விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல் பாக்யலட்சுமி. தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நம்பர் ஒன் சீரியல் என்கிற அந்தஸ்துடன் அதிக பார்வையாளர்களை கவர்ந்துள்ளது பாக்யலட்சுமி சீரியல். கடந்த சில வாரங்களாக இந்த சீரியலின் பரபரப்பு அதிகரித்து அடுத்து என்ன.? எடுத்து என்ன .? என்கிற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
மனைவியை வெறுக்கும் கோபி, இருந்தும் குடும்பத்தை கட்டி காக்கும் மனைவி பாக்யலஷ்மி, வயதான மாமனார்,மாமியாரை மகள் போல் பார்க்கு பாக்யா, குடும்பத்தை நிர்வகிக்கும் ஒரு சிறப்பான குடும்ப தலைவியாக பாக்யா எது செய்தாலும், இதெல்லாம் உனக்கு தேவையா என எறிந்து விழும் கோபி, கணவர் என்ன சொன்னாலும் கேள்வி கேட்காமல் ஒரு வித பயத்துடன் செய்யும் ஒரு வெகுளி பெண்ணாக வரும் பாக்யா.
தனது குடும்பத்துக்கு தெரியாமல் ராதிகாவுடம் கள்ள காதலில் இருந்து வரும் கோபி. குடும்பத்தில் மகள் மீது மட்டும் அளவு கடந்த பாசம் வைத்துள்ள கோபி. என்ன பிரச்சனை வந்தாலும் கள்ள காதலி ராதிகாவை விட்டு பிரிய மனமில்லாமல் தவிக்கும் கோபி. இப்படி குடும்பத்துக்கு தெரியாமல் கள்ள காதலியிடம் இருக்கும் கள்ள உறவு பற்றி குடும்பத்துக்கு ஒரு கட்டத்தில் தெரிய வந்ததும் குடும்பத்துக்குள் பூகம்பகமாக வெடிக்கிறது பிரச்சனை.
குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் கோபியை நிற்க்க வைத்து கேள்வி மேல் கேள்வி கேட்கிறார் பாக்யா, எந்த ஒரு கேள்விக்கும் பதில் சொல்ல முடியமால் திகைத்து போய் நிற்கும் கோபி செய்த தவறு குடும்ப உறுப்பினர் அனைவர்க்கும் தெரிய வருகிறது. இந்த சீரியலை பார்த்த அனைவரும், கோபியை வீட்டை வீட்டு வெளியேற்றபடுவார் என எதிர்பார்க்க, ஆனால் இனி எனக்கு என்ன வேலை நீங்கள் உங்கள் இஷ்டம் போல் வாழலாம் என சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியிருக்கிறார் பாக்யா.
பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு கள்ள காதலி ராதிகாவை திருமணம் செய்ய திட்டமிட்ட கோபி, தனது இரண்டாவது திருமணத்துக்கு பின்பு மகள் மயூரியை மட்டும் தன்னுடன் அழைத்து சென்று இரண்டாவது மனைவி ராதிகாவுடம் வாழலாம் என திட்டமிட்டிருந்தார் கோபி. காரணம் அவருடைய குடும்பத்தில் மற்றவர்களை விட அவருடை மகள் மயூரி மீது மட்டும் அளவுக்கு அதிகமான பாசம் உண்டு, அதே போன்று மயூரிக்கும் தந்தை கோபி மீது பாசம் அதிகம்.
இந்நிலையில் வீட்டை விட்டு பாக்யா வெளியேறிய பின்பு குடும்ப உறுப்பினர்கள் சோகத்தில் இருக்க தனி அறையில் கோபி மௌனமாக இருக்கிறார். மகள் மயூரி அந்த அறைக்குள் நுழைய எதோ பேச முயற்சி செய்கிறார் கோபி, அப்போது மகளை பாசமாக தொடும் கோபியை தட்டிவிட்டு, என்னை தொடாதிங்க என வெறுத்து தந்தையை ஒதுக்குகிறார் மயூரி, இதனால் நிலைகுலைந்து போகிறார் கோபி, மேலும் மயூரி கோபமாக தந்தையிடம் பேசுகிறார்.
இதனால் கடுமையாக மன உளைச்சலுக்கு உள்ளாகும் கோபி, தான் செய்த தவறுக்கு தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வெறுத்து தன்னை ஒதுக்குவதை பொறுத்து கொள்ள முடியாமல், தனி அறையை விட்டு வெளியில் வந்து குடும்ப உறுப்பினர்களை பார்க்க கூட முடியாத நிலையில் தனி அறையில் அடைந்து இருக்கும் கோபி, அந்த அறையில் தூக்கீட்டு தற்கொலை முயற்சியில் அவர் ஈடுபடுவதும், குடும்ப உறுப்பினர்கள் அவரை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பது தான் அடுத்தடுத்த வாரங்களில் வரும் காட்சிகள் என தகவல் வெளியாகியுள்ளது.