தேனி மாவட்டத்தில், பேருந்து வசதி கூட இல்லாத ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த மாரிமுத்து, தன்னுடைய இன்ஜினியரிங் படிப்பை விருதுநகரில் படித்து முடித்துவிட்டு, அவர் படித்த துறை சார்ந்த வேலைக்கு செல்லாமல், சினிமா மீது இருந்த மோகத்தினால் சென்னை வருகிறார. உதவி இயக்குனராக ராஜ்கிரண், வசந்தன், சீமான், எஸ் ஜே சூர்யா, மணிரத்தினம், ஏன் சிலம்பரசனிடம் மன்மதன் படத்திலும் உதவி இயக்குனராக பணியாற்றிய வந்துள்ளார் மாரிமுத்து.
இதனையில் உதவி இயக்குனராக மாரிமுத்து இருந்த போது கடுமையான பொருளாதார பிரச்சனையால் சென்னையில் தவித்து வந்துள்ளார். விடுமுறை நாட்களில் அவர் ஊருக்கு கூட செல்ல பணம் இல்லாமல், அவர் தங்கியிருந்த அறையில் இருந்த பாட்டிலில் இருந்த ஊறுகாவையும் தண்ணீரை மட்டுமே குடித்துக் கொண்டு மூன்று நாட்கள் இருந்துள்ளார் மாரிமுத்து,
அந்த கடையில் சாப்பிட கூட பணம் இல்லாமல் தவித்து வந்திருக்கிறார் மாரிமுத்து. தொடர்ந்து மூன்று நாட்கள் ஊறுகாய் மட்டும் சாப்பிட்டு வந்த மாரிமுத்துக்கு உடல்நிலை குறைபாடு ஏற்பட்டு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த அளவுக்கு வறுமையிலும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று போராடி வந்துள்ளார் மாரிமுத்து.
ஒருமுறை அவருடைய மனைவி இரண்டாவது குழந்தைக்கு பிரசவத்திற்காக மருத்துவமனை செல்ல வேண்டும், கடும் மழை பெய்து கொண்டிருக்கிறது ஆனால் மாரிமுத்துவால் வாடகைக்கு கார் எடுத்து மனைவியை மருத்துவமனைக்குச் செல்ல முடியாத ஒரு சூழல், தன்னுடைய இருசக்கர வாகனத்தில் மனைவியை மலையில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்து இரண்டாவது குழந்தை பிறக்கிறது.
மருத்துவமணையில் 9 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும், இந்த தகவல் அறிந்த எஸ் ஜே சூர்யா மருத்துவமனைக்குச் சென்று மருத்துவமனையில் 11 ஆயிரம் ரூபாய் மரிமுத்துவுக்கு கொடுத்துள்ளார். ஆரம்பத்தில் பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மாரிமுத்து இயக்குனராகம் முயற்சியில் இயக்கிய முதல் படம் படுதோல்வியை சந்தித்தது.
உதவி இயக்குனராக மாரிமுத்து பணியாற்றிய போது அந்த படங்களில் மாரிமுத்து எழுதிய வடிவேலுக்கான நகைச்சுவை காட்சிகள் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்து, அந்த காட்சிகளை உருவாக்கியது யார் என சினிமா வட்டாரத்தில் தேடப்படும் அளவிற்கு மாரிமுத்துக்கு வெளிச்சம் கிடைத்தது. அந்த வகையில் வடிவேலுக்காகவே முழு நேர ஒரு காமெடி படத்தை தயார் செய்கிறார், அந்தப் படத்தில் நடிப்பதற்காக வடிவேலுவுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளமும் கொடுக்கப்படுகிறது.
ஆனால் திடீரென்று வடிவேலுக்கு சம்பள பிரச்சனை ஏற்பட அந்த படம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் வடிவேலுக்காகவே உருவாக்கப்பட்ட முழு நேர காமெடி படம் என்பதால், இந்த படத்தில் வேறு யாரும் நடிக்கவும் முடியாது என்கின்ற ஒரு சூழல் காரணமாக அந்த படம் கைவிடப்பட்டது, அடுத்து மாரி முத்து இயக்கிய மற்றொரு படமும் தோல்வி.
இந்த நிலையில் மிஸ்கின் இயக்கத்தில் யுத்தம் செய் திரைப்படத்தின் மூலம் நடிகராக வாய்ப்பு கிடைக்கிறது, மாரிமுத்துக்கு பணம் தேவை உடனே இயக்குனர் கனவை ஓரமாக வைத்துவிட்டு நடிக்க தொடங்குகிறார். யுத்தம் செய் படம் வெளியான பின்பு அடுத்தடுத்து சபல படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்கிறது. இதனால் நடிகராக பிஸியாகிறார் மேலும் அவருக்கு நல்ல சம்பளமும் கிடைக்கிறது.
இப்படி கடுமையான போராட்டத்திற்கு பின்பு இன்று எதிர்நீச்சல் சீரியலில் ஆதி கணேசன் ஆக மாரிமுத்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி, 1500 ரூபாய் சம்பளத்தில் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி மூன்று நாள் சாப்பிட பணம் இல்லாமல் ஊறுகாய் மட்டுமே சாப்பிட்டு மூன்று நாட்கள் இருந்த மாரிமுத்து, இன்று கோடிகளில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார் என்றால் இதற்குப் பின்னணியில் அவரின் 30 வருட போராட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது