே காலை உணவை அவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.இட்லி பொங்கல் தோசை என காலை உணவுக்கு விதவிதமான உணவுகளை பரிமாறுகிறார்கள்.

சாப்பிட்டு முடித்ததும் 10 மணி வாக்கில் செட்டுக்குள் அமர வைக்கிறார்கள். அங்கு மொத்தம் எட்டு கேமராவில் ஷூட்டிங் செய்யப்பட்டது. பின்னர் அந்த நிகழ்ச்சியின் அசிஸ்டன்ட் டைரக்டர் வந்து யார் யார் எங்கு உட்கார வேண்டும் என்பதை சொல்லிவிட்டு செல்கிறார். அதன் பிறகு எல்லோரிடமும் ஒரு பேப்பரில் கையெழுத்து வாங்குகிறார்கள். அதில் இந்த நிகழ்ச்சியில் நான் முழு மனதோடு பங்கே இருக்கிறேன் என்பது போன்ற சில விதிமுறைகள் எழுதப்பட்டிருக்கும். அந்த பேப்பரில் கையெழுத்து போட்டு கொடுத்த பின்னர் கோபிநாத் வருகிறார்.

கோபிநாத் வந்தவுடன் எல்லோரும் எங்கிருந்து வந்திருக்கும் போது எதற்காக கலந்து கொண்டோம் என்பது பற்றி பேச வேண்டும். கோபிநாத் விவாதத்தை தொடங்குவார். இப்படியாக மதியம் வரைக்கும் ஷூட்டிங் சென்று கொண்டே இருக்கும். பின்னர் மதிய சாப்பாட்டிற்காக அரை மணி நேரம் ரெஸ்ட் விடுகிறார்கள். சாப்பிட்டு முடித்தவுடன் மீண்டும் ஷூட்டிங் நடைபெறும். மாலை வரை சூட்டிங் நடைபெற்றுக் கொண்டே இருக்கும்.

ஆனால் எந்த இடத்திலும் நீங்கள் இதை தான் பேச வேண்டும் இவற்றை பேசக்கூடாது என்று கண்டிஷன் போடவில்லை. எல்லோரும் அவர்கள் விருப்பப்படியே நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்தார்கள். சாயங்காலம் ஆறு மணிக்கு நிகழ்ச்சி முடிந்ததும் அரை மணி நேரம் டைம் கொடுக்கிறார்கள். அந்த அரை மணி நேரத்தில் புகைப்படம் எடுத்துக் கொள்பவர்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கு முன்பு வரைக்கும் நமது ஃபோன்களை ஸ்விட்ச் ஆப் செய்து உறவினர்களிடம் கொடுத்து விட வேண்டும். இறுதியாக நிகழ்ச்சி முடிந்ததும் எங்கிருந்த அழைத்துச் சென்றார்களோ அங்கேயே போய் இறக்கி விடுவார்கள். இப்படித்தான் உண்மையில் நீயா நானா நிகழ்ச்சியில் நடத்தப்படுகிறது” என கலந்து கொண்டவர் தெரிவித்துள்ளார்.